நானயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி
20 ஓவர்களில் 176/5 ஓட்டங்களை குவித்தது. 176 என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இலங்கை
13.5 ஓவர்களில் 98/5 என திணறியது. எதிர்பார்த்த
ஹசரங்க 8 (7) ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால்
தோல்வி உறுதி என்று ரசிகர்கள் நினைத்தனர்.
மத்திய வரிசையில் களமிறங்கிய
இலங்கை அணி கப்டன் தசுன் சனக மனம் தளராமல் வெற்றிக்காக போராடினார். ஆனாலும் எதிர்ப்புறம்
வந்த வீரர்கள் திணறியதால் கடைசி 3 ஓவர்களில்
வெற்றிக்கு 59 ஓட்டங்கள் தேவை என்ற நிலை உருவானது. ஓவருக்கு 20 ஓட்டங்கள் தேவை. கப்டன்
சானக 6* (12) என திணறி கொண்டிருந்ததால் இலங்கை மூன்றாவது தோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
சிறந்த பந்து வீச்சாளரான ஜோஸ் ஹேசல்வுட் வீசிய 18-வது ஓவரில் அந்நியனாக
மாறிய அவர் 6, 6, 4, 4 என மிரட்டலான பவுண்டரிகளை பறக்கவிட்டு மொத்தம் 21 ஓட்டங்கள்
சேர்த்தார். 18-வது ஓவரிலும் 10 ஓட்டங்களை விளாசி
அவுஸ்திரேலியாவைத் திணறடித்தார். கடைசி
ஓவரில் வெற்றிக்கு 19 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது அதை வீசிய ரிச்சர்ட்சன் 2 வைட் உட்பட
முதல் 2 பந்துகளில் 3 ஓட்டங்கலை மட்டுமே கொடுத்தார். இடையில் கருணரத்னே 14* (10) ஓட்டங்கள்
எடுக்க கடைசி 4 பந்துகளில் வெற்றிக்கு 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது 4, 6, 6
என சிக்சர்களை பறக்கவிட்ட சனகவின் ஆட்டம் கிலியை ஏற்படுத்தியது. அரண்டு
ரிச்சர்ட்சன் விசிய ஐந்தாவது பந்தும் வைட்
என அரிவிக்கப்பட்டதால் 1 பந்து மீதம் வைத்த இலங்கை 19.5 ஓவரில் 4 விக்கெட் வித்தியாசத்தில்
திரில் வெற்றியை பெற்றது.
ரி20 கிறிக்கெற் வரலாற்றில்
இது ஒரு மிகச்சிறந்த போட்டியாக அமைந்தது. கடைசி
3 ஓவர்களில் 59 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது அதை வெற்றிகரமாக எட்டிப்பிடித்த இலங்கை சர்வதேசம்
மற்றும் ஒட்டுமொத்த ரி20 கிறிக்கெற் வரலாற்றில்
கடைசி 3 ஓவரில் அதிக ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்ற அணி என்ற புதிய நம்பமுடியாத உலக
சாதனை படைத்தது.
1. இலங்கை : 59 ஓட்டங்கள்,
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக, 2022*
2. சிட்னி சிக்ஸர்ஸ் : 56 ஓட்டங்கள், சிட்னி தண்டர்ஸ்க்கு எதிராக,
பிபிஎல், 2015
சர்வதேச ரி20 கிறிக்கெற்
வரலாற்றில் சேசிங் செய்யும் போது கடைசி 3 ஓவர்களில் 50 ஓட்டங்கள் எடுத்த முதல் துடுப்பாட்ட
வீரர் என்ற புதிய உலக சாதனையை அவர் படைத்தார்.
1. 50 – தசுன் சனக, அவுஸ்திரேலியாவுக்கு
எதிராக, 2022*
2 46 – இசுறு உடான, தென்னாபிரிக்காவுக்கு எதிராக, 2019
3. 45 – மைக் ஹசி, பாகிஸ்தானுக்கு எதிராக, 2010
No comments:
Post a Comment