ஸ்பெயின் பாம்ப்லோனாவில் நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் ஈஸ்டோனியாவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 33 போட்டிகளில் தோல்வியடையாமல் சாதனை புரிந்துள்ளது ஆர்ஜென்ரீனா . ஐந்து கோல்களையும் லியோனல் மெஸ்ஸி அடித்தார். இடைவேளைக்கு முன்பு இரண்டு கோல்களை அடித்த லியோனல் மெஸ்ஸி இடைவேளைக்குப் பிறகு ஹட்ரிக் கோல்கள் அடித்தார்.
பார்சிலோனாவுக்காக மெஸ்ஸி
ஒரே போட்டியில்ஐந்து கோல்களை அடித்துள்ளார்
அந்த போட்டியில் பார்சிலோனா 7௧ என்று வெற்றி பெற்றது. ஆனால் தன் நாட்டு அணிக்காக இப்போதுதான்
ஐந்து கோல்களை அடிக்கிறார் மெஸ்ஸி. இதுவரை 162 போட்டிகளில் 86 கோல்களை அடித்துள்ளார்
மெஸ்ஸி.
முதல் கோல் பெனால்டி கிக்கில் அடித்தார் மெஸ்ஸி. பிறகு ஆஃப் டைமிற்கு முன்னால் ஒரு கோல் அடித்து, ஆஃப் டைமிற்குப் பிறகு இரண்டு நிமிடங்களில் இன்னொரு கோல் அடித்தார். இதன் பிறகு 71வது மற்றும் 76வது நிமிடங்களில் மேலும் இரண்டு கோல்கள் அடித்தார். ஹங்கேரி கிரேட் பிளேயர் பெரெங்க் புஸ்காசின் 84 கோல்கள் சாதனையை முறியடித்தார்.
மெஸ்ஸி இப்போது சர்வதேச அரங்கில் கோல்கள் எண்ணிக்கையில் 4ம் இடத்தில்
உள்ளார். மலேசியாவின் மோக்தர் தஹாரி 89 கோல்களுடன் 3ம் இடத்தில் உள்ளார். ஈரானின் அலி
டாயி 109 கோல்களுடன் முதலிடம் வகிக்க, ஆல்டைம் கிரேட் கிறிஸ்டியானோ ரொனால்டோ 117 கோல்களுடன்
முதலிடம் வகிக்கிறார்.
கடந்த வாரம் பைனலிஸ்மா இறுதியில் ஐரோப்பிய சாம்பியன் இத்தாலியை
அர்ஜெண்டீனா 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதில் 2 கோல்களை அடித்தவர் லியோனல் மெஸ்ஸி.
கோப்பா அமெரிக்கா கோப்பையை லியோனல் மெஸ்ஸி தலைமையில் ஆர்ஜென்ரீனா வென்று இப்போது கோப்பா சம்பியன்களாகத் திகழ்கின்றனது.
இந்த வெற்றி மூலம் ஆர்ஜென்ரீனா உதைபந்தாட்ட
கால்பந்து அணி அனைத்து வகையான போட்டிகளிலும் தோல்வியடையாமல் 33 போட்டிகளில்
வென்றுள்ளது.
No comments:
Post a Comment