Saturday, November 25, 2023

இந்திய அணியின் இரண்டு சாதனைகள்


 விசாகபட்டனட்தில்நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ரி20 போட்டியில்   209 ஓட்டங்கள் எனும் இமாலய  இலக்கை விரட்டிய  இந்தியா  ஒரு பந்து  மீதமிருக்கையில் இந்தியா   1 விக்கெற்றால்  வெற்றி பெற்றது.

 நாணயச்சுழற்சியில் வெற்ரி பெற்ற  இந்திய அணித்தலைவர் சூரியகுமார் யாதவ் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.  முதலில் துடுப்பெசுத்தாடிய அவுஸ்திரேலியா   3 விக்கெர்களை இழந்து 208  ஓட்டங்கள்  எடுத்தது. அதிரடியாக விளையாடிய  ஜோஸ் இங்கிலீஷ்  50  பந்துகலில்  110 ஓட்டங்கள் எடுத்தார்.,ஸ்மித் 52 ஓட்டங்கள் எடுத்தார்.

209 ஓட்டங்களைத் துரத்திய இந்தியாவுக்கு ருதுராஜ் 0, ஜெய்ஸ்வால் 22   ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.      கப்டன் சூரியகுமார் யாதவ் , இசான் கிசான் ஆகியோர் மிடில் ஓவர்களில் அதிரடியாக விளையாடி 3வது விக்கெட்டுக்கு 112ஓட்டங்கள் சேர்த்தது. . அதில் சூரியகுமார் 80 (42) ஓட்டங்களும்,  இஷான் கிசான் 58 (39) ஓட்டங்களும் எடுத்து வெற்றியை நெருங்கி  ஆட்டமிழந்தனர். ஆனாலும் கடைசி நேரத்தில் திலக் வர்மா, அக்சர் படேல் போன்றவர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து இந்தியா தடுமாறியது. அப்போது போட்டியில் பரபரப்பு ஏற்பட்டாலும் மறுபுறம்  ங்கு சிங் 22* (14) ரன்கள் விளாசி சிக்ஸருடன் சூப்பர் ஃபினிஷிங் கொடுத்து இந்தியாவை த்ரில் வெற்றி பெற வைத்தார்.

அவுஸ்திரேலியா நிர்ணயித்த 209 ஓட்டங்களைத்  துரத்திய இந்தியா சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்து புதிய சாதனை படைத்தது.   கடந்த 2019ஆம் ஆண்டு ஹைதராபாத் நகரில் மேற்கு அணிக்கு எதிராக 208 ஓட்டங்களை இந்தியா  சேசிங் செய்திருந்ததே முந்தைய சாதனையாகும். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 10 வருடங்கள் கழித்து முதல் முறையாக ரி20 போட்டியில் 200 ஓட்டங்களை சேசிங் செய்து இந்தியா வென்றுள்ளது.

  கேஎல் ராகுல், ரோஹித்தை மிஞ்சிய சூரியகுமார்

   கடந்த 2013ஆம் ஆண்டு ராஜ்கோட் நகரில் அவுஸ்திரேலியா நிர்ணயித்த 202 ரன்களை சேசிங் செய்ததே முந்தைய அதிகபட்ச இலக்காகும். அதை விட இப்போட்டியையும் சேர்த்து மொத்தமாக 5 முறை இந்தியா 200+ ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்துள்ளது. ரி20 கிரிக்கெட்டில் அதிக முறை 200 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை  சேசிங் செய்த அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.

1. இந்தியா : 5*

 2. தென்னாப்பிரிக்கா : 4

 3. பாகிஸ்தான்/அவுஸ்திரேலியா : தலா 3

ரிங்கு சிங் அடித்த   சிக்ஸ் செல்லாது

கடைசி பந்தில் ஒரு ஓட்டம் அடித்தால் வெற்றி என்ற நிலை இருந்தபோது ரிங்கு சிங் மிட் ஆன் திசையில் பிரமாண்ட சிக்ஸரை ஒன்றினை பறக்கவிட்டு போட்டியை முடித்தார். ஆனால் ரிங்கு சிங் அடித்த சிக்ஸர் செல்லாது என்றும் போட்டி முன்கூட்டியே முடிந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. இப்படி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாதது ஏன்? அதற்கு விதிமுறை கூறும் விளக்கம்   கடைசி பந்தினை சீன் அபோட் நோபாலாக வீசியதால் போட்டி 19.5 ஓவரிலேயே முடிந்து விட்டது. கடைசி பந்தில் 1 ரன் மட்டுமே தேவை என்கிற நிலையில் பந்துவீச்சாளர் நோபால் வீசியதால் அங்கேயே உதிரியாக ஒரு ஓட்டம் வழங்கப்பட்டு விடும். அதனால் அந்த பந்தில் கிடைக்கும் கூடுதல் ஓட்டங்கள் கணக்கில் கொள்ளப்படாது என்று விதிமுறை கூறுகிறது.

                  ஜெய்ஸ்வாலை நம்பி ஏமாந்த ருதுராஜ்

209 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியானது முதல் ஓவரின் ஐந்தாவது பந்திலேயே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.  முதல் விக்கெட்டாக ருதுராஜ் ஆட்டமிழந்த விதத்தின் மூலம் அவர் மோசமான சாதனை பட்டியலில் மூன்றாவது இந்திய வீரராக பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்.

 போட்டியின் போது முதல் ஓவரில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசி அட்டகாசமாக இன்னிங்ஸை ஆரம்பிக்க ஐந்தாவது பந்தினை லெக் சைடு திசையில் தட்டிவிட்டு    ஓடினார்.   பீல்டர் பந்தினை த்ரோ அடிப்பதற்கு முன்னதாக இரண்டாவது ரன்னிற்கு ஓடலாம் என்று மறுபுறம் இருந்த ருதுராஜ் கெய்க்வாட்டை   ஓடிவருமாறு அழைத்தார். ஜெய்ஸ்வாலை நம்பி கெய்க்குவாடும் ஓடிவர பின்னர் ஜெய்ஸ்வால் மீண்டும் தான் ஓடிவந்த கிரீசிக்கு திரும்பினார். இதையும் படிங்க இதனால் அவரை நம்பி ஓடிவந்த ருதுராஜ் கெய்க்வாட் ரன் அவுட் ஆகினார்.   ரி20 கிரிக்கெட்டில் பந்தை சந்திக்காமலே டைமண்ட் டக் அவுட்டாகிய மூன்றாவது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையில் அவர் இணைந்தார்.

No comments: