Saturday, November 25, 2023

உலகக்கிண்ண இறுதிப் போட்டியும் முடிவுறாத சர்ச்சைகளும்


 கிறிக்கெற் உலகக்கிண்ணத் தொடர்  இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.  முன்னைய  உலகக்கிண்ணப் போட்டிகளைப் போலல்லாது, உலகக்கிண்ண  இறுதிப் போட்டி முடிந்து ஒரு வாரம் கடந்த பின்னரும் சர்ச்சைகளும், விமர்சனங்களும்  முடிவில்லாமல் தொடர்கின்றன.

 உலகக்கிண்ணப் போட்டி தொடங்குவதற்கு முன்னரே இந்தியா சம்பியனாகும் என்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டு விட்டது. இந்திய  ஊடகங்களின் வலிமையால் எதிரணிகள்  உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டன. அதன்  பிரதிபலானாக  இந்தியா விளையாடிய  போட்டிகளில் வெற்றி பெற்றது. இந்திய அணி வெற்றியுடன்  பழைய சாதனைகளை   உடைத்து புதிய சாதனைகளை எட்டியது. அரை இறுதிப் போட்டிவரை இந்தியாவின்  வெற்றியைத் தடுத்து நிறுத்த முடியாமல் எதிரணிகள் தோல்வியடைந்தன.

  உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடும்  இந்தியா வெற்றி பெறும் என்ற செய்திகள்  பரவலாக முன்னிலைப்ப‌டுத்தப்பட்டன. அந்த  ஊடக வெளிச்சத்தில்  அவுஸ்திரேலியாவின்  பலம் இருட்டடிப்புச் செய்யப்பட்டது. லீக் போட்டிகளில் தோல்வியடையும் அவுஸ்திரேலியா, நொக் அவுட் போட்டிகளில் வீறுகொண்டெழுந்து  வெற்றி பெறும் என்ற உண்மை  மழுங்கடிக்கப்பட்டது.

உலகக்கிண்ணம்  உட்பட எந்தப் போட்டியும்  வெற்றி, தோல்வியுடன்  முடிவடைந்ததும், வீரர்கள் அடுத்த  போட்டிக்குத் தயாராகி விடுவர்கள். ஆனால்,  இந்தியாவில் நடந்த உலகக்கிண்ண  இறுதிப் போட்டியின்  பின்னரான சர்ச்சைகளும், விமர்சனங்களும்  இன்றுவரை தொடர்கின்றன. இந்தியத் தொலைக் காட்சிகளின் விவாதங்கள் அனைத்தும்  இறுதிப் போட்டிக்கு முன்னரான சம்பவங்களையும், பிரச்சனைகளையும்  புட்டுப் புட்டு வைக்கின்றன.

 உலகக்கிண்ண  இறுதிப் போட்டி  அஹமதாபாத்தில்   மிகப் பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட போது விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அன்று அதனை யாரும்  பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்திய  வீரர்களுக்கு மிகவும்  பரிச்சயமான  மும்பை அல்லது கொல்கத்தாவில் இருதிப் போட்டியை நடத்த வேண்டும் நன்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. நரேந்திர மோடியின் பெயர்  உலகக்கிண்ண வரலாற்றில் இடம்  பெற வேண்டும் என   ஜெய்ஷா விரும்பினார்.  எல்லாம் தலைகீழாக  முடிந்துவிட்டது.

அஹமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் நடந்த  உலகக்கிண்ண  இறுதிப் போட்டியில் எந்த விதப் போராட்டமும்  இன்றி  இந்தியா தோல்வியடைந்தது. இதனை  இந்திய ரசிகர்கள் சற்றும் எதிபார்க்கவில்லை. சோகம், ஏமாற்றம், விரக்தி என்பனவற்றால்  இந்திய ரசிகர்கள் அமைதியாகினர். ஒரு சிலருக்கு  அவுஸ்திரேலியா சம்பியனானது சந்தோஷமல்ல.  இந்தியா தோற்றதை  மகிழ்ச்சியுடன்  கொண்டாடினார்கள். இந்தியாவின் தோல்வியால் அந்த நாட்டின்  எதிர்க் கட்சிகள் நிம்ம்திப் பெருமூச்சு விட்டன.

உலகக்கிண்ணப்  போட்டி  விளையாட்டாக இல்லாமல்  பாரதீய ஜனதாக் கட்சியின் பிரசார விழாவாகக்  கொண்டாடப்பட்டது. இந்திய மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, அனைத்தையும் முன்னுக்கு நின்று  செய்தார்.  இந்திய கிறிக்கெற் சபையுன் தலைவரின் பெயர்  வெளிப்படுத்தப்படவில்லை.

இந்திய அணி சம்பியனானால்  அதனை  தேர்தல் விளம்பரமாக மாற்றுவதற்கு பாரதீய ஜனதா திட்டமிட்டிருந்தது என எதிர்க் கட்சிகள் தெரிவிக்கின்றன. சம்பியன்  கிணத்துக்குப் பூஜை செய்து அதனை இராமர் கோயிலி கொண்டு போய் வைத்து தேர்தல் ஆதாயம் தேடும் வாய்ப்பு   பறிபோயுள்ளது.

சம்பியன்  கிண்ணத்தி அவுஸ்திரேலிய கப்டனின் அகையில் கொடுக்கும்போது  மோடியின் முகத்தில் விரக்தி வெளிப்பட்டது.இது  வரை நடைபெற்ற  உலககிண்ணப் போட்ட்டிகளின் பரிசளிப்பு வைபவத்தில்  அந்த நாட்டுத் தலைவர்களும்,  கிறிக்கெற் நிர்வகிகளும் மேடையில் நிற்பார்கள். அஹம‌தாபாத்தில்  மோடியும்,  அவுஸ்திரேலிய துணைப் பிரதமரும் மட்டும்  சம்பியன்  கிண்ணத்தைக் கொடுத்தார்கள்.

வீரர்கள்  உடைமாற்றும் அறைக்கு  வெளியார்    செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி  வீடியோ,  புகைப்பட கலைஞர்களுடன் சென்று  இந்திய வீரர்களுக்கு ஆறுதல் சொன்னார்.  அவை  எல்லாம்  ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்டன.

பாகிஸ்தான் வீரர்களின்  முன்னால் ஜெய் ஸ்ரீ ராம்  கோஷம்  போட்டு வெறுப்பேற்றினார்கள். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான  போட்டியிலும்  ஜெய் ஸ்ரீ ராம்  கோஷம்,  அனுமன்  மந்திர கோஷம்  எழுப்பப்பட்டது.

 இந்திய வீரர்களின்  நீல  மாற்று உடைக்குப் பதிலாக  காவி நிற மாற்று உடை கொடுக்கப்பட்டதையும்  இந்திய எதிர்க் கட்சிகள்  வன்மையாகக் கண்டித்தன.

உலகக்கிண்ண இறுதிப் போட்டியும், சர்ச்சைகளும்  இப்போதைக்கு ஓயப் போவதில்லை.

No comments: