Monday, June 27, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி 24

 தமிழ்த் திரை உலகில் தவிர்க்க முடியாத  பெயர் "பிலிம் நியூஸ்  ஆனந்தன். சினிமா  எனும் கூட்டுக் குடும்பத்தை  உலகுக்கு வெளிச்சம் போட்டிக் காட்டியவர்களில் பிலிம் நியூஸ் ஆனந்தன் முக்கியமானவர்.  சினிமாப்படத் தகவல்கள், புகைப்படங்கள் என்பனவற்றை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறையின் கையில் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமா வரலாற்று நூல்கள் பலவற்றுக்கும் ‘சாதனைகள் படைத்த தமிழ் சினிமா வரலாறு’ என்ற நூல்தான் அடிப்படை ஆவணம். தமிழ்த் திரையின் வரலாற்றுக்கு முக்கிய ஆவணமாக இருக்கும் இந்த நூலை, உழைத்துத் தொகுத்து அளித்தவர் மகத்தான மக்கள் தொடர்பாளர் என்று கொண்டாடப்பட்ட ‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன். தள்ளாத முதுமையிலும் தனது 86-வது வயதுவரை திரையிடல்கள், திரைவிழாக்களில் கலந்துகொண்ணு ‘நடமாடும் திரைக் களஞ்சியமாக’ வாழ்ந்தவர்.

அவர் பிறப்பதற்கு முன்னர் இரண்டு சிறுவர்கள் குடும்பத்தில் மரணமானதால் பெயர் வைக்கவில்லை. சும்மா மணி என அழைத்தர்கள்.இந்த குழந்தையும் தப்பாது என்பதால் சாதகம் கணிக்கவில்லை.  திருவல்லிக்கேணியில் பாடசாலையில்  அனுமதி பெறச் சென்றபோது பெயர என்ன என அதிபர் கேட்டபோது கொஞ்சமும் தாமதிக்காமல் ஆனந்த கிருஷ்ணன என்றார். தகப்பானும் அதனை அங்கீகரித்தர். தனக்குத் தானே பெயர் வைத்தவரானார்.  புகைப்படம்  எடுப்பதில் ஆர்வம் ஏற்பட்டதால் தகப்பன் பெட்டி  கமரா வாங்கிக் கொடுத்தார். வீட்டில் எல்லோரையும் படமெடுத்தார். ஆடு, மாடு, நாய், பூனை, செடி, கொடி என எவையுமே அவரிடம் இருந்து தப்பவில்லை.

  பாகவதர் படத்தில் வருவதுபோல் டபுள் ரோல் இமேஜை வசதிகள் எதுவும் இல்லாத பொக்ஸ் கமராவில் எடுக்க முடியுமா என்றொரு யோசனை. உடனே பக்கத்துவீட்டுச் சின்னப் பையனைக் கூப்பிட்டு உட்கார வைத்து, லென்ஸின் பாதியை மறைத்துக்கொண்டு முதலில் ஷட்டரை ஓப்பன் செய்துவிட்டு   பிறகு மறைக்காத பகுதியில் அட்டையை வைத்து மறைத்து இன்னொரு முறை ஷட்டரைத் திறந்து மூடினார். ஸ்டூடியோவில் கொண்டுபோய் கழுவிப் பார்த்ததும் ஒரே நெகட்டிவில் சிறு கோடுகூட இல்லாமல் ஒரே பையனின் இரண்டு இமேஜ்கள். ஸ்டூடியோகாரர் ஆச்சரியப்பட்டுப்போனார். 

பள்ளி இறுதி வகுப்பு முடிந்து கல்லூரியில் சேரவிருந்த நேரத்தில் ஜெமினி ஸ்டூடியோவில் கம்பெனி நடிகர்களுக்குத் தேர்வு நடக்கிறது உடனே போய் பெயர் கொடு என்று தகப்பன் சொன்னார். நடிக்க விருப்பம் இல்லாததால் ஒளிப்பதிவாளர் ஆக வேண்டும் என்று பெயர் கொடுத்தார். தேர்வு நடந்த அன்று தன் எடுத்த பல புகைப்படங்களைக் காட்டினார். ஆனால் அங்கிருந்த டம்மி கேமராவைத் தூக்கச் சொன்னார்கள். ஆனந்தன் தயங்கினார்.“கேமராவைத் தூக்கும் அளவுக்கு உடலில் தெம்பு வந்ததும் வாஎன்று சொல்லி அனுப்பிவிட்டார்கள்.

கல்லூரி முடித்ததும் பிலிம் ரோல் போட்டுப் படமெடுக்கும் பெரிய கமராவை தகப்பன்  வாங்கிக்கொடுத்தார். படங்களை கழுவி பிரிண்ட் போட எத்திராஜு என்பவரின் ஸ்டூடியோவுக்குப் போவார். அவர்தான்  என்.எஸ்.கே.வின் கமராமேன் மோகன் ராவுக்கு அறிமுகப்படுத்தினார்.  . நடுவில் கோடு இல்லாமல் ஆனந்தன்  எடுத்த டபுள் இமேஜ் படத்தைப் பார்த்து ஆச்சரிப்பட்ட அவர்,  ஒளிப்பதிவு உதவியாளராகச் சேர்த்துக்கொள்ள சம்மதித்தார்.  கீழ்ப்பாக்கத்தில் இருந்த நியூஸ்டோன் ஸ்டூடியோவில் மோகன் ராவுக்கு தனி ரூம் இருந்தது.  புதிய கேமராவுடன் தினசரி அங்கே ஆஜாராகிவிடுவார் ஆனந்தன்.

மேக்கபுடன் இருந்த சிவாஜியை நெருங்கி ஒரு படம் எடுக்கட்டுமா எனக் கேட்டு சில படங்களை எடுத்தார்.மறுநாள் படங்களைக் கொண்டுபோய் சிவாஜியிடம் காட்ட, “அருமையாக எடுத்திருக்கிறாய்!” என்று பாராட்டினார்.

ஸ்டூடியோவில் தயாரிப்பாளரோடு நட்சத்திரங்கள் இருப்பதுபோலவும், இயக்குநர் டைரக்ட் செய்வதுபோலவும் ஒர்க்கிங் ஸ்டில்ஸ் எடுத்து, அது என்ன படம், யார் இயக்குநர், தயாரிப்பாளர் யார் என்ற விவரங்களையும் எழுதி பத்திரிகைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தார். ஆனந்தனின் படங்களை பிரசுரித்து போட்டோவுக்கு கீழே குறிப்புடன் வெளியிட ஆரம்பித்தார்கள். ஸ்டூடியோ வட்டாரத்தில்பிலிம் நியூஸ்என்ற டைட்டில் என் பெயருடன் சேர்ந்துகொண்டது.எம்.ஜி.ஆரின் "நாடோடி மன்னன்" படத்துக்கு முதன் முதலில் பி ஆர் வாகப் பணி புரிந்தார். 

எம்.ஜி.ஆர். `நாடோடி மன்னன்படத்தைத் தயாரித்து, இயக்கி, நடித்துக்கொண்டிருந்தார். அப்போதெல்லாம் விளம்பர ஏஜென்சி வழியாகத்தான் படம் பற்றிய செய்திகளும் படங்களும் போகும். அப்போது மனேஜராக இருந்த ஆர். எம்.வீரப்பன் மேஜையில் நாடோடி மன்னன் படத்தின் விதவிதமான ஸ்டில்கள் இருந்தன.  அவரின் அனுமதியுடன் படங்களியும், செய்தியையும்  பிரசுரித்தார் ஆனந்தன்.   அடுத்த வெள்ளிக்கிழமையில் எல்லா பத்திரிகைகளிலும் நாடோடி மன்னன் பற்றிய செய்தியும், படங்களும் பிரசுரமாகின    விஷயம் அறிந்த எம்.ஜி.ஆர். ஆனந்தனை  அழைத்துவரச் செய்து பாராட்டினார். இனி நீதான் பத்திரிகை விவகாரம் எல்லாத்தையும் பார்த்துக்கணும் என்றார்.

 நாடோடி மன்னன் வெளியாகி 100 நாள் ஓடியதும் அறிஞர் அண்ணா தலைமையில் படத்தில் நடித்த திரைக் கலைஞர்களுக்குப் பாராட்டு விழா நடத்தினார். எம்.ஜி.ஆர். முதல்முறையாக தொழில்நுட்பக் கலைஞர்கள் உதவி இயக்குநர்களுக்குக்கூட ஷீல்டு கொடுத்தார். விழா முடிந்து மேடையிலிருந்து எம்.ஜி.ஆர். இறங்கியதும் வித்வான் அவரிடம் விளையாட்டாக, “ஆனந்தனைமறந்துட்டீங்களே?” என்றார்.

உடைந்துபோய்விட்டார் எம்.ஜி.ஆர்., “ஆனந்தா உன்னை நான் மறந்திருக்கக் கூடாது. என்னை மன்னிச்சுடுப்பாஎன்று கைகளைப் பற்றினார். ஒரு வாரத்தில் தனியே ஒரு ஷீல்டு செய்து ஆனந்தனை  நடிகர் சங்கத்துக்கு அழைத்து எல்லோர் முன்னிலையிலும் கொடுத்து கவுரவம் செய்தார். அன்று அவர் கொடுத்த ஊக்கம் அவரது கடைசி படம் வரை தொடர்ந்தது.

1954ல் பிலிம்சேம்பர் பத்திரிகைக்காக ஸ்டுடியோவில் நடக்கும் படப்பிடிப்பை பற்றிச் செய்தி சேகரிப்பதற்காக நியமிக்கப்பட்டார். திரைக்கலைஞர்களை அக்மராவில் படம் பிடித்து,   கல்லூரித் தோழன் சி.டி.தேவராஜன் நடத்தி வந்த பிலிம்நியூஸ் பத்திரிகையில் நான் எடுத்த படங்கள் வெளிவந்தன. இதனால் ஆனந்தன், பிலிம்நியூஸ் ஆனந்தனாக மாறினார். பிலிம் நியூஸ் பத்திரிகை நிருபர் மற்றும் புகைப்பட கலைஞராகவும், ஸ்டார் வாய்ஸ் என்ற வார இதழ் பத்திரிகை ஆசிரியராகவும், பிலிம் நியூஸ் மாத இதழ் பத்திரிகை ஆசிரியராகவும், இறுதியில் பிலிம் சேம்பர் என்ற பத்திரிகையில்  பணிபுரிந்தார்.

இவர் கிட்டத்தட்ட ஒன்பது புத்தகங்கள் வரை எழுதியுள்ளார். கலைமாமணி, கலைச் செல்வம், திரைத்துறை அகராதி, நடமாடும் பல்கலைக்கழகம், 1997- ம் ஆண்டின் சிறந்த மனிதர், கலா பீடம், செய்தி சிகரம், கலை மூதறிஞர், கௌரவ இயக்குனர், நடமாடும் திரையுலகக் கலைக்களஞ்சியம், சினிமா செய்தி தந்தை மற்றும் திரையுலக .வே.சா என 12 பட்டங்களை பெற்றுள்ளார். 

No comments: