Thursday, June 23, 2022

105 வயதில் 100 மீற்றர் போட்டியில் பாட்டி சாதனை

 

குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற தேசிய ஓபன் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் 105 வயது மூதாட்டி ராம்பாய் என்பவர் கலந்து கொண்டி ஓடியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

85 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் தனிநபராக கலந்து கொண்டு ராம்பாய் அசத்தியுள்ளார். 45.40 வினாடிகளில் 100 மீற்றர் இலக்கை 105 வயதில் எட்டி அவர் புதிய சாதனை படைத்துள்ளார். மேலும் அவர் 200 மீட்டர் ஓட்டத்தில் 1 நிமிடம் 52.17 வினாடிகளில் இலக்கை கடந்து அசத்தினார்.

எனக்கு இது ஒரு பெரிய உணர்வைத் தருகிறது. மீண்டும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள விரும்புகிறேன்என்றார் ராம்பாய்.இந்த வயதிலேயே சாதிக்கிறீர்களே ஏன் சிறுவயதில் கலந்துக் கொண்டு சாதனை படைத்திருக்கலாமே என்று அந்த மூதாட்டியிடம் கேட்டதற்கு, “நான் ஓடத் தயாராகவே இருந்தேன் யாரும் வாய்ப்புக் கொடுக்கவில்லைஎன்றார்.

இந்தப் பந்தயத்தின் நட்சத்திர மூதாட்டி வீராங்கனையான இவரை மூதாட்டி உசைன் போல்ட் என்று செல்லமாக அழைக்கின்றனர்.

தன் 105 வயது இளமையின் ரகசியம் பற்றி ராம்பாய் கூறும்போது, நாளொன்றுக்கு 250 கிராம் நெய், 500 கிராம் தயிர், அரைலீற்றர் சுத்தமான பால் நாளொன்றுக்கு இருமுரை இவரது உணவு. தான் அதிகமாக அரிசி சாதம் எடுத்துக் கொள்வதில்லை என்றார்.

சாதாரண நாளில் 3 கிமீ வரை ஓடுவாராம் இந்த 105 வயது உசைன் போல்ட் ராம்பாய், இவரது வலுவுக்குக் காரணம் கிராமத்து உணவு தானியமே என்கிறார் அவரது பேத்தி ஷர்மிலா சங்வான்

No comments: