Saturday, November 25, 2023

ஆளுநரின் அடாவடியை அடக்கிய நீதிமன்றம்

 தமிழக அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் இடையேயான முரண்பாடுகள்  உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. தமிழக அரசின் செயற்பாடுகளை முடக்குவதிலேயே ஆளுநன் கண்ணும் கருத்துமாக  இருக்கிறார்.  மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாநில அரச்க்கும், மத்திய அரசுக்கும் இடையே நல்லுறவை வலுப்படுத்தற்காகவே ஆளுநர் நியமிக்கப்பட்டார். மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள், மக்களால் தெரிவு செய்யப்படும் அரசாங்கத்தை மதிப்பதில்லை. இதனால் மாநில அரசுகளுக்கும், ஆளுநருக்கும் இடையே  முரண்பாடு வலுக்கிறது.

தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், மத்தியில் பாரதீய ஜனதாக் கட்சியும்  ஆட்சியில் இருக்கும் வரை ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையேயான  உறவு சுமுகமாக இருந்தது. பாரதீஜ ஜனதா   கோபப்பட்ட போது தமிழக  ஆளுநர் அத்து மீறினார். அப்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  அரசு மெளனமாக  இருந்தது. எதிர்க் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம்  திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சிஐ பிடித்தபோது ஆர்.என்.ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டர். ஆளுநர் எஅதிச் செய்ய வேண்டுமோ அதைமட்டும்  அவர் செய்யவில்லை. ஆளுரின் அதிகார வரம்பை மீறிரி தமிழக ஆளுநர் ரவி செயற்பட்டார். ஆளுநருக்கு எதிராக தமிழக அரசங்கம் மென் போக்கைக் கடைப் பிடித்தது. ஆனால், முதல்வர் முதல் ஏனைய தலைவர்கள் வரை ஆளுநரின் செயற்பாட்டைக் கடுமையாக விமர்சித்தார்கள்.

மாநில அரசாங்கம் நிறைவேற்றும் தீர்மானங்களுக்க் கையெழுதிடுவது ஆளுநரின் கடமைகளில்  ஒன்று. ஆளுநர் கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பும்போது இரண்டாவது முறை சட்ட சபையில் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்ப வேண்டும் . இரண்டாவது  முறை அனுப்பும் தீர்மானத்த்துக்கு ஆளுநர் கையெழுத்திட வேண்டும். ஆளுநர் ரவி இதையெல்லாம்  புறம் தள்ளி தன்னிச்சையாகச் செயற்படுகிறார். பொங்கி  எழுந்தது.

 ராஜீவ் காந்தி கொலை வழக்கில்  சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்கும் தீர்மானதை ஆளுநர் கண்டுகொள்ளவில்லை. தமிழக அரசாங்கம் நீதிமன்றத்தை நாடியது. ஆளுநரின் கையெழுத்தில்லாமல் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது. ஆளுநர் அப்போது விழித்திருக்க வேண்டும். ஆனால்,  இப்போது வசமாகச் சிக்கிவிட்டர்.

மாநில அரசு  அனுப்பும் மசோதக்களுக்கு ஆளுநர் கையெழுத்திடும் கால வரையறை எதுவும் சட்டத்தில் இல்லை. அதைத் தனக்குச் சாதகமாகப் பயன் படுத்திய தமிழக ஆளுநர் ரவி அவற்றைக் கிடப்பில் போட்டார். மசோதாக்களுக்கு என்ன அடந்தது என தமிழக அரசுக்குச் சொல்லாமல்  பொது வெளியில் பதிலளித்தார். நீட் தேர்வு விலக்கலுக்குக் கையெழுதிடமாட்டேன், மசோதா  கிடப்பிலே  போட்டால் அது செத்துப் போச்சு என்று அர்த்தம்  என்ற ஆளுநரின் திமிர்ப்பேச்சுக்கு சரியன பதிலடிய நீதிமன்றம் கொடுத்துள்ளது.

ஆளுநரின் செயற்பாட்டுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளது. பாரதீய ஜனதா ஆட்சியில் இல்லாத டில்லி,பஞ்சாப், தெலுங்கானா ஆகிய மாநில அரசாங்கங்களும்  அந்தந்த மநில அளுநரின் செயற்பாடுக்கு எதிராக நீதிமன்றக் கதவைத் தட்டியுள்ளன.

மாநில சட்டசபைகள் நிறைவேற்றும் மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநர்களுக்கு அதிகாரம் கிடையாது; சட்டசபையில் இரண்டாவது முறையாக மசோதாக்கள் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டால் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ,கடந்த  மூன்று  ஆண்டுகளாக தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளார். இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை   தேதி உச்சநீதிமன்றம் விசாரித்து, மசோதாக்களை நிறுத்தி வைக்க கூடாது; அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் ஒப்புதல் வழங்க உத்தரவிட்டது.

 ஆனால் ஆளுநரோ 10 மசோதாக்களை தமிழ்நாடு சட்டசபைக்கு திருப்பி அனுப்பினார். இதனால் தமிழ்நாடு சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு மீண்டும் 10 மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது தமிழ்நாடு அரசு.

தமிழக அரசு மிகவும் சிறப்பாக செயற்பட்டு  ஆளுந திருப்பி அனுப்பிய மசோதாக்களை நிறை வேற்றி  மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.பாரதீஜ ஜனதாக் கட்சியும், எடப்பாடியின் தலைமயியிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் வெளிநடப்புச் செய்தன. பன்னீரின் தலைமையிலான  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  உறுப்பிநர்கள் மசோதாக்களும்மு ஆதரவு தெரிவித்தனர்.

பல்கலைக்  கழகம்  ஒன்றுக்கு ஜெயலலிதாவின்  பெயர் வைக்கவேண்டும் என்ற தீர்மானத்தையும் ஆளுநர் திருப்பி அனுப்பினார்.        ஜெயலலிதாவின் படத்தைப் பொக்கற்றினுள் வைத்திருக்கும் எடப்பாடி குறூப் அதனையும் எதிர்த்தது.  எடப்பாடி முதலமைச்சராக  இருந்த போது அனுப்பிய மூன்று தீர்மானங்களையும், ஆளுநர் திருப்பி அனுப்பினார். எடப்படியும் அவருடைய அடியவர்களும் அதனையும் கண்டுகொள்ளவில்லை.

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 159-ன்படிதான் ஆளுநர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்கிறார். அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற என் முழு சக்தியையும் செலவிடுவேன். அதற்கு மாறாக நடந்துகொள்ள மாட்டேன். மக்களுக்கு விருப்பு வெறுப்பு அற்று சேவை செய்வேன். பொதுவானவனாக இருப்பேன்' என்றெல்லாம் சொல்லித்தான்   சத்திய பிரமாணம் எடுக்கிறார்கள். அப்படி என்றால் இவர் மக்கள் பிரதிநிதிகள் கூடி அனுப்பும் மசோதாவில் கையெழுத்துப் போடாமல் அதற்கு விரோதமாகத்தானே நடந்துகொண்டுள்ளார் என்றுதான் கருத வேண்டும்.   ஒரு மசோதாவில் உள்ள குறை நிறைகளை அலசி ஆராய அவர் நேரம் எடுத்துக்கொள்வதில் தவறில்லை. அதற்கும் ஒரு காலவரம்பு தேவையில்லையா? நியாயமான காலத்தைத்தான் அவர் எடுத்துக்கொண்டுள்ளார் என ஏற்கக்கூடிய அளவுக்கு அது இருக்க வேண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆட்சிக்காலமே  ஐந்து ஆண்டுகள்தான். அதில் மூன்று ஆண்டுகள் வரை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் மசோதாவைப் போட்டுவைப்பது எந்தவிதத்தில் நியாயம்.நீதிமன்றம் இவற்றில் கவனம் செலுத்தலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 

ஆளுநரின் செயற்பாட்டினால் தமிழக மக்கள்  கொந்தளித்துப் போயுள்ளனர். தேர்தல் முடியும் வரை அவரை மாற்ற வேண்டாம் என தமிழக  முதல்வர் சொல்லியிள்ளார்.  தேர்தலில் தமிழக பாரதீய ஜனதாவுக்கு மக்கள் பாடம்  புகட்டுவார்கள்.

No comments: