Friday, November 10, 2023

இலங்கையை வென்ற நியூஸிலாந்து பரிதாபநிலையில் பாகிஸ்தான்.


 பெங்களூரி சின்னசாமி மைதானத்தில் இலங்கைக்கு எதிரான  முக்கியமான  போட்டியில் 5 விக்கெற்களினால் வெற்ரி பெற்ற நியூஸிலாந்து  அரை இருதியில் விளையாடும் சந்தர்ப்பதைக் கெட்டியாகப் பிடித்துள்ளது.

இந்த வெற்றியால் 10 புள்ளிகளை பெற்ற நியூசிலாந்து    99.9%  அரை இறுதி வாய்ப்பை  உறுதி செய்து விட்டது. ஏனெனில் நியூசிலாந்தின் வெற்றியால் 5வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் தங்களுடைய கடைசி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 287 ஓட்டங்கள் அல்லது 284 பந்துகள் வித்தியாசத்தில் பெற்றால் மட்டுமே அரை இறுதியில்  விளையாட  முடியும் என்ற அசாத்தியமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அரை இறுதி வாய்ப்பை இலங்கை ஏற்கெனவே தவற விட்டது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து முதலில் பச்ந்து வீச்சைத் தேர்வு செய்தது.  முதலில் துடுப்பெடுத்தாடிய  இலங்கை 46.4  ஈவர்களில் சகல விக்கெற்களையும் இழ்xஅந்து  171  ஓட்டங்கள் எடுத்தது.    23.2   ஓவர்களில் 5 விக்கெற்களி இழந்த நியூசிலாந்து 172  ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

  இலங்கை அணியின் குஷல் பெரேரா மட்டும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். 51 ஓட்டங் கள் எடுத்த அவர் ஐந்தாவது விக்கெட்டாக வீழ்ந்தார்.  8.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்தது   38ஓட்டங்கள் சேர்த்தார். நியூஸிலாந்து தரப்பில் ட்ரெண்ட் பவுல்ட் 3 விக்கெட்டும், பெர்குசன், சான்ட்னர் , ரச்சின் ரவீந்திரா  ஆகியோர் தலா 2 விக்கெட்களும் எடுத்தனர்.

சச்சினை முறியடித்த ரச்சின்:

நியூஸிலாந்துக்கு எதிரான  போட்டியில்   நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா 34 பந்துகள் களத்தில் நின்று  3 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 42 ஓட்டங்கள் எடுத்தார்.

இதன் மூலம் 50 ஓவர் உலகக் கிண்ணத் தொடரில்   25 வயதை எட்டுவதற்கு முன்பு அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ர சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா.   இலங்கை அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு வரை 8 இன்னிங்ஸ்கள் விளையாடி  74.71 சராசரியில் 523 ஓட்டங்கள்  எடுத்திருந்தார். ரச்சின் ரவீந்திரா மொத்தம் 565 ஓட்டங்கள் எடுத்திருக்கிறார். இது அவர் விளையாடிய உலகக் கோப்பை தொடரின் 9 வது இன்னிங்ஸில் நடந்துள்ளது. 1996 உலகக் கிண்ணத்தில்  சச்சின் தன்னுடைய 23 வயதுக்குள் 523 ஓட்டங்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும். 2019 உலகக் கிண்ணத்தில்  ஜானி பேர்ஸ்டோ தன்னுடைய அறிமுகத் தொடரில் 532  ஓட்டங்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

நியூஸிலாந்துக்கு தொல்லை கொடுத்த தீக்சனா

9வது இடத்தில் களமிறங்கிய சுழல் பந்து வீச்சாளரான மஹீஸ் தீக்சனா 11வதாக வந்த மதுசங்காவுடன் ஜோடி சேர்ந்து நியூசிலாந்துக்கு தொல்லை கொடுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக மிகவும் மெதுவாக விளையாடிய இந்த ஜோடி 33வது ஓவரில் சேர்ந்து 47 ஓவர்கள் வரை நியூசிலாந்துக்கு மிகப்பெரிய தொல்லையை கொடுத்து 10வது விக்கெட்டுக்கு 43 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இலங்கையை 171 ஓட்டங்கள் குவிக்க உதவியது. -

 மதுசங்கா 19 (48) ஓட்டங்களில் அவுட்டானாலும் மறுபுறம் கடைசிவரை அவுட்டாகாமல் நியூசிலாந்துக்கு சவாலை கொடுத்த மஹீஸ் தீக்சனா 3 பவுண்டரியுடன் ஆட்டமிழக்காம்மல் 38* (91) ஓட்டங்கள் எடுத்தார்.   15.1 ஓவர்கள் அதாவது 91 பந்துகளை எதிர்கொண்ட அவர் உலகக் கிண்ணவரலாற்றில் ஒரு போட்டியில் 9வது இடத்தில் களமிறங்கி அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரர் என்ற தனித்துவமான உலக சாதனை படைத்துள்ளார்.   20 வருடங்களுக்கு முன்பாக 2003 உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலிய வீரர் ஆன்ட்டி பைக்கல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 9வது இடத்தில் களமிறங்கி 83 பந்துகளை எதிர்கொண்டு 64 ஓட்டங்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் 9வது இடத்தில் களமிறங்கி அதிக பந்துகளை எதிர்கொண்ட 2வது வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார். இதற்கு முன் 2005ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக ஜெய் பிரகாஷ் யாதவ் 92 பந்துகள் எதிர்கொண்டதே இந்திய சாதனையாகும்.

 

No comments: