டென்னிஸ் புயல் வீனஸ் வில்லியம்ஸ் விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் ஜேமி முர்ரேவுடன் ஜோடி சேர்ந்து விளையாட உள்ளார். வீனஸ் வில்லியம்ஸ் ஜோடி தாமதமாக வைல்டு கார்டு நுழைவு ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு விம்பிள்டனில் களம் இறங்குகிறார். ஓகஸ்ட் 2021 க்குப் பின்னர் வீனஸ் வில்லியம்ஸ் விளையாடவில்லை.
முர்ரே விம்பிள்டனில் இரண்டு முறை கலப்பு இரட்டையர் பிரிவில் வென்றுள்ளார் - 2007 இல் ஜெலினா ஜான்கோவிச் , 2017 இல் மார்டினா ஹிங்கிஸ் உடன் சம்பியனானார்.
வில்லியம்ஸ் 2006 இல் பாப் பிரையனுடன் இறுதிப் போட்டிக்கு
வந்தார். SW19 இல் அவர் பெற்ற ஐந்து ஒற்றையர் பட்டங்களுக்கு இணையாக அவர் தனது சகோதரி
செரீனாவுடன் இணைந்து பெண்கள் இரட்டையர் பிரிவில் ஆறு முறை வென்றுள்ளார்.
ஆண்டி முர்ரே ,செரீனா வில்லியம்ஸ் ஜோடி 2019 விம்பிள்டனில் கலப்பு இரட்டையர் பிரிவில் மூன்றாவது சுற்றை எட்டியது.
No comments:
Post a Comment