Saturday, November 11, 2023

இலங்கை கிறிக்கெற்றுக்கு தடை விதித்தது ஐசிசி


 இலங்கை  கிரிக்கெற்   சபைக்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக  சர்வதேச கிறிக்கெற் சபை  இலங்கை கிரிக்கெற்றுக்குத் தடை விதித்தது. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு இலங்கை அணிக்கு நேற்றூ வியாழக்கிழ்மை ( 10) முதல் தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தடை  தொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒரு நிர்வாகத்தின் செயல்பாடுகளில் அந்நாட்டின் அரசு அல்லது அரசியல்வாதிகள் அல்லது அரசாங்க நடவடிக்கைகள் தலையிடக்கூடாது என்பது ஐசிசியின் முக்கியமான விதிமுறையாகும். ஆனால் அதை இலங்கை அரசு மீறி இலங்கை கிறிக்கெற் சபையைக்  கலைத்து தலையிட்டதால் இந்த தடை விதிக்கப்படுகிறது.  இலங்கை அரசு தலையீடுகள் இல்லாமல் இலங்கை கிறிக்கெற் சுதந்திரமாக செயல்படும் வரை இந்த தடை நீடிக்கும் எனத் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

 இலங்கையில் கிரிக்கெட் விவகாரங்களை தன்னாட்சி முறையில் நிர்வகிக்க வேண்டும் மற்றும் நிர்வாகம், ஒழுங்குமுறை மற்றும் நிர்வாகத்தில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிக்கெற் சபையின்  செயல்பாடுகளில் அந்நாட்டின் அரசு அல்லது அரசாங்க நடவடிக்கைகள் தலையிடக்கூடாது என்பது ஐசிசியின் முக்கியமான விதிமுறையாகும். ஆனால் அதை இலங்கை அரசு மீறி இலங்கை வாரியத்தை கலைத்து தலையிட்டதால் இந்த தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.  இலங்கை அரசு தலையீடுகள் இல்லாமல் இலங்கை  கிறிக்கெற் சுதந்திரமாக செயல்படும் வரை இந்த தடை நீடிக்கும் என்றும் ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தத் தடை காரணமாக இலங்கை கிறிக்கெற் அணி சர்வதேசப்  போட்டிகளில் விளையாட முடியாதநிலை   ஏற்பட்டுள்ளது. அதேபவேளை,  இலங்கை கிறிக்கெற் வீரர்கள் சர்வதேசப் போட்டிகளில்   விளையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறும் உலகக்கிண்ணத்தொடரில் இலங்கைக் கிறிக்கெற் அணி மிக  மோடமாகத் தோல்வியடைந்து  லீக் சுற்றுடன் வெளியேறியது. அதனால் விரக்தியடைந்த  இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர்,  இலங்கை கிறிக்கெற்  நிர்வாகத்தைக் கலைத்து விட்டு இடைக்கால சபை ஒன்றை அறிவித்தார். அந்தசபை அமைக்கப்பட்டது ஜனாதிபதிக்குத் தெரியாது. அம்மைச்சரவையில் இந்த  பிரச்சனையை  விவாதித்த ஜனாதிபதி  உபகுழ்ழுவை அமைத்தார். விளையாட்டு அமைச்சரால் கலைக்கப்பட்ட நிர்வாகம், நீதிமன்றத்தில் முறையிட்டது. அமைச்சரின் முடிவுக்கு  நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. பாராளுமன்றத்திலும்  கிரிக்கெற்   பிரச்சனை ஒலித்தது..

உலலக்கிண்ணத் தொடரில்   9 போட்டிகளில்  விளையாடிய 2  போட்டிகளில் வெற்றி பெற்று 7 போட்டிகளில் தோல்வியடைந்தது.   இந்தியாவுக்கு எதிராக  55  ஓட்டங்கள் மட்டும் எடுத்து

து.   302 ஓட்டங்கள் வித்தியாசத்தில்   படுதோல்வியை சந்தித்தது.  1996 உலக சம்பியனான இலங்கை அணி ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ்  போன்ற கத்துக்குட்டிகளாக கருதப்படும் அணிகளுக்கு எதிராக கூட கொஞ்சமும் போராடாமல் அவமான தோல்விகளை சந்தித்தது.

அமைச்சரால் கலைக்கப்பட்ட நிர்வாகம் மீண்டும் இயங்க அனும்திக்கபப்ட வேண்டும்  அல்ல்து  அரசியல்  தலயீடில்லாமல்  புதிய நிர்வாகம் உஏண்டும். இலங்கை உதைபந்தாட்டம்,  இலங்கை ரக்பி ஆகிய  நிர்வாகங்களில்  ஏற்பட்ட அரசியல்  தலையீடுகளால்  தடை செய்யப்பட்டன.

No comments: