தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கென்று ஒரு தனி இடம் உள்ளது. என்.எஸ்.கிருஷ்ணம், மதுரம் ஜோடி ஒரு காலத்தில் கலக்கியது. நகைச்சுவையுடன் அரசியல்,விழிப்புணர்வு என்பனவற்றை அந்த ஜோடி வெளிபடுத்தியது. அதன் பின்னர் நாகேஷ், மனோரமா ஜோடி ரசிகர்களின் மனதைக் கவர்ந்தது. நாகேஷ் வேரு நடிகைகளுடனும், மனோரமா வேறு நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நகைச்சுவையில் உச்சம் தொட்டனர்.
நடிகர்களுக்கு எடுபிடியாக ஒரு வர் இருப்பார். அவர் அவளவு பிரபலமாக
மாட்டார். கவுண்டமணி - செந்தில் ஜோடியை திரையில்
பார்த்தாலே தியேட்டர் சிரிப்பலையால் அதிரும்.
கவுண்டமணி என்று பேரைச்
சொன்னாலே கலகலப்புத்தான். அவர மாதிரி இன்னொரு
ஆள் தமிழ் சினிமாவுக்கு இனிமேல் வர முடியாது என்று சொல்லுகிற அளவுக்கு தன்னுடைய நடிப்பால்
ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையே கட்டிப் போட்டவர். தமிழில் கதாநாயகர்களுக்கு இணையாக பிரபலமானவர். சில படங்களில் கதாநாயகனை விட கவுண்டமணிதான் பெரிதாகப் பேசப்பட்டார்.
இவருடைய கால்சீட்டுக்காக டைரக்டர்கள் தவம் கிடந்த கதையெல்லாம் பல உண்டு.
கோயம்புத்தூர் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டைக்கு அருகில் இருக்கிற
வல்லகுண்டாபுரம் கிராமத்தில் தான் கவுண்டமணி
1939 ஆம் ஆண்டு மே 25 ஆம் நாள் பிறந்தார்.
சுப்பிரமணியன் கருப்பையா என்பது தான் கவுண்டமணியின் இயற்பெயர். ஆரம்ப காலங்களில்
இவர் நடிப்பில் ஆர்வம் கொண்டதால் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேடை நாடகங்களில்
இவர் பெற்ற அனுபவங்கள் நிறைய. அந்த அனுபவங்கள்தான் திரைப்பட உலகுக்குள் சதிக்க உதவியது.
கவுண்டமணி நடித்த முதல் திரைப்படம் ராமன் எத்தனை ராமனடி. ஆனால்,
நாகேஷ் நடித்த மிக பிரமாண்ட வெற்றி பெற்ற சர்வர் சுந்தரம் என்னும் திரைப்படத்தில் சரதியாக வருவார். அதன் பிறகு, எம்ஜிஆரின் ஆயிரத்தில்
ஒருவன், செல்வ மகள் ஆகிய திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். அப்போது இவர் பெரிதாகப்
பேசப்படவில்லை.
450 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இவர் நடித்ததில் என்றைக்கும்
மறக்க முடியாத படங்களாக பல உள்ளன.. கரகாட்டக்காரன்,
சின்னக்கவுண்டர், உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, சூரியன், நடிகன், தங்கம், மன்னன்,
இந்தியன், நாட்டாமை, மாமன் மகள், உனக்காக எல்லாம் உனக்காக, உள்ளத்தை அள்ளித்தா, முறை
மாமன் இப்படி இன்னும் நிறைய படங்களை அடுக்கிக் கொண்டே போக முடியும். சில திரைப்படங்களில்
இவர் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.
"அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா" எனும் பஞ்ச் டயலாக் எப்போதும் உயிரோடு இருக்கிறது. தேர்தல் காலத்தில் அது உயிர் பெற்று விடும். கவுண்டமணி என்று சொன்னாலே அதில் செந்திலுக்கும்
பாதி இடம் உண்டு. செந்திலை அடித்து திட்டி தான் கவுண்டமணி பெரிய ஆள் ஆனார் என்ற விமர்சனங்களும்
வரத்தான் செய்தது. அதன்பின் மேட்டுக்குடி, மன்னன் போன்ற பல திரைப்படங்களில் பின்னாட்களில்
தனியாக நடித்து தன்னை நிரூபித்தும் காட்டியிருக்கிறார்.
பெரிய நடிகர்கள் பேசும் பஞ்ச் டயலாக்கிற்கு எடுத்துக் கொள்ளும் சிரத்தைகள் அதிகம். ஆனால் கவுண்டமணியின் பல பஞ்ச் டயலாக்குகள் இன்னும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றதோடு அதை தங்களுடைய அன்றாட வாழ்க்கையிலும் பேசி பயன்படுத்தி வருகிறார்கள்.
நாதர்ஸ் வாழைப்பழ காமெடியை இன்றளவும் யாராலும் அடித்துக் கொள்ள
முடியாது.
அய்யோ ராமா என்ன ஏண்டா இந்த மாதிரி கழிசட பசங்களோடல்லாம் சேர வைக்கிற.
நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா
அடேங்கப்பா இது உலக மகா நடிப்புடா சாமி
ஆமா இவரு பெரிய கப்பல் வியாபாரி
நாலு வீட்ல பிச்சை எடுத்து திங்கிற நாய்க்கு பேச்ச பாரு, எகத்தாலத்த
பாரு
டேய் தகப்பா
நாட்டாமை தம்பி பசுபதி டீச்சர் வெச்சிருக்காங்கோ
டேய் தீஞ்ச மண்டையா
நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்ல தாங்க முடியலப்பா
காந்தக்கண்ணழகி! ஆ இங்க பூசு
நான் ரொம்ப பிஸி
சொரி புடிச்ச மொன்ன நாயி
இதுக்கு தான் ஊருக்குள் ஒரு ஆஸ் இன் ஆள் அழகு ராஜா வேணும்ங்கிறது
பெட்ரமாஸ் லைட்டே தான் வேணுமா? கூட வெச்சிருக்கிறவங்களுக்கு பெட்ரமாஸ்
லைட் குடுக்கறதில்ல.
நீ வாங்குற அஞ்சு பத்துக்கு இதெல்லாம் தேவையா
இப்படி அவருடைய சூப்பர் ஹிட் வசனங்களை அடுக்கிக் கொண்டே போக முடியும்
இயக்குநரும்
நகைச்சுவை நடிகருமான அனுமோகன் பெற்ரோமாக்ஸ்
நகைச்சுவைபறி தெரிவிக்கையில்
“வைதேகி காத்திருந்தால் திரைப்படத்தில் அந்த
காமெடி வச்சிருந்தோம். பொதுவா அந்த காலத்துல அரசியல் பேசும் இடம் எதுவாக இருக்கும்னா பார்பர்
ஷாப், சைக்கிள் கடை இல்லைனா
டீக்கடையில. அதுலையும் அந்த சைக்கிள் கடை அனுபவம் எங்களுக்கு கொஞ்சம் அதிகம். அதுனால அந்தமாதிரியான காட்சியை வைக்க திட்டமிட்டோம். இயக்குநர் சுந்தர்ராஜன்தான் கடைக்கு ஆல் இன் ஆல் அழகுராஜானு பெயர் வச்சாரு. ஏன்னா பாக்கியராஜோட உதவிய இயக்குநர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் அழகுராஜா. சினிமாவை கரைத்து குடித்தவன் போல பேசுவான். அதுனாலதான் அந்த பெயரை வைத்தோம். ஒரு சில காட்சிகளை எடுத்துவிட்டோம். அதன் பிறகு இயக்குநர் திலீப் குமார் சொன்னார். சார் சைக்கிள் கடைனா பெட்ரோமாக்ஸ் லைட்லாம் இருக்கும் . அதையெல்லாம் தொங்க விடுங்க என்றார் சுந்தர். அப்போதுதான் அசிஸ்டண்ட் ஒருவர் , இப்படித்தான் சார் ஒருமுறை பெட்ரோமாக்ஸ் லைட் உள்ள சாம்பலா இருக்கும்னு தெரியாமை உடைத்துவிட்டேன். எங்க அப்பாக்கிட்ட அடிவாங்கினேன் என சொன்னார். அப்படியே
அந்த காட்சியை உடனடியாக எடுத்தோம் அது இன்றைக்கு வரையிலும் பேசப்படுகிறது. அதன் பிறகு பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமானு சொன்னதெல்லாம் கிரியேட் பண்ணதுதான். பிளான் பண்ணியெல்லாம் அந்த காட்சிகளை எடுக்கவே இல்லை என்றார்.
இன்னொரு வாழைப்பழம் எங்கே
எனும் காமெடியும் நினைத்தாலே சிரிப்பை வரவழைக்கும்.
No comments:
Post a Comment