Sunday, June 5, 2022

தெரிந்த சினிமா தெரியாதசங்கதி 21நடிகர் திலகம் என்றால் அது சிவாஜிதான். அவருடைய பெயர் வி.சி.கணேசன். மராட்டிய மாவீரன் சிவாஜி பாத்திரத்தை ஏற்று நடித்ததால்  கணேசன் என்ற பெயர் மறைந்து    சிவாஜி எனும் பெயர் முன்னிலை பெற்றது.

"பராசக்தி" எனும் படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகனானார். முதல் படமே பெரு வெற்றி பெற்றது. முதல் படமே வெள்ளிவிழாவைக் கடந்து 200 நாட்கள்  ஓடியது. சிவாஜி மட்டும் நடைப்பதில்லை, அவரது உடை, கைத்தடி, தலை முடி என்பனவும் நடிக்கும் என்பார்கள்.  சிவாஜி சிகரெட் புகைக்கும் போது  ஒரு ஸ்ரைல் இருக்கும்  புகைஅயை வெளிவிடுவதிலும் ஒரு நயம் இருக்கும். சிவாஜியின்  திரைப்பட  வெற்றி இலகுவானதாக இருக்கவில்லை.

முதல் படத்திலேயே கதாநாயககனாக நடிக்கும் போது பலத்த அவமானம் ஏற்பட்டது. பராசக்தி ப்டத்தில் கே.ஆர்.ராமசாமி கதாநாயகனாக நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர்  ஏ.வி.மெய்யப்பசெட்டியார் விரும்பினார். சிவாஜியின் உருவமும் வாய் அசைப்பும் அவருக்குப் பிடிக்கவில்லை.  சிவாஜியின் நடிப்பை நாடகங்களில் பார்த்து ரசித்த பெருமாள் முதலியார், சிவாஜியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். மெய்யபச் செட்டியாரின்  கருத்தை அவர் காதில் வாங்கவில்லை. ஒரு சிலர் செட்டியாரை உசுப்பேற்றிக்கொண்டிருந்தனர். அதனால் சிவாஜியின் கவனம் சிதறியது.

படப்பிடிப்பு  நடக்கும் பொழுதெல்லாம் தளத்தில் இருந்தவர்களின் பேச்செல்லாம் சிவாஜியின்  காதுக்குள் விழ மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.இந்தப் படம் தொடருமா?நாம் இதில் நாயகனாக நீடிப்போமா? என்கிற குழப்பம் தினமும் அவருடைய மனதை குடைந்து கொண்டேயிருக்க,படபிடிப்பு முடிந்தவுடன் கண்ணீர் விட்டு அழுதார்.

அவருடைய சுயசரிதையில்,"அந்த நேரத்தில் படப்பிடிப்பு முடிந்த பிறகு, எங்கேயாவது தனியாக உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டிருப்பேன்.பராசக்தி படத்தின் இயக்குனர்களில் ஒருவரான கிருஷ்ணன் அய்யா என்னருகில் வந்து, என் தோளைத் தொட்டு மிகுந்த ஆறுதலுடன் பேசுவார்.

'மற்றவர்கள் பேசுவதையெல்லாம் காதில் வாங்காதே.ஒன் நடிப்புல மட்டும் கவனத்தைக் காட்டு.இன்னும் நல்லா அடி.ஒன்னையை புறக்கணிப்பவர்களே பாராட்டும்படியா நடிப்புலகவனத்த பண்ணு,அவர்களே கூட பின்னாளில் தேடி வரும்படியான காலம் வரலாம்.எதுக்கும் கவலைப்படாதே என்று என்னுடைய தன்னம்பிக்கையை கூட்டும் விதமாக ஆறுதலாக பேசுவார்.

என் தெய்வங்களான பெருமாள் முதலியாரும்,இயக்குநர் கிருஷ்ணன் அவர்களும் இல்லையென்றால்,'பராசக்தி',படத்தில் நான் முழுமையாக நடித்திருக்க முடியாது",என்று சொல்லியிருக்கிறார்.

பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலத்தில்  சிவாஜி பேசிய கலைஞரின் வசனங்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாகப் புகுந்தன. தயாரிப்பாளர்களும்  இயக்குநர்களும் சிவாஜியைத் தேடிச் செல்லத்தொடங்கினர்.  மனோக்ர, திரும்பிப்பார் போன்ற படங்கள் சிவாஜியின்  பெயரை பட்டி தொட்டி எங்கும் எதிரொலிக்கச் செய்தன. சிவாஜியை வேண்டாம் என ஒதுக்கித்தளிய மெய்யப்பச்செட்டியார் இரண்டு வருடங்கள் கழித்து 1954 ஆம் ஆண்டு சிவாஜியைத் தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

"ஒரு நாள்' எனும் பெயரில் ஏவிஎம் ஒரு படத்தைத் தயாரித்தது.    அந்த நாள்  எனும் பெயருடன் அப்படம் வெளியானது. எஸ்.பாலசந்தர் இயக்கத்தில்  அந்தப் படத்தி எஸ்.வி சகஸ்ரநாமம் கதாநாயகனாக நடித்தார்.  ஒரு சில நாட்கள் படபிடிப்பு நடந்தது. அவரை நீக்கிவிட்டு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் எனும் நாடக நடிகரை ஒப்பந்தம் செய்து சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அவரும் சரிவரவில்லை. யாரிப் போடுவது என ஆலோசனை செய்தபோது  சிவாஜி ஞாபகத்துக்கு வந்தார். 

   சிவாஜி ஒத்துக் கொள்வாரா என்கிற சந்தேகம் படக்குழுவிற்கு.'சிவாஜி என்ன சம்பளம் கேட்டாலும் கொடுத்து விடுங்கள்.அவர்,இந்தக் கதாபாத்திரதில் நடித்தால்தான் சரியாக வரும் ',என பிடிவாதமாக நின்றார் தயாரிப்பாளர்.தயாரிப்பு நிர்வாகி வாசுதேவன் சிவாஜியை அணுகினார்.  பழைய சம்பவங்கள் ஞாபகத்துக்கு வந்ததால அதைத் தட்டிக்கழிக்க விரும்பிய சிவஜி, 40,000 ரூப சம்பளமாகக் ஏட்டார்.  1954 ஆம் ஆண்டு  அது மிகப் பெரிய தொகை.  25,000 ரூபா ஒப்பந்தம் கைச்சாத்தானது.  தினமும் 1000 ரூபா கொடுக்க வேண்டும் என சிவாஜி கேட்டார். அதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. வரலாறு திரும்பியது. சிவாஜியை வேண்டாம் என்றவர்கள் சிவாஜி கேட்ட எல்லாத்தையும் கொடுக்கத் தயாராக இருந்தனர். எவிஎம் தயாரிப்பில் வெளியான  "அந்தநாள்' எனும் படம்  மிகப்பெரிய வெற்றி  பெற்றது.   கதாநாயகனாக வளர்ந்து கொண்டிருக்கும் போது எதிர்மறையான பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார் சிவாஜி.

சிவாஜியின்  125-வது படமான ,'உயர்ந்த மனிதன்',படத்தை ஆரம்பிக்கும் பொழுது சிவாஜி நடிக்க வில்லையென்றால் இந்த படமே வேண்டாம் என்று தயாரிப்பாளர் சொல்லும் அளவிற்கு  சிவாஜி வளர்ந்தார்.

அந்த நாள் படத்திலிருந்து துக்கப்பட்ட நடிகர்தான் கல்கத்தா விஸ்வநாதன்.  வேலூரைச் சேர்ந்தவர்.மேற்குவங்காளத்தில் கிடியேறியவர்.சத்யஜித்ரே படங்களிலும் நடித்திருக்கிறார்.மேடை நாடக நடிகர்.கல்லூரிப் பேராசிரியர் என பன்முகத் திறன் படைத்தவர்.

பின்னாளில் சிவாஜிக்கு தந்தையாக கவரிமான் திரைப்படத்திலும்,வெள்ளை ரோஜா திரைப்படத்தில் கொலையாளியாகவும்,மூடுபனி திரைப்படத்தில் பிரதாப் போத்தனுக்கு கார்டியனாகவும்,முன்று முடிச்சு திரைப்படத்தில் ரஜினிக்கு தந்தையாகவும் நடித்துள்ளார்.

No comments: