நோர்வே வீரர் காஸ்பர் ரூட்டை வீழ்த்தி, 14வது முறையாக பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றி அசத்தினார் ரபேல் நடால். இதன் மூலம் பிரெஞ்சு ஓபனில் அதிக முறை பட்டம் வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
பிரெஞ்சு
ஓபன் இறுதிப் போட்டியில் நோர்வே
வீரரான 23 வயதான காஸ்பர் ரூட்டை
தோற்கடித்து, ஸ்பெயின் வீரர் ரபேல் நடால்
தனது 14வது பிரெஞ்ச் ஓபன்
பட்டத்தை வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவு
இறுதிப் போட்டியில் 8ஆம் நிலை வீரரான
காஸ்பர் ரூட்டை 6-3, 6-3, 6-0 என்ற நேர்செட் கணக்கில்
வீழ்த்தினார்.
பிரெஞ்சு ஓபன் வென்ற மிக வயதான வீரராக ஆண்ட்ரெஸ் கிமெனோ 1972 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்தார். 34 ஆண்டுகள் 305 நாட்களில் பிரெஞ்ச் ஓபனை அவர் வென்று இருந்தார். இன்று 36 வயதான நடால் பிரெஞ்சு ஓபனை வென்றதன் மூலம் ஆண்ட்ரெஸ் சாதனையை ரஃபேல் நடால் முறியடித்தார்.
ஒரே
சீசனில் அவுஸ்திரேலிய ஓபன் மற்றும் பிரெஞ்ச் ஓபன்
பட்டங்களை நடால் கைப்பற்றுவது இதுவே
முதல் முறை. இந்த
பிரெஞ்சு ஓபனை வென்றதன் மூலம்,
நடால் வென்ற கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின்
எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. இவருக்கு
அடுத்த இடத்தில் தலா 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன்
ரோஜர் பெடரர் ம, நோவக்
ஜோகோவிச் சம நிலையில் உள்ளனர்.
கடந்த ஜனவரியில் நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அவர் பட்டம் வென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.வெற்றிக்குப் பின்பு, இந்த 36 வயதான டென்னிஸ் வீரர், குழந்தை போல கண்ணீர் சிந்தி தனது உணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இரண்டு நாள்களுக்கு
முன்புதான் ரஃபேல் நடால் தன்னுடைய
36வது பிறந்தநாளைக் கொண்டாடினார். நடாலுக்கு இது 22வது கிராண்ட்
ஸ்லாம் பட்டம். உலகின் எந்த
வீரரைவிடவும் அதிக கிராண்ட் ஸ்லாம்
பட்டங்கள் வென்றது இவர்தான்.
ரோஜர் பெடரர்,
நோவக் ஜோகோவிச் ஆகிய இருவருக்கும் முன்னிலையில்
நடால் இருக்கிறார். ரோஜர் பெடரர் முழங்கால்
அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு வருடமாக
களத்தில் இறங்கவில்லை.
நோவக் ஜோகோவிச் அவுஸ்திரேலிய ஓப்பன் போட்டியில் கொரோனா தடுப்பூசி போடாததால் கலந்து கொள்ளவில்லை. அதைத் தொடர்ந்து அவர் பிரெஞ்சு ஓப்பன் போட்டியில் நடாலிடம் தோல்வியுற்றார்.
2005-ம் ஆண்டில்
17 வயதில் முதல் பிரெஞ்சு ஓபன்
டைட்டிலை நடால் வென்ற போது
அவருக்கு வயது 19. கடைசியாக விளையாடிய 11 இறுதி போட்டிகளிலும் வெற்றி
பெற்று களிமண் களத்தின் ராஜாவாக
மீண்டும் மகுடம் சூடியிருக்கிறார்.
36 வயதில்
பிரெஞ்சு ஓப்பன் வெல்லும் முதல்
ஆடவர் என்கிற சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறார்.
அதற்கு முன்பு வரை 1972-ல்
Andre Gimeno தனது 34 வயதில் பெற்ற வெற்றிதான்
சாதனையாக இருந்தது.
அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஜோகோவிச்சின் ரசிகர்களும் நடாலுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment