Friday, June 10, 2022

உலகைச் சுற்றும் உலகக்கிண்ணம்

 

 பீபாவின் உலகக்கிண்ணம்  36 மணி நேரம் பயணம் செய்து கடந்த புதன்கிழமை பங்களாதேஷைச் சென்றடைந்தது.

பீபாவின்  அசல் கிண்ணத்தை  1998 உலகக் கிண்ண சம்பியனான  கிறிஸ்டியன் கரேம்பேயுவுடன் ஏழுபேர் கொண்ட பீபாவின் தூதுக்குழுவுடன் கடந்த புதன் கிழமை பங்களாதேஷைச் சென்றடைந்தனர். பீபா கிண்ணம் 55 நாடுகளுக்குச் செல்கிறது. முதன் முதலாக உலகக்கிண்ணத்தில்  விளையாடும் 32 நாடுகளுக்கு செல்கிறது. பங்களாதேஷ் உதைபந்தாட்டகூட்டமைப்பு  தலைவர் காசி ம்முகமது சலாவுதீன் , பொதுச் செயலாளர் அபு நயீம் ஷோஹாக் தலைமையிலான குழுவினர்    பீபா  தூதுகுழுவௌ விமான நிலையத்தில் வரவேற்றனர். டாக்காவில் உள்ள பொதுமக்களுக்காக  மைதானத்தில்  உலகக்கிண்ணம் காட்சிப்படுத்தப்பட்டு  , கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன..

1978 ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வ  பீபா உலகக் கிண்ண அனுசரணையாளராக கொக்ககோலா   இருந்து வருகிறது.  1950 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு  உலகக்  கிண்ணப் போட்டியின் போது கொக்ககோலாவை மைதானத்தில்  விளம்பரப்படுத்தியது.கடந்த மேமாதம் துபாயில் ஆரம்பமான உலகக்கிண்ண சுற்றுபயணம் நவம்பரில் கட்டாரைச் சென்றடையும் 1913 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலகக்கிண்ணம் பங்களாதேஷுக்குச் சென்றுள்ளது. ஒலிம்பிக் சுடரைப் போன்று உலகக்கிண்ணப் பயணம் சிறப்படைந்துள்ளது.

அசல் உலகக்கிணம்  திடமான தங்கத்தால் ஆனது. 6.142 கிலோ எடையுள்ள இந்தக் கிண்ணம், உலகத்தை உயரத்தில் வைத்திருக்கும் இரண்டு மனித உருவங்களை சித்தரிக்கிறது. அதன் தற்போதைய வடிவமைப்பு 1974 ஆம் ஆண்டுக்கு முந்தையது. உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சின்னங்களில் ஒன்றாகவும், விலைமதிப்பற்றதாகவும் உள்ளது.  அசல்   கிண்ணத்தை  தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினரால் மட்டுமே தொட்டு வைத்திருக்க முடியும், இதில் முன்னாள் வெற்றியாளர்களும் அடங்குவர். உலகக் கிண்ண சம்பியனான  வெல்லும் அணி, உண்மையான கோப்பையை தற்காலிகமாகத் தக்கவைத்துக் கொள்கிறது, பின்னர் நிரந்தரமாக பெயர் பதிக்கப்பட்டு  ஒரு கிண்ணம் வழங்கப்படும்.

  மே , ஜூன் மாதங்களுக்கு இடையில் 22 நாடுகளுக்கு உலகக்கிண்ணம் பயணம் சென்று .  ஆப்பிரிக்க லெக் எத்தியோப்பியாவில்   அங்கு   மே 24 , 25 க்கு இடையில் இரண்டு நாட்களுக்கு காட்சிக்கு வைக்கப்பட்டது.


 மே 26 ,27 ஆம் திகதிகளில் கென்யாவில் காட்சிப்படுத்தப்பட்டது. மே 31 முதல் ஜூன் 1 வரை  தான்சானியாவில் இருந்தது.

நைரோபியில் நடக்கும் உலகக்கிண்ண  'பை அண்ட் வின்' விளம்பரத்தில் பங்கேற்கும் வாடிக்கையாளர்களுக்கு கோகோ கோலா 3000 டிக்கெட்டுகளை வழங்குகிறது  .

No comments: