Tuesday, November 7, 2023

டைம் அவுட் விதிப்படி ஆட்டமிழந்த முதல் வீரர்

 உலகக் கிண்ணத்தி,பங்களாதேஷ் , இலங்கை அணிகள் மோதும் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில்  'டைம் அவுட்' விதிப்படி ஒரு பந்தைக் கூட எதிர்கொள்ளாத மேத்யூஸூக்கு அவுட் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் இப்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. ஆண்கள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 'டைம் அவுட்' விதிப்படி ஆட்டமிழந்த  ஆகும் முதல் வீரர்  மத்யூஸ்தான். 

இந்தப் போட்டியின் 25 வது ஓவரை ஷகிப் அல் ஹசன் வீசியிருந்தார். இந்த ஓவரின் இரண்டாவது பந்தில் சமரவிக்ரமாவின் விக்கெட்டை ஷகிப் அல் ஹசன் வீழ்த்தியிருந்தார்.   அஞ்சலோ மத்யூஸ் களமிறங்க வேண்டும். மைதானதுகுக்குள் சென்ற பின்னர் அவரின் ஹெல்மட்டில் எதோ பிரச்சனை ஏற்பட வேறு ஹெல்மட்டை எடுத்து வருமாறு  சைகை செய்தார். வேறு ஹெல்மட்டை எடுத்து வந்தபோது பங்களாதேஷ் மத்யூஸ்  தாமதம் ஆவதாக பங்களாதேஷ்  வீரர்கள்  அப்பீல் செய்தனர். கலந்தாலோசித்த நடுவர்களும் 'டைம் அவுட்' முறைப்படி மத்யூஸூக்கு அவுட் கொடுத்தனர்.

  இந்த விதிமுறையை பொறுத்துவரைக்கும் ஒரு துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழந்த பின்போ அல்லது ரிட்டையர் ஹர்ட் முறையில் வெளியேறினாலோ அடுத்து வரக்கூடியவீரர்  3 நிமிடங்களுக்குள் கிரீஸுக்குள் வர வேண்டும் ஐசிசியின் விதி எண் 40.1.1 கூறுகிறது. இந்த விதிமுறை பிளேயிங் கண்டிஷனைப் பொறுத்து 2 நிமிடங்களாக மாற்றப்படத் தகுந்ததே. அதன்படி, உலகக் கிண்ணம் போன்ற போட்டிகள் என்றால் அதுவே இரண்டு நிமிடங்களுக்குள் வீரர்  கிரீஸுக்குள் வந்து அடுத்த பந்தை சந்திக்க வேண்டும் என்பது விதி. அப்படி வராதப்பட்சத்தில் நடுவர்கள் 'டைம்டு அவுட்' எனப்படும் அவுட் வழங்கலாம் என்றும் கூறுகிறது அதே விதி. என்றாலும், இந்த முறையிலான அவுட்டுக்கு பந்துவீச்சாளர்கள் யாருக்கும் எந்த கிரெடிட்டும் வழங்கப்படாது. மாறாக, ரன் அவுட் போல இந்த டைம்டு அவுட் வழங்கப்படும். ஐசிசி வகுத்துள்ள இந்த விதி, நீண்டகாலமாகவே இருந்துவந்தாலும் எந்த அணியின் இதுவரை இந்த விதியை பயன்படுத்தியதில்லை

 இலங்கை அணி 24.2 ஓவர்களில் 135 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. நான்காவது விக்கெட்டாக சமரவிக்ரமா அவுட் ஆன பின், இலங்கையின் அனுபவ  வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்க வந்தார். ஆனால், தான் அணிந்துவந்த ஹெல்மெட் ஸ்ட்ராப் சரியாக இல்லாததால் அதனுடன் போராடிக்கொண்டிருந்தார் மேத்யூஸ். இதனால் முதல் பந்தை எதிர்கொள்ள தாமதமாக்கினார்.

ஹெல்மெட்டில் உள்ள ஸ்டிராப்ஸ் சரிவர வேலை செய்யாததால் மாற்று ஹெல்மெட் வாங்க அணியின் உதவியை நாடிய அவரால் உடனே பேட்டிங்கிற்கு தயாராக முடியவில்லை. இதையடுத்து,  பங்களாதேஷ் அணி கப்டன் அவுட் கேட்டு முறையிட்டதால் டைம்டு அவுட் விதிகளின் படி நடுவர் அவுட் கொடுத்துவிட்டார். ஹெல்மெட் ஸ்ட்ராப்ஸ் பிரச்சினை, அதனால்தான் லேட் ஆனது என்றும் அப்பீலை வாபஸ் பெறும்படியும்  கப்டன் ஷாகிப் அல் ஹசனிடம் மேத்யூஸ் முறையிட்டார். ஆனால் ஷாகிப் அல் ஹசன் 'ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்' எல்லாம் பார்க்காமல் விதிமுறையின் கீழ் அப்பீலை வாபஸ் பெற மாட்டேன் என்று மறுத்துவிட்டார். இதனையடுத்து, விரக்தியில் மேத்யூஸ்வெளியேறினார்.

 

No comments: