Sunday, June 5, 2022

அதிமுகவை ஓரம்கட்டும் பாரதீயஜனதா

தமிழகத்தில் ஆளும் கட்சியாக திராவிடமுன்னேற்றக் கழகம் இருக்கிறது.   அண்ணா  திராவிடமுன்னேற்றக்கழகம்  சட்ட சபையில் எதிர்க் கட்சியாக  உள்ளது.      சட்டசபைக்கு வெளியே  பாரதீய ஜனதா  எதிர்க் கட்சியாகக் காட்டிக்கொள்கிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்செய்ய வேண்டியவற்றை அளவுக்கு மீறி பாரதீய ஜனதாவின் தமிழகத் தலைவர் அண்ணாமலை  செய்துகொண்டிருக்கிறார்.

கருணாநிதியும், ஜெயலலிதாவும் எதிர்க் கட்சித்தலைவராக இருந்தபோது ஊடகங்களின் பார்வை தம் மீது விழும்படி பார்த்துக் கொண்டார்கள். அந்த வேலையை  தமிழிசை கடைப் பிடித்தார்.

பாரதீய ஜனதாவின் தலைவராக தமிழிசை  இருதபோது ஊடக வெளிச்சத்தில்  தன்னை வெளிப்படுத்தினார் அவரைப்பற்றிய எதிர்மறை விமர்சனங்கள், மீம்ஸ்கள் எவற்றையும் பொருட்படுத்தாமல் வலம் வந்தார். எல். முருகன் தலைவரானபோது வேல்யாத்திரை சென்று தன்னை வெளிப்படுத்தினார். கொரோனா காலத்தில் நாடு முடங்கி இருந்தபோது அரசியல் நடத்தியவர் முருகன்.

அண்ணாமலை தலைவரானதும் அரசியல் நாகரீகம் காணாமல் போய்விட்டது.பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர்களை ஓரம் கட்டிவிட்டு தனக்கென  ஒரு குழுவை உருவாக்கியுள்ளார். தினம் ஒரு அறிக்கை.  மிரட்டல்  என அரசியலை வேறு ஒரு திசைக்குக் கொண்டுபோகிறார். எதிர்த்துக் கேள்வி கேட்கும்  ஊடகவியலாளர்களை காசுக்காக எழுதுபவரென தூற்றுகிறார். அண்ணாமலையின் அரசியல்  அனைவரையும் முகம் சுழிக்க வைக்கிறது.

தமிழகத்தின்  எதிர்கட்சி பாரதீய ஜனதாதான் என அண்ணாமலை சொல்வது அண்ணா திராவிட முன்னேற்றக் கழ‌கத்தை கொதிப்படைய வைத்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்ததால்தான்பாரதீய ஜனதாவுக்கு நான்கு உறுப்பினர்கள்  கிடைத்தனர். அப்படி இருந்தும் அண்ணாமலை படுதோல்வியடைந்தார் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தை பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் என அண்ணாமலை சொல்கிறார். தமிழகத்தில் இருந்து 25  எம்பிக்களை பாரதீய ஜனதா அனுப்பும் என சபதம் செய்கிறார்.

தேர்தல் வாக்குறுதிய திராவிட முன்னேற்றக் கழகம் நிறை வேற்ற வேண்டும் இல்லையேல் போராட்டம்,  டீசல், பெற்றோல்  விலையைக் குறைக்க கால அவகாசம் போன்ற அதிரடிகளால் நடுநிலையாலர்களே அண்ணாமலையை வெறுப்புடன்  நோக்குகிறார்கள். மான நஷ்ட ஈட்டு வழக்குத் தொடர்ந்ததும் தன்னிடம் பனம் எதுவும் இல்லை இரண்டு ஆடுகள் மட்டுதான் உள்ளன  வாக்கு மூலம்  கொடுத்தார். அண்ணாமலைக்கு எதிரான  காய் நகர்த்தல் கட்சிக்குள்ளேயே  நடைபெறுகிறது.

தமிழகத்தில் பாரதீய ஜனதா பல்வேறு போராட்டங் களை அறிவித்து தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகம்  சுணங்கியிருப்பதாக பொதுவாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.ச‌ட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சுணங்கியிருந்த நிலையில், பாரதீய ஜனதாவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கட்சிப் பணிகளை வேகப்படுத்தி, பிரதான எதிர்க்கட்சியைப் போல செயல்பட்டு வருகிறார்.

 திராவிட முன்னேற்றக் கழக அரசின் ஒவ்வொரு முடிவுக்கும் உடனடி எதிர்வினை, பத்திரிகையாள‌ர் சந்திப்பு  என  சுறு  சுறுப்பாக வலம் வருகிறார். இது மக்கள் மத்தியிலும் கவனத்தை பெற்று வருகிறது.   பாரதீய ஜனதா தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், எதிர்க் கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படவே இல்லை என்று அக்கட்சியின் தொண்டர்களே புலம்பும் நிலை இருக்கிறது. இதுகழகத்தின் மூத்த தலைவர்கள்  மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் வெளிப்பாடாகவே  மூத்த தலைவரான‌ பொன்னையன், பாஜக அதிமுகவை விழுங்கிவிடும் என எச்சரிக்கும் வகையில் பேசினார். அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஜெ. பேரவை கூட்டத்தில் இந்த விவகாரம் சூடாக விவாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது வேகமாகச் செயல்படுவது காலத்தின் தேவை என  முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சகல அரசியல் கட்சிகளும் தேர்தலை முன்னிறுத்தி அரசியல் செய்தால், பாரதீய ஜனதா  மட்டும் தேர்தலுக்கு பிந்தைய அரசியலையே பிரதானமாக கையில் எடுக்கும். இந்த டெக்னிக் அந்த கட்சிக்கு பெருமளவு உதவி புரிந்தும் வருகிறது தேர்தல் சமயத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது, பதவி, பொறுப்புகளை காட்டி தங்கள் பக்கம் இழுப்பது போன்ற சூட்சுமங்களை கையாளும்.  பிறகு, அந்த தேர்தலின் முடிவில் பிரதான கட்சிக்கு பெரும்பானை  இல்லாமல் செய்துவிடும்.. அதன்பிறகு, ஆட்சியில் பங்கு, கூட்டணி என்று ஆட்சியில் பங்காளியாகும்.

 வடமாநிலங்கள் சமீபகாலமாகவே பெரும்பாலான வடமாநிலங்களில் இப்படித்தான் பாரதீய ஜனதா  ஆட்சியை பிடித்து வருகிறது என்பதை நாடறியும்.  இதே ஃபார்முலாவைதான் புதுச்சேரி பக்கம் இரன்டு வருடங்களுக்கு முன்பு கையில் எடுத்தது. வழக்கம்போல் கூட்டணி ஆட்சியையும் பிடித்துவிட்டது.. இப்போது தமிழகத்தின் பக்கம் கவனத்தை டெல்லி மேலிடம் திருப்பி உள்ளது.. விரைவில் எம்பி தேர்தல் வர உள்ள நிலையில், அதற்கான காய்நகர்த்தல்களை இப்போதே துவங்கி விட்டது.

.  அதிருப்தியாளர்களை கட்டம் கட்ட துவங்கி விட்டது பாரதீய ஜனதா.   முதலில் குறி வைத்தது பாட்டாளி மக்கள் கட்சிமீது  விழுந்துள்ளது.. நடந்து முடிந்த தேர்தல்களில் சறுக்கலை சந்தித்து வரும் பாமக, வடமாநிலங்களிலேயே தன் செல்வாக்கை இழந்து வருவது அக்கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.. இதையடுத்துதான், அங்குள்ள புள்ளிகளுக்கும் வலை வீசுகிறது பாரதீய ஜனதா.  பாமக முன்னாள் எம்எல்ஏக்கள், வன்னியர் சங்க நிர்வாகிகள் என ஏகப்பட்ட பேர் பாஜகவில் ஏற்கனவே இணைந்துவிட்டனர். மத்திய அரசில் பாட்டாளி மக்கள் கட்சியும்,  பாரதீய ஜனதாவும் ஒரே கூட்டணியில் உள்ளன.   கூட்டணி தர்மம் எதனையும் பாரதீய ஜனதா பின்பற்றவில்லை.

 அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ கூட்டணியில்   பாரதீய ஜன‌தாக் கட்சி    உள்ளது. அண்ணா திராவிட முனேற்ற‌க் கழ‌கத்தின் தலைமை சரியில்லை. அதனால்தான் தலை இருக்க வால் ஆடுகிறது.

 

No comments: