Tuesday, June 21, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி 22

கமல் நடித்த விக்ரம் படம் வெளியாகி ரசிகர்கலின் அமோக ஆதரவைப் பெற்றுள்ளது.  36 ஆண்டுகளுக்கு முன்னர் 1986 ஆம் ஆண்டு  'விக்ரம்' படம் வெளியாகியது.  கமலின்  ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி, வெளிவந்த படம். கமல்ஹாசன், சத்யராஜ், அம்ஜத்கான், அம்பிகா, லிஸ்சி, டிம்பிள் கபாடியா, மனோரமா, ஜனகராஜ், வி.கே.ராமசாமி, சாருஹாசன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் இதில் நடித்தனர்.    கதைஎழுத்தாளர் சுஜாதா. திரைக்கதையை கமல்ஹாசனும், சுஜாதாவும் இணைந்து எழுதி இருந்தனர்.  இயக்கம் ராஜசேகர் . இசை இளைய்ராஜா. பாடல்கள் அனைத்தும் பிரமாதம்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி வெள்ளி விழா கண்ட படம். 36 வருடங்களுகு முன்னர்   ஒரு கோடி ரூபாயில் உருவான   தமிழ்ப் படம்.

தமிழ் சினிமாவில் கம்யூட்டரை காட்சிப்படுத்திய முதல் வரிசை தமிழ்த் திரைப்படங்களில் 'விக்ரம்' ஒன்று என சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் வொர்க் ஸ்டேஷன் கணினி காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதேபோல விக்ரம் மற்றும் சுகிர்தராஜா (சத்யராஜ்) குறித்த அறிமுகம் கான்ட்ரா வகையில் ஒருவருக்கு ஒருவர் ஸ்லைட் ஷோ மூலம் அறிந்து கொள்ளும் வகையில் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். பாகுபலி௧ படத்தில் வரும் 'கிளுக்கி' கற்பனை மொழியை போல கற்பனை நாடான சலாமியா நாட்டில் பேசும் மொழி ஒன்று 'விக்ரம்' படத்தில் பேசப்பட்டிருக்கும். இந்த மொழியை உருவாக்கியது கமல்ஹாசன் என பின்னாளில் தெரிவிக்கப்பட்டது.

சுஜாதா எழுதிய கதையின் அடிப்படையில் விக்ரம் எடுக்கப்பட்டது. வரிக்குவரி அப்படியே வர வேண்டும் என்பதற்காக கமல் நிறைய சிரமப்பட்டார். சுஜாதா தனது கதையில், 'இந்தக் கதைக்கு ஆதாரமான, மிக ஆதாரமான சம்பவம் ஒரு செப்டம்பர் மாத மழை நாளில் சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் ஒரு பிற்பகலில் நடந்தது' என்று எழுதியிருப்பார். இந்தக் காட்சியை மியூசியம் தியேட்டரின் முன்னால் படமாக்கினர். ஆனால், மழைக்குப் பதில் வெயில் கொளுத்தியது. சுஜாதா கதையில் மழை பெய்வதாக எழுதியிருந்ததால் தண்ணீர் லொறிகள் வரவழைக்கப்பட்டு, ராட்சஸ விசிறிகள் வைத்து, செயற்கையாக மழையும், காற்றும் உருவாக்கப்பட்டன.

விக்ரம் கதையில், 'பாதுகாப்பு மந்திரி சபையின் போர்டின் மேல் ஒரு பறவை உட்கார்ந்திருந்தது' என்று எழுதியிருந்தார் சுஜாதா. அதனால், அந்தக் காட்சியை படமாக்கும் போது இரண்டு புறாக்களையும், புறாக்காரரையும் கையோடு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அதனை சுஜாதாவே விவரிக்கிறார்.

'அதிகாலை புறாவின் காலில் கயிறு கட்டப்பட்டு அதை போர்டின் மேல் உட்கார வைத்து, கிரேனில் கேமெரா காத்திருக்க, அது புது இடத்தில் பாஷை புரியாததால் கேமெரா பக்கமே திரும்ப மாட்டேன் என்று அடம் பிடித்தது. தானியம் லஞ்சம் கொடுத்தும் பயனில்லை. தொண்டைக்குள் க்கும் பக்கும் என்று சொல்லியும் ம்ஹூம். அது ஒரு மணிக்குப் பின் தான் கமெரா பக்கமே திரும்பியது.அப்போது டைரக்டர், 'யோவ் புறா அளுக்காயிருச்சு சுத்தம் பண்ணிக் கொண்டு வாய்யா' என்று சொல்ல, யாரோ ஒருவர் அவசரப்பட்டு அதைத் தண்ணீரில் முக்கிவிட, புறா குளிரில் ஒரு டேபிள்டென்னிஸ் பந்து அளவுக்குச் சுருங்கி விட்டது.இரண்டாவது புறாவைப் பார்க்கலாம் என்றால் அது பறந்து பதறியது. கடைசியில் சீனியர் புறாவை ஹேர் டிரையர் போட்டு சூடு பண்ணி, மறுபடி புஸுபுஸுவாக்கிக் கொண்டு வந்தார்கள்.'அப்படி ஒருவரியை படமாக்க ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

   நடிகர் திலகம் சிவாஜி, ரஜினி, கமல், சத்யராஜ், முரளி என முன்னணி நாயகர்களின் . நடிகர் திலகம் சிவாஜி, ரஜினி, கமல், சத்யராஜ், முரளி என டாப் ஹீரோக்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ரங்கா. இவர், ரஜினியின் 'ஆயிரம் ஜென்மங்கள்', கமலின் 'விக்ரம்' உட்பட 80 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்தவர். சாதனைகள் பல செய்த அந்த 78 வயது இளைஞர்.   ரஜினியின் 'ஆயிரம் ஜென்மங்கள்', கமலின் 'விக்ரம்' உட்பட 80 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்தவர். சாதனைகள் பல செய்த அந்த 78 வயது இளைஞர்.அந்த காலகட்டத்துல ராக்கெட், சாட்டிலைட் பின்னணியோட ஒரு கதைன்னதும் பிரமிப்பா இருந்துச்சு. அப்பவே பெரிய பட்ஜெட் ஆச்சு. அந்த ராக்கெட்டை திருவான்மியூர்ல ஒரு இன்ஜினீயர்தான் ரெடி பண்ணி, லாரியில பொருத்திக் கொடுத்தார் என ரங்க  கூறினார். பழைய விக்ரம் படத்துக்கும், புதிய விக்ரம் படத்துகும் ஒரு தொடர்பும் இல்லை. பழைய விக்ரம் பட ஒளிப்பதிவாளர் வி.ரங்கா  தனது நினைவுகளை மீட்டுகிறார்.

  பேட்டி எடுக்கச் சென்றவர்கள் புகைப்படக்கலைஞர் ராஜசேகர் ரங்காவை போட்டோஷூட் செய்தபோது, ரங்காவின் முகத்தில் நிழல் படியாமல் இருக்க, ரிப்ளைட்டருக்காக தெர்மாகோல் ஷீட்டைப் பயன்படுத்தினார். ''ரிப்ளைட்டருக்காக தெர்மாகோலும் சாட்டின் துணியையும் முதன்முதலில் மும்பையிலிருந்து கொண்டு வந்து பயன்படுத்தியது என் குருநாதர் ஒளிப்பதிவாளர் இஷான் ஆர்யாதான். அவர்கிட்ட கத்துக்கிட்டதை என் முதல் படம் ரஜினி நடிச்ச 'ஆயிரம் ஜென்மங்கள்'ல நானும் பயன்படுத்தியிருக்கேன்'' எனத் தன் நினைவுகளைப் பகிரத் தொடங்கினார். 

பழைய விக்ரம் படத்தில் கமல் வைத்திருக்கும் துப்பாகி நடிகர் திலகத்தினுடையது. இன்றைய விக்ரம் படக்ட்தில் கமல் வைத்திருக்கும் துப்பாக்கி அவருடையது.இயக்குநர் ராஜசேகரின் 12 படத்துக்கு மேல ஒளிப்பதிவு செய்துள்ளார். 


முழுப்பெயர் ரங்கநாதன். சினிமாவுக்காக ரங்கா ஆனான். மும்பை கேமராமேன் இஷான் ஆர்யா , வின்சென்ட்  , சுந்தர்  பல ஒளிப்பதிவாளர்கள்கிட்ட அசிஸ்டென்ட்டா இருந்தவ்ர். ரங்காவின்  முதல் படம் 'ஆயிரம் ஜென்மங்கள்'   'தம்பிக்கு எந்த ஊரு', 'மாப்பிள்ளை', 'மாவீரன்', 'படிக்காதவன்'. 'தர்மதுரை' என பல படங்களில்  ரஜினியுடன் பணியாற்றினார்.  சிவாஜியின் 'துணை', 'முதல்குரல்' 'படிக்காதவன்'னு பல படங்கள். விஜயகாந்துக்கு 'கூலிக்காரன்', 'ஈட்டி', 'ஆட்டோராஜா'; கமலுக்கு 'விக்ரம்', 'காக்கிச்சட்டை', 'நீயா'ன்னு பல படங்கள்இவருடைய  மகன் பாலாஜி ரங்காவும் ஒளிப்பதிவாளர்தான், மிஷ்கினின் 'ஓநாயும் ஆட்டுக்குட்டி'யும் உட்பட சில படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணியிருக்கார்.''

இப்போது மீண்டும் கமல்ஹாசன் நடிப்பில், அவரது தயாரிப்பில் மீண்டும் வேறொரு 'விக்ரம்' வெளியாகவுள்ளது. இந்த முறை புதியக் குழுவுடன் களம் இறங்கியுள்ளார். பழைய விக்ரமை போலவே புதிய 'விக்ரம்' படமும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.

 

 

No comments: