Tuesday, June 21, 2022

வழக்கறிஞரான முன்னாள் கப்டன்

 கிரிக்கெட் வீரர்கள் பலர் சடுதியில் தங்கள்   முடிவுகளை மாற்றி விடுவார்கள், ஏகலைவா திவேதி என்ற ஒரு விக்கெட் கீப்பர் துடுப்பாட்டவீரர்  இவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். 43 முதல் தர கிரிக்கெட், 36 குறைந்த ஓவர் லிஸ்ட் கிரிக்கெட், 47 ரி20 போட்டிகளில் 2008முதல்ல் 2018 வரை ஆடி திடீரென வக்கீல் தொழிலைத் தேர்வு செய்து இப்போது ரிஷப் பண்ட் தொடர்பான வழக்கு ஒன்றை இவர்தான் கையிலெடுத்துள்ளார்.

அலகாபாத்தில் 1988-ல் பிறந்தவர் ஏகலைவா திவேதி, 2008-ல் விஜய் ஹசாரே டிராபியில் முதன் முதலில் .பி. அணிக்காக அறிமுகமானார். ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் நவம்பர் 2010 இல் ஒடிசாவுக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தை விளையாட, உத்தரப் பிரதேச ரஞ்சி அணியில் இடம்பிடித்தார். 2016 ஆம் ஆண்டில்,   ஏக்லைவா திவேதி சையத் முஷ்டாக் அலி டிராபியில்  9 ஆட்டங்களில் 258 ஓட்டங்கள் எடுத்தார்,

அந்த சீசனில் .பி.க்காக அதிக ஓட்டங்கள் எடுத்தவர். ஒரு நல்ல சீசனின் பின்னணியில், அவர் குஜராத் லயன்ஸிடம் இருந்து ரூ 1 கோடி மதிப்பிலான ஐபிஎல் ஒப்பந்தத்தைப் பெற்றார், அறிமுக சீசனில் 4 போட்டிகளில் விளையாடினார்.

முழுநேர வழக்கறிஞராக தனது கவனத்தை மாற்றுவதற்கு முன், அவர் 43 முதல்தர விளையாட்டுகள், 36 பட்டியல் A மற்றும் 47 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் நீண்ட வடிவத்தில் 3 சதங்கள் உட்பட 3000 ஓட்டங்களுக்கு மேல் அடித்தார். அவர் உத்தரபிரதேசத்துக்காக முதல் தரத்தில் அதிவேக சதம் அடித்தவர், வெறும் 70 பந்துகளில் சதமெடுத்தார். மேலும் 21 பந்துகளில் அதிவேக லிஸ்ட் அரைசதம் அடித்தவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இரண்டும் ரயில்வேக்கு எதிராக.

குஜராத் லயன்ஸ் தவிர, அவர் சென்னை சூப்பர் கிங்ஸ், புனே வாரியர்ஸ் இந்தியா மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகியவற்றில் விளையாடினார்.

இவர் நியூஸ் 18 கிரிக்கெட் நெக்ஸ்ட் ஆன்லைன் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தன் முடிவு குறித்து கூறும்போது, “இது ஒரு கதை. நான் சிறிது காலம் கிரிக்கெட் விளையாடினேன், நீங்கள் அறிந்திருப்பீர்கள். அடிப்படையில், எனக்கு சட்டத்தில் குடும்பப் பின்னணி உள்ளது. வேலை செய்ய எனக்கு ஒரு அடித்தளம் இருந்தது; தொடங்குவதற்கும், கிரிக்கெட்டில் இருந்து சட்டத்திற்கு மாறுவதற்கும் எனக்கு ஒரு நல்ல அடித்தளம் இருந்தது.

கிரிக்கெட் விளையாடுவதன் நோக்கமே நாட்டுக்காக விளையாடுவேன் என்பதுதான். அதற்குள் எனக்கு ஏற்கனவே முப்பது வயதாகிவிட்டதால் வாய்ப்பு  நழுவியது மேலும், எம்எஸ்   இன்னும் விளையாடிக் கொண்டிருந்ததையும் பார்த்தபோது, ரிஷப் பண்ட்டும் இந்திய அணிக்குள் வருகிறார் எனும்போது நம் வாய்ப்பு சீல் வைக்கப்பட்டதாகி விட்டது.

எனவே, எனது தொழில் வாழ்க்கையின் அடுத்த கட்டம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை நான் கணக்கிட வேண்டியிருந்தது. நான் இன்னும் 4-5 வருடங்கள் உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் விளையாடியிருக்கலாம், ஆனால் அப்போது கிரிக்கெட்டில் இருந்து சட்டத்திற்கு மாறுவது எனக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும். இன்னும் நேரம் இருக்கும்போது, நான் என் தொழிலை மாற்றினால்தான் உண்டு என்று மாற்றிவிட்டேன்.

கிரிக்கெட்டுக்குப் பிறகு, நான் அதைச் செய்தேன் (சட்டத்தைத் தொடர்ந்தேன்). நான் இந்தியாவில் இருந்து 2018 இல் எல்எல்பி முடித்தேன். நான் தற்போது சுதந்திரமாக வேலை செய்து வருகிறேன், அதே நேரத்தில் இங்கிலாந்தில் இருந்து சர்வதேச வர்த்தக மற்றும் பெருநிறுவன சட்டங்களில் முதுகலைப் பட்டம் பெற்று வருகிறேன்.

இப்போது ரிஷப் பண்ட்டை ரூ.1.63 கோடி மோசடி செய்தவருக்கு எதிரான வழக்கில் ரிஷப் பண்ட் சார்பாக நான் தான் இறங்கியிருக்கிறேன்என்றார் ஏக்லைவ திவேதி

No comments: