Monday, June 13, 2022

திமுகவை எதிர்க்க போட்டிபோடும் தமிழகக் கட்சிகள்

தமிழக முதல்வராக  ஸ்டாலின்  பொறுப்பேற்று ஒரு வருடம் கடந்துவிட்டது. பொறுப்பான எதிர்க் கட்சியாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செயற்படாமல்  இருக்கிறது. அந்த இடத்தை பிடிப்பதற்கு அண்ணாமலை மிகுந்த ஆர்வமாக இருக்கிறார். 

அரசியல் அதிரடி என்ற பெயரில் அண்ணாமலை தினமும் ஏதாவது ஒரு அறிக்கை  வெளியிட்டு தன்னை முன்னிலைப் படுத்துகிறார். இதனால் பரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்கள் அண்ணாமலையின் மீது மிகுந்த கடுப்பில் இருக்கிறார்கள். தமிழக அர்சின்  ஊழல்களைத் தினமும்  வெளியிடப்போவதாக அண்ணாமலை அறீவித்தது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.  டெண்டர் விடப்ப்டாத திட்டத்தில் ஊழல் என்ற அண்ணாமலையின் அறிக்கை புஸ்வாணமாகியது.

அண்ணாமலையின் அதகளம் தாங்கமுடியாத அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க் கட்சி என்ற வகையில் போராடத் தீர்மானித்துள்ளது.

அதமிழகத்தின் அடுத்த முதல்வர் அன்புமணி என்ற கோஷத்துடன் பாட்டாளை மக்கள் கட்சி களத்தில் இறங்கி உள்ளது. அடுத்த முதல்வர் அன்புமணி என்ற கோஷம்  மிகவும் பழமையனது. அந்த முயற்சி பலிக்காது என்பதை தேர்தல் தோல்விகள் உணர்த்தியதால், மீண்டும் கூட்டணிப் பக்கம் பாட்டளி மக்கள் கட்சி சென்றது. கட்சியின் தலைவராக அன்புமணி கிரீடம் சூட்டப்பட்டதும், எதிர்க் கட்சியின் இடத்தைப் பிடிக்க பாட்டாளி மக்கள் கட்சி முயற்சிக்கிறது.

பத்து ஆண்டுகள் ஆட்சியிலிருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் காழகத்துடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பாட்டளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதக் கட்சி  ஆகியன   அடுத்த தேர்தல் குறித்து வெளிப்படையாகப் பேசுவதால் சட்டமன்றத்துக்கான தேர்தல் அனல் தற்போதே வீசத் தொடங்கிவிட்டது. குறிப்பாக மூன்று கட்சிகளுமே திராவிட முன்னேற்றக் கழக்த்துக்கு  மாற்று நாங்கள்தான் என்று அறைகூவல் விடுவதுதான் கூடுதல் கவனம் பெறுகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு இல்லை என்றால் பாட்டாளி மக்கள் கட்சியும், பாரதீய ஜனதாக் கட்சியும் வெற்றி பெற்ருரும்ம முடியாது. இந்த உணமையைத் தெரிந்துகொண்டும் அண்ணா திராவிட முனேற்றக் கழகத்தைப் புறம் தள்ள  இரண்டு கட்சிகளும் துடிக்கின்றன.

இதேவேளை வடக்கு மாவட்டங்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு வங்கியும் ஒரு காரணம். பாரதீய ஜனதாவால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எந்த விதமான இலாபமும் இல்லை. 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  தனித்துப் போட்டியிட்டது. பாட்டாளி மக்கள் கட்சி, பாரதீய ஜனதா ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன. அப்போது, ஜெயலலிதா பாரதீய ஜனதாவைக் கடுமையாக விமர்ச்சித்து பிரசாரம் செய்தார். ஆனால், இடைத்தேர்தலில் அதே கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, ஆட்சியைத் தக்கவைத்தார்.  இந்தக் கூட்டணி 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும், 2021-ம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் நீடித்தது. ஆனால், எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் கூட்டணியில் முறிவு ஏற்பட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, பாரதீய ஜனத ஆகியன  தனித்துப் போட்டியிட்டன. இந்தத் தேர்தலில்,திர்ராவிட முன்னேற்றக் கழகம் பெருவாரியான வாக்குகளைப் பெற்று நகர்ப்புறங்களை முழுமையாகக் கைப்பற்றியது. பாரதிய ஜனதாவும்   சில இடங்களில் வெற்றியைப் பதிவுசெய்தது. இதனால், தமிழக பாரதீய ஜனதாவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. `சட்டமன்றத்தில் நாங்கள்தான் சரியாக எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறோம்’ என்று பாரதீய ஜனதாவின் உறுப்பினர் ஏ நயினார் நாகேந்திரன் பொது மேடையில் பேசியிருந்தார். அதேபோல,   இரண்டாம் கட்டத் தலைவர்கள் பேசிவருகின்றனர். இதை  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் ரசிக்கவில்லை.

  2026-ம் ஆண்டு  தமிழகசட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து பாட்டாலி மக்கள் கட்சியும், பாரதீய ஜனதாவும் காய் நகர்த்தி வருகின்றன. 2024 ஆம்  ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ்கத்தில் இருந்து 15 எம்பிக்களை பாரதீய ஜனதாக் கட்சி பெறும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். இவை எல்லாம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களுக்கு பெரும் தலைவலியைக் கொடுத்துள்ளன.

ஸ்டாலினின் "திராவிட மொடல்" எனும் சொற்பதம் பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்களைக் கடுப்படைய  வைத்துள்ளது. அதற்கெதிரான பிரசாரத்தை டெல்லித் தலைவர்கள் முதல் தமிழகத் தலைவர்கள் வரை முன்னெடுக்கின்றனர்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் ஒரு படி மேலே போய் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரும் " திராவிட மொடல்"ஆட்சியைத் தந்ததாக அறிவிக்கின்றனர்.  இந்த வரிசையில் சசிகலாவும் சேர்ந்துள்ளார். "திராவிட  மொடல்" அடுத்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்கு வங்கியாக மாரிவிடுமோ  என்ற  அச்சம் அவர்களிடம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் காங்கிரஸை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ந்தது. பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம், எதிர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என மாறியது, 1967 ஆம் ஆண்டின்  பின்னர்இந்த நிலை நீடிக்கிறது இதனை மாற்றி திராவிட முன்னேற்றக் கழகம் எதிர் பாரதீய ஜனதாக் கட்சி என மாற்றமடையும் என தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், கடுப்படைந்த  மூத்த தலவரான பொன்னையன்  காட்டமாக விமர்சன ம் செய்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பாரதீய ஜனதா விழுங்கிவிடும் என்ற அவரது சொல்லாடல் தமிழக அரசிய அரங்கில் அதிர்வலையை  ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டளி மக்கள் கட்சி, பாரதீய ஜனதாக் கட்சி ஆகியவற்றுக்கிடையே புகைந்துகொண்டிருக்கும் இந்த பிரச்சினை அடுத்த தேர்தல்வரை பரபரப்பாக இருக்கும்  அதிக தொகுதிகளுக்கன பிரச்சார உத்தி இது என்பது  ஒன்றும் ரகசியமானது அல்ல.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments: