சிவாஜி ,எம்.ஜி.ஆர் ஆகிய இரண்டு பெரும் ஆளுமைகளுக்கு பாட்டு எழுதியவர் கவியரசு கண்னதாசன். ஒரு படத்தில் சிவாஜிக்கு எழுத்ய பாட்டு சிறப்பாக இருக்கும். அடுத்து எம்.ஜி.ஆரின் படப்பாடல்கள் அதை விடச் சிறப்பாக இருக்கும். ச்டுத்து வெளியாகும் சிவாஜி படப்பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும். சிவாஜி.எம்.ஜி.ஆர் என்ற அந்தஸ்து பார்க்காமல் தனது திறமையை வெளிப்படுத்தியவர் கண்ணதாசன்.
"பாகப்பிரிவினை" படத்துக்கு தாலாட்டுப் பாடல் வேண்டும் என பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திடம் பீம்சிங் கேட்டார். தாலாட்டுப்பாடல் எழுதுவதில் கண்ணதாசன் கில்லாடி அவரிடம் போகுமாறு பட்டுக்கோட்டை கூறினார். பட்டுக்கோட்டையின் மீது மிகுந்த பற்று வைத்திருந்த கண்ணதாசன் தன்னிடம் வந்த சிலரை பட்டுக்கோட்டைக்கு அனுப்பினார். ஒரு படத்தின் அனைத்துப் பாடல்களையும் நான் தான் எழுதுவேன் என அவர்கள் அடம் பிடிக்கவில்லை.
சிவாஜிக்கும் கண்ணதாசனுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதால் சிவாஜியின் படங்களுக்கு கண்ணதாசன் பாட்டு எழுதுவதில்லை. சுமார் இரண்டு வருடங்களாக நடக்காத ஒரு சம்பவம் இப்போது நடைபெற வேண்டும் என பீம்சிங் நினைத்தார். சிவாஜியின் படத்துக்கு கண்ணதாசன் பாட்டு எழுதாததற்கும், சிவாஜியின் வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பன அனுபவத்துக்கும் பீம்சிங்கும் ஒரு காரணம். அதற்கு பரிகரம் செய்ய வேண்டும் என பீம்சிங் நினைத்தார். தனது இணைத் தயாரிப்பாளரான ஜி.என்.வேலுமணியிடம் இந்தப் பிரச்சினையைக் கூறினார். இது ஒரு சின்ன விசயம் கண்ணதாசனிடம் இருந்து பாட்டை வாங்கலாம் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கண்ணசாசனின் வீட்டுக்குச் சென்ற ஜி.என்.வேலுமணி , தனது படத்துக்குப் பாட்டு எழுத் வேன்டும் என்றார். வேலுமணியும்,பீம்சிங்கும் இணைந்து தயாரிக்கும் படத்தின் கதாநாயகன் சிவாஜி என்பது கண்ணதாசனுக்கூத் தெரியும். அதனால்,
"சிவாஜி படத்துக்கு பாட்டெழுத என்னைக் கூப்பிடறியா?" எனக் கோபத்துடன் கேட்டார். சிவாஜிக்கும், கண்ணதாசனுக்கும் பிரச்சினை எனப்தால் சுமார் இரண்டு வருடங்களாக சிவாஜி நடிக்கும் படத்துக்கு கண்ணதாசன் பாட்டு எழுதவில்லை. வேலுமணி நீண்ட நேரம் வேண்டுகோள் விடுத்தும் கணதாசன் இறங்கி வரவில்லை. அப்போது கண்ணதாசனின் உதவியளாராக பஞ்சு அருணாசலம் இருந்தார். நீஎன்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது சிவானி படத்துக்கு கவிஞர் பாட்டு எழுத வேண்டும் என பஞ்சு அருணாசலத்திடம் சொல்லிவிட்டுப் போனார்.
1956-ம் ஆண்டு தமிழ்நாட்டைத் தாக்கிய கடும் புயலில் இயல்பு வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு தடுமாறிக் கொண்டிருந்த தமிழக மக்களுக்கு உதவுவதற்காக எல்லோரும் புயல் நிவாரணத்திற்கு நிதி வசூல் செய்து தாருங்கள் என்று அண்ணா அறிக்கை விட்டார்.
அப்போது சிவாஜி கணேசன் திராவிட முன்னேற்றக் கழகத்திலே உறுப்பினர் இல்லை என்றாலும் அறிஞர் அண்ணா மீது மிகுந்த பாசம் கொண்டவராக இருந்தார். ஆகவே அண்ணாவின் அறிக்கையைக் கட்டளையாக ஏற்றுக் கொண்டு விருதுநகர் வீதிகளிலே அலைந்து ‘பராசக்தி’ பட வசனங்களை எல்லாம் பேசி நிதி சேர்த்தார். பின்னர் அந்தத் தொகையை அறிஞர் அண்ணாவிடம் சேர்க்கச் சொல்லி அனுப்பி விட்டு சேலத்திலே நடைபெற்றுக் கொண்டிருந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சிவாஜி சேலத்திற்கு போய்விட்டார்.
அவர் அங்கே படப்பிடிப்பில் இருந்தபோது புயல் நிவாரண நிதிக்கு அதிகமாக நிதி வசூலித்துத் தந்தவர்களுக்கு சென்னையில் ஒரு பாராட்டு விழாவை அறிஞர் அண்ணா நடத்த இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது.
உண்மையில் அந்த புயல் நிவாரண நிதிக்கு அதிகமாக நிதி சேர்த்துத் தந்தவர் சிவாஜிதான் என்பதால் அந்த விழாவிலே கலந்து கொள்ள நிச்சயம் தனக்கு அழைப்பு வரும் என்று எதிர்பார்த்து சேலத்திலே காத்துக் கொண்டிருந்தார் சிவாஜி. ஆனால் விழா நாள் அன்று காலைவரை அவருக்கு அழைப்பு வரவில்லை.
மாலை ஆறு மணிக்கு பாராட்டுக் கூட்டம் நடந்தது. அப்போதுதான் முதன்முதலில் எம்.ஜி.ஆரைக் கூட்டிச் சென்று அந்த கூட்டத்திலே மேடையேற்றி கெளரவித்தார்கள்.அதிகமாக நிதி வசூலித்தவன் நான். ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களை அந்த கூட்டத்திலே மேடை ஏற்றிப் பாராட்டுகிறார்கள்.
“எங்கே கணேசன் வரவில்லையா?” என்று அண்ணா கேட்டபோது “இல்லை.. வர முடியவில்லை என்று சொல்லி விட்டார்” என்று அண்ணாவிடம் சிலர் சொல்லியிருக்கிறார்கள். அப்போது அண்ணாவைச் சுற்றியிருந்த சிலர் அண்ணாவிடமிருந்து சிவாஜியைப் பிரிப்பதற்காகச் செய்த அரசியலால் வெற்றி பெற்றது. அன்று நடந்த அந்தச் சம்பவம் சிவாஜியைப் பெரிதும் பாதித்தது. நான் எல்லா அவமதிப்பையும் பொறுத்துக் கொண்டு பொறுமையாக இருக்க முயன்றார், முடியவில்லை. அந்த நிகழ்ச்சியால் பைத்தியம் பிடித்தவன் போல் ஆகிவிட்டார்.ஏனென்றால் சின்னப் பிள்ளையிலிருந்து அந்த இயக்கத்திலே ஒட்டிக் கொண்டிருந்தவர் சிவாஜி.
என்னைத் தூக்கிப் போட்டுவிட்டு அண்ணன் எம்.ஜி.ஆரைக் கொண்டு வந்தார்கள். ஆனால் அன்று நடந்த அந்த சம்பவத்துக்கு அண்ணன் எம்.ஜி.ஆர். காரணமில்லை.“ என்று சுயசரிதை நூலில் மன வேதனையை விரிவாகப் பகிர்ந்து கொண்டுள்ளார் சிவாஜி. சிவாஜியை அழைத்தார்.
அந்த சம்பவத்தைத் தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேலாக பைத்தியம் பிடித்தவர் போல சிவாஜி உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்த இயக்குநர் ஏ.பீம்சிங் , அவரை திருப்பதிக்கு வரும்படி அழைத்தார். சிவாஜி மறுத்தபோதும் விடாது வற்புறுத்திக் கூட்டிச் சென்றார் பீம்சிங். திருப்பதிப் பயணம் தன் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தும் என விவாஜி எதிர்பார்க்கவிலை. திராவிட முன்னேற்றக் கழகத்துடனான அ தொடர்பை திருப்பதிப் பயணம் துண்டித்துவிட்டது.
திருப்பதி கோவில் வாசலில் சிவாஜியைப் பார்த்த ஒரு பத்திரிகை நிருபர் தனது பத்திரிகைக்கு அந்தச் செய்தியைத் தெரிவிக்க சிவாஜி திருப்பதியிலிருந்து சென்னைக்குத் திரும்பியபோது “நாத்திக கணேசன் ஆத்திகனாக மாறினார்” என்று பத்திரிகைகள் தலைப்புச் செய்தியாக சிவாஜி திருப்பதி சென்றதைப் பற்றி செய்தி வெளியிட்டிருந்தன. திராவீட மூன்னேற்றக் கழகத்தினரும் சிவாஜிக்கு எதிராகக் கோஷம் எழுப்பினர்.
அப்போது சிவாஜிக்கும், கவிஞர் கண்ணதாசனுக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்ற போதிலும் சிவாஜி திருப்பதிக்கு சென்றதை அவரால் ஏஎற்றுக்கொள்ள முடியவில்லை. தன்னுடைய “தென்றல்” பத்திரிகையில் சிவாஜியைத் தாக்கி எழுதினார். தாக்கி எழுதினார் கண்ணதாசன்.
சிவாஜி படுகுழியில் புதைந்திருப்பதைப் போன்ற ‘தெனாலிராமன்’ படத்தின் புகைப்படத்தைப் பத்திரிகையிலே வெளியிட்டு அதற்குப் பக்கத்திலே “கணேசா இதுதான் உன்னுடைய எதிர்காலமா?” என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதைப் பார்த்த சிவாஜி அளவில்லாத ஆத்திரம் அடைந்தார்.
வாகினி ஸ்டுடியோவுக்கு கண்ணதாசன் சென்றபோது, ஆத்திரத்தோடு தன்னுடைய படப்பிடிப்பு தளத்திலிருந்த சிவாஜி வெளியே ஓடினார். சிவாஜியின் ஆத்திரத்தைக் கண்ட கண்ணதாசன் அவருடைய கையில் சிக்கினால் நிச்சயம் பிரச்னைதான் என்ற பயத்தில் அருகில் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பு தளத்திற்குள் ஓடிவிட்டார்.அங்கேயும் அவரை விடாமல் துரத்தினார் சிவாஜி. சிவாஜியை அமைதிப்படுத்திய என்.எஸ்.கிருஷ்ணன் கைகலப்பைத் தவிர்த்தார்.
சிவாஜிக்கும், கண்ணதாசனுக்கும் இடையே நடந்தது வெறும் வாக்குவாதம்தான் என்ற போதிலும் மறுநாள் எல்லா பத்திரிகைகளிலும் சிவாஜி, கண்ணதாசன் ஆகிய இருவரும் செருப்பால் அடித்துக் கொண்டு சண்டை போட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.சிவாஜியை மிகவும் கடுமையாகத் தாக்கி கண்ணதாசன் விமர்சித்திருந்த போதிலும் தன்னுடைய படங்களுக்கு பாட்டெழுத கண்ணதாசனை பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று சிவாஜி தன்னுடைய தயாரிப்பாளர்கள் எவரிடமும் கூறவில்லை.ஆனாலும் அவர்கள் இருவருக்கும் கடுமையான மோதல் நடந்ததாகப் பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் பார்த்த சிவாஜி படத் தயாரிப்பாளர்கள் கண்ணதாசனை தங்களது படங்களில் தவிர்க்கத் தொடங்கினார்கள்.1957-ம் ஆண்டிலும் 1958-ம் ஆண்டிலும் சிவாஜி நடித்த படங்களில் ‘அம்பிகாபதி’ படம் தவிர சிவாஜி நடித்த வேறு எந்த படத்திலும் கண்ணதாசனின் பாடல்கள் இடம் பெறவில்லை.
வேலுமணி போனதும் கண்ணதாசனிடம் இது பற்றி தயங்கித் தயங்கி பஞ்சு அருணாசலம் கதைத்தார். பலவருடப்பகை உடனடியாகத் தீர்க்க முடியாதுஎன்ற அவ நம்பிக்கையுடன் பஞ்சு அருணாசலம் கதைக்கத் தொடங்கினார். " சிவாஜி படத்துக்கு பாட்டெழுத நாம தேடிப்போகலை. அவங்கதான் நம்மைத் தேடி வந்தாங்க. பாட்டெழுதுவதில் தப்பில்லை" என பஞ்சு அருணசலம் சொன்னார்.
" சிவாஜியை கேட்டுட்டு வந்தாங்களா இல்லையான்னு தெரியாது. நம பாட்டைக் குடுக்க. சிவாஜி வேணாண்ணா யாருக்கு அவமானம். " என கண்ணதாசன் திருப்பிக் கேட்டார்.
" உங்களுக்கும், சிவாஜிக்கும் உள்ள பிர்ச்சினை தமிழகம் பூரா தெரியும். கேக்கம வந்திருக்க மாட்டாங்க" என பஞ்சு அருணாசலம் பதிலளித்தார்.
பஞ்சு அருணாசலத்தின் நச்சரிப்பினால் சிவாஜியின் படத்துக்குப் பாட்டெழுத அரை மனதுடன் கண்ணதாசன் சம்மதித்தார். முதல் பாடல்" ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?" தொடர்ந்து "தங்கக்த்டிலே ஒரு குறை இருந்தாலும் த்ரத்தினில் குறைவதுண்டோ" , "தாளையாம் பூ முடித்து தடம் பாத்து நடை நடந்து" முத்தான மூன்று பாடல்களும் இன்றைக்கும் மனதை விட்டு அகலாதவை.
ஒரு நாள் இரவு மூன்று பாடல்களையும் எம்.எஸ்.விஸ்வநாதன் சிவாஜியின் வீட்டில் போட்டுக் காட்டினார். அவற்றைக் கேட்டு பரவசமான சிவாஜி உடனடியாக கண்ணதாசனைப் பார்க்க வேண்டும் என்றார்.
சிவாஜியின் வீட்டில் இருந்து கண்ணதாசனின் வீட்டுக்கு ஒரு கார் சென்றது. காரில் இருந்து இறங்கிய எம்.எஸ்.விஸ்வநாதன் கண்ணதாசன் பார்த்தார். "சிவாஜி உங்களைப் பார்க்க விரும்புகிறார். உடனடியாகப் புறப்படு" என விஸ்வநாதன் சொன்னதை கவிஞரால் நம்பமுடியவில்லை.அதிர்ச்சியும், ஆச்சரியமும் நீங்காத நிலையில் இருந்த கண்ணதாசன் காருக்குள் ஏறினார். பஞ்சு அருணாசலமும் கூடச் சென்றார். வாசலில் காத்திருந்த சிவாஜி ஆரக்கட்டித்தழுவி வரவேறார். அந்தக் கணத்தில் இருவர் மனதிலும் இருந்த பகை மறைந்தது. இரவு இரண்டு மணிவரை பல விசயங்களை மனம் விட்டுப் பேசினார்கள். பீம்சிங்கினால் உருவான பிரளயம் பீம்சிங்கினாலே தீர்க்கப்பட்டது.
No comments:
Post a Comment