Monday, June 20, 2022

ஜனாதிபதித் தேர்தலைக் குறிவைக்கும் இந்திய அரசியல் கட்சிகள்

இந்திய ஜனாதிபதித் தேர்தல்  வரும் ஜூலை 18ஆம் திகதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இந்திய ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

 நாடாளுமன்ற  உறுப்பினர்கள், சட்டமன்ற உறூப்பினர்கள் ஆகியோர் வாக்ளித்து ஜனாதிபதியத் தேர்ந்தெடுப்பார்கள். 51 சதவீத வாக்குகள்  பெறுபவரே ஜனதிபதியாக முடியும். மத்தியில்  ஆளும் பாரதீய ஜனதாவின் தலைமையிலான கூட்டணிக்  கட்சிக்கு   அனைத்து எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களின் வாக்குகளில் 48.9 சதவீத வாக்குகள்  உள்ளன. எதிர்க் கட்சிகளும் ஆதரவு தரும் ஒருவரை நிறுத்த பாரதீய ஜனதா  முயற்சி செய்கிறது.

 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் வாக்களித்து  இந்திய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பார்கள்.  தலைவர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியாக 4,809 உறுப்பினர்கள் உள்ளனர், இதில் 233 பேர் ராஜ்ய சபா உறுப்பினர்கள், 543 பேர் மக்களவை உறுப்பினர்கள் ,தவிர 4,033 அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

ஜனாதிபதித்  தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்தையும் பொறுத்து எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு மாறுபடும். மாநிலங்களவை எம்பி, மக்களவை எம்.பிக்களின் வாக்குகளின் மதிப்பு மாறாது. மாநிலத்தில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பு மாறுபடும். இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 208. தமிழ்நாட்டில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 176. சிக்கிம் மாநிலத்தில் ஒரு எம்.எல்.ஏவின் வாக்கு மதிப்பு 7 ஆகும்.

குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற 50க்கும் அதிகமான சதவிகித வாக்குகளைப் பெற வேண்டும். பா.ஜ.க கூட்டணி பெரும்பான்மை பலத்தோடு வெற்றி பெறுவதற்கு 20,000 வாக்குகள் குறைவாக உள்ளது. பாஜக நிறுத்தும் வேட்பாளரை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்க அக்கட்சிக்கு மற்ற கட்சிகள் சிலவற்றின் ஆதரவு தேவைப்படும்.

ஜனாதிபதியைத்  தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் தமிழகத்தில் உள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு 176. நாடு முழுவதும் ஒரு எம்.பிக்கு ஒட்டு மதிப்பு 700 ஆகும். தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு 41,184 ஆகும். இந்த   தேர்தலில் வாக்களிக்கும் தமிழகத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிகளின் மொத்த வாக்கு மதிப்பு 76,378 ஆகும்.

காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 18 எம்.எல்.ஏக்கள் மற்றும் 8 எம்.பிக்கள் இருப்பதால் அக்கட்சியின் வாக்கு மதிப்பு 9,468 ஆக உள்ளது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் சேர்த்து 3,504 வாக்குகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2,104 வாக்குகளும் உள்ளன. ம.தி.மு.க 700 வாக்குகளைக் கொண்டுள்ளது.பாரதிய ஜனதாவின் வேட்பாளருகு எதிராக  இந்தா வாக்குகள் மாறும் நிலையில் உள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்ரக் கழகத்துக்கு  66 எம்.எல்.ஏக்களும், 6 எம்.பிக்களும் உள்ளனர். ஜனாதிபதித் தலைவர் தேர்தலில் அக் கட்சியின்  மொத்த வாக்கு மதிப்பு 15,116 ஆக உள்ளது. பா.ம.கவுக்கு 1,508 வாக்குகள் உள்ளன. ஒரு எம்.பி பதவியை கொண்டுள்ள த.மா.காவுக்கு 700 வாக்குகள் உள்ளன.  இந்த வாக்குகள் அனேகமாக பாரதீய ஜனதாவுக்கு செல்லும் சாத்தியம் உள்ளது.

பாரதீய ஜனதா  தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 49 சதவிகித வாக்குகளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 23 சதவிகித வாக்குகளும் உள்ளன. பாரதீய ஜனதாவும் வும் அதன் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தாலே வெற்றி பெற்றுவிடலாம் என்றாலும் கூடுதலாகச் சில கட்சிகளின் ஆதரவும் வேண்டும் என்ற சூழல்தான் இருக்கிறது. அதே நேரம் பொது வேட்பாளரை அறிவித்துஜனதிபதித்  தேர்தலிலேயே வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவர். திரவிட முன்னேற்றக் கழகம் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் என்ற செய்தி கடந்த சில வாரங்களாக பரபரப்பாகப் பேசப்பட்டது. வெங்கையா நாயுடு , திராவிட முன்னேற்றக் கழகத்துடன்  மிக நெருக்கமாகச் செயற்பட்டார். அரசியல் அரங்கில் இது பற்றி பரவலாக  அலசப்பட்டது. பாரதீய ஜனதா தனது நிலையை மாற்ரி விட்டது போல் தெரிகிறது.

பட்டியலினத்தவர்களுக்கு எதிராக இருப்பதாக விமர்சனம் எழுந்ததால் கடந்த முறை அச்சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவித்தது. அதேபோல இந்த முறை இந்த முறை பழங்குடியினர் சமூகத்திலிருந்து ஒருவரைக் ஜனதிபதியாக்கலாம் என பா.ஜ.க நினைக்கிறது. அதேபோல சிறுபான்மையினருக்கு எதிராக பாரதீய ஜனதா  செயல்படுகிறது எனவும் இப்போது விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அந்தக் கட்சியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்த கருத்து சர்வதேச அளவில் அக்கட்சிக்குச் சிக்கலை ஏற்படுத்தியது. இதனால் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒருவரை ஜனாதிபதியாக்கலாம் ன்ற திட்டமும் அக்கட்சியிடம் இருக்கிறது.

வாஜ்பாய் காலத்தில் அப்துல் கலாம் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டன. அதுபோன்று தற்போது பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்த   எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கிறது.  காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவைக் குழு தலைவரான மல்லிகார்ஜுன கார்கே இதுகுறித்து அனைத்து எதிர்க்கட்சிகளுடன் பேசுமாறு சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.மல்லிகார்ஜுன கார்கே எதிர்க்கட்சியை தலைவர்களைத் தொடர்புகொள்ளத் தொடங்கிவிட்டார். தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோருடன் சோனியா தொடர்பு கொண்டு பேசியதாகவும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. இப்போது அமைக்கும் கூட்டணி மக்களவைத் தேர்தலிலும் தொடர வேண்டும் என்ற கணக்கில் காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது.

வழக்கம் போல மம்தா பானர்ஜி தனி வழியில் செயற்படுகிறார்.  இதனால் எதிர்க் கட்சிகளின் பலம்  குறையும்  சாத்தியம்  உள்ளது.  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் குடியரசுத் ஜனாதிபதித் தேர்தல்  ஆலோசனை நடத்த டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராக வலிமையான கூட்டணி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தனது பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அதற்கு முன்னோட்டமாகவே ஜனாதிபதித்  தேர்தலை அக்கட்சி பார்க்கிறது. மூன்றாவது அணி அமையவிடாமல் தடுத்து இரு பக்கமும் சாராத கட்சிகளை இப்போதே தங்கள் பக்கம் நகர்த்தும் வேலையிலும் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. பழைய சம்பவங்களினால் உஷாரான காங்கிரஸ் திட்டமிட்டு காய் நகர்த்துகிறது. மம்தா பார்னஜியின் செயற்பாடு பாரதீய ஜனதாக் கட்சிக்கு   உற்சாகமூட்டுவதாக உள்ளது.

No comments: