Wednesday, June 8, 2022

பாட்டாளி மக்கள் கட்சியின் மாற்றத்தை நோக்கிய பயணம்

 சத்தம் சந்தடி இல்லாமல்  தன் மகன் அன்புமணிக்கு முடிசூடியுள்ளார்.டாக்டர் ராமதாஸ்.  மாற்றம், முன்னேற்றம்,  அன்புமணி என்ற கோஷத்துடன் தமிழக ஆட்சியைப் பிடிக்க சபதம் செய்தவர் கட்சியின் தலவராகிவிட்டார்.

வன்னியர்களின் உரிமைக்காக இயக்கத்தை ஆரம்பித்த டாக்டர் ராமதாஸ் காலப்போக்கில் அதனை அரசியல் கட்சியாக்கினார்.தனது குடும்பத்தைச் சேர்ந்த எவரும் அரசியலுக்கு வரமாடார்கள் என அப்போது சபதம் செய்தார். மகன் அன்புமணி எம்.பியாகி,  பின்னர் அமைச்சரானார். இன்று மகனுக்கு முடிசூடி செங்கோலைக்  கையில் கொடுத்துள்ளார்.  

சென்னை திருவேற்காட்டில், பாட்டாளி மக்கள் கட்சியின்  மாநில சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியை 25 ஆண்டுகள் அலங்கரித்த நிலையில், தமிழக அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சியை அடுத்த நிலைக்கும், ஆட்சிப் பொறுப்புக்கும் அழைத்து செல்லும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சி 2.0 என்ற செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் கட்சித் தலைவர் பொறுப்பை அடுத்த தலைமுறையின் கைகளில் ஒப்படைக்க வேண்டும் என்ற விருப்பத்தை ஜி.கே. மணி, கட்சியின் நிறுவனரிடமும், நிர்வாகிகளிடமும் தெரிவித்தார்.


கட்சியின் ஆரம்ப காலத்தில் இருந்தே கால் நூற்றாண்டுகளாக கட்சித் தலைவராக இருந்த தீரன், ஜிகே மணிக்குப் பிறகு அன்புமணி ராமதாஸ் 3வது தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில் புகையிலை ஒழிப்பு, போலியோ ஒழிப்பு ஆகியவற்றுக்காக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக கீழ்க்கண்ட விருதுகளை வென்றுள்ளார்.

அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் லூதர் எல்.டெர்ரி விருது, உலக சுகாதார நிறுவனத் தலைவரின் சிறப்பு விருது, உலக சுகாதார நிறுவனத் தலைவரின் சிறந்த தலைமைப் பண்புக்கான விருது, உலக ரோட்டரி சங்கத்தின் இளம்பிள்ளைவாதம், சென்னை ரோட்டரி சங்கத்தின் கௌரவம் தரும் விருது, இந்தியாவில் இளம்பிள்ளைவாதம்   ஒழிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுத்ததற்காக 2014ம் ஆண்டில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருது வழங்கிப் பாராட்டினார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றிய போது, 108 அவசர ஊர்தித் திட்டம், உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான தேசிய ஊரக சுகாதார இயக்கம், அண்மையில் உலக சுகாதார நிறுவனத்தின் உலக சுகாதாரத் தலைவர்கள் விருது பெற்ற அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரப் பணியாளர்களை (ஆஷாக்கள்) நியமிக்கும் திட்டம், குட்காவுக்குத் தடை, பொது இடங்களில் புகைப் பிடிக்கத் தடை, திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகம், போலியோ நோய் ஒழிப்பு, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அமைத்தது, எய்ம்ஸுக்கு இணையான மருத்துவமனைகள் அமைத்தது, பாரம்பரிய அறிவுசார் மின்னணு நூலகம் அமைத்தது, தானாக செயலிழக்கும் சிரிஞ்ச்சை அறிமுகம் செய்தது உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி எண்ணற்ற சாதனைகளை படைத்தவர்.

பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக பணியாற்றிய போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்து வளர்த்தவர். பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் ஏராளமான சிறு தடுப்பணைகளை கட்டியுள்ளார். ஆயிரக்கணக்கான ஏரிகள் மற்றும் குளங்களை தூர்வாரி இருக்கிறார்.

அன்புமணி சிறந்த அரசியல்வாதி என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. ஆனால், அவரது கட்சி 2026 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடிக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் உள்ள வன்னியர்கள் அனைவரும் ஒருமித்து ஒரே கட்சிக்கு வாக்களித்தாலும் அந்த சமூகத்தால் ஆட்சியைப் பிடிக்கமுடியாது. ஒரு சில மாவட்டங்களில் வெற்ரி,தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தி பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு காலத்தில் இருந்தது.

காடுவெட்டி குரு வெளியேற்றப்பட்டபின்னர் கட்சியின் வளர்ச்சியில் வீழ்ச்


சி ஏற்பட்டது. ரஜினியுடனான மோதலை வன்னியர்கள் ரசிக்கவில்லை. புகை பிடிக்கும் காட்சியில்  நடிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு ரசிகர்களை கொதிப்படையச்  செய்துள்ளது. இவை எல்லாம் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரானவர்களின் வாக்கு மூலங்கள்.

அன்புமணியை வாழ்த்தி 2.0 என்ற விளம்பரங்கள் பளிச்சிட்டன. 'ஆளப்போகிறான் பாட்டாளி', '2026-ல் அன்புமணி தலைமையில் ஆட்சி அமைப்போம்' என்று கோஷம் எழுப்பினார்கள்.   

2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தனித்து களம் கண்டபோது அன்புமணி முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.

1968ஆம் ஆண்டு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் மகனாக அன்புமணி ராமதாஸ் பிறந்தார். எம்பிபிஎஸ் பட்டப்படிப்பு படித்துள்ள அன்புமணி ராமதாஸ், லண்டனில் பொருளாதார பட்டப்படிப்பு முடித்துள்ளார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தொடங்கிய, பசுமைத் தாயகம் அமைப்பிற்கு 1997 ஆம் ஆண்டு அன்புமணி ராமதாஸ் தலைவராக பொறுப்பேற்றார்.

இவர் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக இருந்த போது ஐநா சபையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்று 2013 மற்றும் 15 ஆண்டுகளில் ஜெனிவாவில் நடந்த ஐநா சபை கூட்டத்தில் அன்புமணி கலந்து கொண்டு பேசியுள்ளார். பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக இருந்தபோதே பாமகவின் பொதுக் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டுள்ளார்.

2004ஆம் ஆண்டு முதன்முதலாக ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 2004ஆம் ஆண்டு அமைந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 35 வயதான அன்புமணி இளம் வயதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். 2006 ஆம் ஆண்டு பாமக இளைஞரணித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

அன்புமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது 108 ஆம்புலன்ஸ் திட்டம், பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை சட்டம் உள்ளிட்ட மருத்துவத்துறையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி கொண்டு வந்தார். 2014 ஆம் ஆண்டு தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக பாமக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற முழக்கத்தோடு பாமக அன்புமணி தலைமையில் சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது.

அனைத்து தொகுதியிலும் தோல்வியைத் தழுவிய பாமக, அந்த தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் தோல்வியைத் தழுவினர். 2019ஆம் ஆண்டு மீண்டும் தருமபுரி தொகுதி மக்களவை தேர்தலில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் தோல்வியடைந்தார்.


2019ஆம்ஆண்டு அதிமுக கூட்டணி மூலம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு தற்போது வரை மாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி ராமதாஸ் செயல்பட்டு வருகிறார். 1997 ஆம் ஆண்டு பசுமைத் தாயகம் அமைப்பின் மூலம் தொடங்கிய அன்புமணி ராமதாசின் அரசியல் பயணம் , ஏறக்குறைய 15 ஆண்டுகாலம் பாமக இளைஞரணி தலைவராக இருந்து, தற்போது பாமகவின் மாநில சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தில் ஒருமனதாக பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஸ்டாலினின் "திராவிட மொடல்" எனும்  சொர்பிரயோகாம் மத்திய அரசை கடுப்படைய வைத்துள்ளது. அதற்குப் போட்டியாக “2.0 மொடல் என அன்புமணி அரிவித்துள்ளார். ‘அனைவருக்கும் உரிமை. அனைவருக்கும் வளர்ச்சி’ என்பதை அடிப்படையாகக்கொண்டு உருவாகும் இந்தத் திட்டத்தில், வருங்கால தமிழகத்துக்கான தேவை   என்பானவற்றுக்கு  முக்கியத்துவம் கொடுத்துப் பயணிக்க வேண்டும் என்பதையெல்லாம் பிராதனப்படுத்தி அதற்கான வரைவைத் தயார் செய்துகொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாட்டாளி  மக்கள் கட்சி என்றால் சாதிக் கட்சி என்ற அடையாளம் இடப்பட்டிருக்கிறது. அதனை மாற்றிவிட முடியாது.

 

 

 


 

No comments: