Saturday, June 4, 2022

சீரழிக்கப்படும் சின்னஞ்சிறுசுகள்


 இலங்கையின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்ற கவலை ஒருபுறம்.  அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு,   அவற்றைப் பெறுவதற்கான நீண்ட வரிசை, அரசுக்கெதிரான  போராட்டம், போன்றவை இன்னொரு புரம் இருக்க சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய செய்திகளும்  ஊடகங்களின்  முதன்மைப்படுத்தப்படுகின்றன.

சிறுவர்கள் எனப்படுபவர்கள் 18 வயதுக்கு குறைந்தவர்கள் ஆவர். 1989 களில் சிறுவர் உரிமைகள் ஐக்கிய நாடுகள் சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டது.அவற்றுள் வாழ்வதற்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, பாதுகாப்பு உரிமை, பங்கேற்பதற்கான உரிமை, கல்விக்கான உரிமை என பொதுவான உரிமைகள் காணப்படுகின்றன.இவற்றின் அடிப்படையில் சிறுவர்கள் பாதுகாக்கபடவேண்டும். இவற்றினை பின்பற்றி அரச சட்டங்கள் அமையவேண்டும். சிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கபடவும் வேண்டும்.

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல்,போதைக்கு அடிமையாக்கல், பாலியல் துஸ்பிரயோகங்கள் போன்றவற்றில் ஈடுபடுபவது தண்டனைக்குரிய குற்றமாகும் .இருப்பினும் அதிகாரிகளின் கவனயீனம் மிருகத்தனமான பெற்றோர்கள் போன்றவர்களால் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரியது.

சிறுவர் உரிமைகள் மீறப்படுகின்ற ஒரு தேசம் அழிவினை நோக்கி செல்கின்றது என்பது வெளிப்படை.எதிர்கால கதாநாயகர்களாக உருவாகப் போகும் சிறுவர்கள் சிறுவயது முதலே பல கனவுகளை மனதில் சுமப்பார்கள் அவர்களது கனவுகளை மெய்படுத்துவதாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் அரசாங்கமும் இருக்க வேண்டும்.

 சிறுவர்கள் அன்பாகவும் பண்பாகவும் நடாத்தப்படும் போது தான் அவர்களும் வன்முறைகளற்ற நற்பிரஜைகளாக உருவாகுவர்.ஆனால் இன்று சில நாடுகளில் சிறுவர்கள் பாடசாலைக்கு செல்லாது வேலைக்கு அமர்த்தப்படுவதும் சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுவதும் பாலியல் அடிமைகளாக்கப்படுவதும் சிறுவர் போராளிகளாக்கப்படுவதும் உலகமெங்கும் நடந்தேற தான் செய்கிறது. இது அவர்களது வாழ்வை சீரழிப்பதோடு வன்முறை மிகுந்த சமுதாயத்தை உருவாக்குவதுடன் உலகத்தையே உருக்குலைக்கவல்லது.

இன்றைய  சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்பார்கள். சிறுவர் மீதான வன்முறை , பாலியல்தொல்லை என்பனவற்றுக்கு  உறவினர்களும், நண்பர்களும் தான் முக்கிய காரணமாக  உள்ளனர். சில இடங்களில்  ஆசிரியர்கள் வரம்பு மீறுகிறார்கள். கடந்த இரண்டு வாரங்களாக இலங்கை ஊடகங்களிலும், சமூக அவலைத் தளங்களிலும் சிறுமிகள் பற்றிய செய்திகள் பரபரப்பாகப் பகிரப்பட்டன.

சிறுமியைக் காணவில்லை என்ற செய்தி வெளியானது. அந்தச் சிறுமித் டெடி உறவினர்கள்  நொந்துகொண்டிருக்கையில் அதித கற்பனையுடன் சில தகவல்கள் பகிரப்பட்டன. காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்ட பின்பு தேவைஅயற்ற கற்பனையுடன் பதிவேற்றினர்.

சிறுமி கொலை சம்பவத்தில் கைதான சந்தேகநபர்  போதை வஸ்துக்கு அடிமையானவர். அவர்  ஏற்கனவே வீடு புகுந்து பாலியல் வல்லுறவு முயற்சியில் ஈடுபட்டவர் என பாதிக்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியை ஒருவர் கூறியிருக்கின்றார்.

இந்த சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் பதிவாகியுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் தொிவிக்கையில்,

நான் முன்பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தேன். நான் எனது இரண்டு பிள்ளைகளுடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் அவர் என் வீட்டிற்குள் வந்து தகாத முறையில் நடந்துகொள்ளமுன்றார்.அப்போது நான் கூச்சலிட்டதை அடுத்து சந்தேக நபர் உடனடியாக வீட்டிலிருந்து தப்பித்து ஓடிவிட்டதாகவும் தெரிவித்த அப்பெண், பின்னர் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்தும் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

மேலும் அப்போதே பொலிஸார் சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் பாத்திமாவுக்கு இப்படியொரு கதி வந்திருக்காது என்றும் அப் பெண் மேலும் கூறியதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மதுபோதையில் இருந்த தந்தை, யாருக்கும் சொல்லாமல் ஏன் வீட்டுக்கு வெளியில் சென்றாய் என கேட்டு, மகளை இரும்புக் கம்பியினால் தாக்கியதால்   மரணமானார்.  வயிற்றுவலிக்காக வைத்தியசலைக்குச் சென்ற 13 வயது சிறுமி  கர்ப்பிணி என தெரியவந்தது. வவுனியாவில்  ரியூசனுக்குச் சென்ற சிறுமி கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு.  இவை எல்லாம் வெறும் செய்திகள் அல்ல.  சீர்கெட்ட சமுதாயத்தின் வெளிப்பாடுகள்.சட்டம் தன் கடமையைச்   செய்யாததும் இந்த சமூகச் சீர்கேட்டுக்குக்  காரணமாகும்.

றுவர்கள் மிகவும் பாதுகாப்போடு வளரக்கூடிய சூழலையை எந்த ஒரு நாடு கொண்டிருக்கிறதோ அந்த நாடுதான்  உலகின்  மிகச் சிறந்த நாடாகும்.

  

 

 

No comments: