மும்பை வான்கடேயில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 5விக்கெற்களை இழந்து 291 ஓட்டங்கள் எடுத்தது. 292 என்ற இமாலய இலக்கி நோக்கி கள இறங்கிய அவுஸ்ரதிரேலியா 18.3.ஓவர்களில் 7விக்கெற்களை இழந்து தடுமாறியபோது களத்துக்கு வந்த மக்ஸ்வெல் சதுராட்டம் ஆடி இரட்டைச் சதத்துடன் வெற்றிக் கனியைப் பறித்தார்
நாணயச் சுழற்சியில் வெற்றி
பெற்ற ஆப்கனிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடியது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்ரஹ்மானுல்லா குர்பாஸ்
21 , ரஹ்மத் ஷா 30, கப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி
26 , அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 22 , மொகமது நபி 12 ஓட்டங்கள்கள் எடுத்து சீரான இடைவெளியில்
ஆட்டமிழந்தனர். ரஷீட்கான் 35 ஓட்டங்கள். மறுபுறம்
அதிரடியாக விளையாடிய இப்ராகிம் ஸத்ரன் ஆட்டமிழக்காமல்
129 ஓட்டங்கள் அடித்தார்
நடப்பு உலகக் கிண்ணத்தில்
ஆப்கானிஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் வீரராக இருந்து வருகிறார் ஸத்ரன். ஸ்டார்க், ஹேசில்வுட் , கம்மின்ஸ் போன்ற அவுஸ்திரேலியாவின்
லெஜெண்ட்களின் பந்துவீச்சை எளிதாக சமாளித்த அவர், சீரான இடைவெளியில் பவுண்டரிகள் மற்றும்
சிக்ஸர்களை விளாசவும் தவறவில்லை. ஜோஷ் ஹேசில்வுட் வீசிய 44வது ஓவரில் தனது முதல் உலகக் கிண்ண சதத்தை பதிவுசெய்தார்.
2015 உலகக் கிண்ணப் போட்டியில் ஸ்கொட்லாந்துக்கு எதிராக சமியுல்லா ஷின்வாரி 147 பந்துகளில் 96 ஒட்டங்கள் எடுத்தே ஆப்கன் வீரரின் அதிக பட்ச ஓட்டமாக இருந்தது. ஸத்ரன் அதனை முறியடித்தார். 21 வயது, 330 நாட்களில் சதம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது குறைந்த வயதில் உலகக் கிண்ணத் தொடரில் சதம் அடித்தவர்களின் பட்டியலில் அயர்லாந்தின் பால் ஸ்டெர்லிங், அவுஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் , இலங்கையின் அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோரைத் தொடர்ந்து நான்காவது இளம் வீரராக இடம்பிடித்தார்
292 எனும்
இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய அவுஸ்திரேலியாவுக்கு
ஆப்கானிஸ்தான் வீரர்கள் நெருக்கடி கொடுத்தனர். நவீன் உல் ஹக் வீசிய 2வது ஓவரின் 2வது பந்தில் ட்ராவிஸ் ஹெட், டக் அவுட் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த மிட்செல் மார்ஸையும் நவீன் உல் ஹக் வெளியேற்றினார். 24 ஓட்டங்கள் எடுத்த மிட்செல் மார்ஷ் எல்பிடபிள்யு மூலம் ஆட்டமிழந்தார்.
ஒன்பதாவது ஓவரை வீசிய அஸ்மத்துல்லா ஓமர்சாய், முதல் பந்தில் 18 ஓட்டங்கள்
எடுத்திருந்த டேவிட் வார்னரை க்ளீன் போல்டாக்கிய அவர், அடுத்த பந்தில் ஜோஷ் இங்லிஷை
டக் அவுட் செய்தார். 10 ஓவர்களுக்குள் 4 விக்கெட்களை
இழந்தது ஆஸ்திரேலியா.
18.3 ஓவர்களில்
7 விக்கெற்களை இழந்து 91 ஓட்டங்கள்
எடுத்து தோல்வியின் விளிம்பில் இருந்த அவுஸ்திரேலியாவை ஆபத்பாந்தவனாக மக்ஸ்வெல் காப்பாற்றினார். மக்ஸ்வெல்
கொடுத்த அருமையான கச் தவறவிடப்பட்டது.
கிளேன் மேஸ்வெல் மிடில்
ஆர்டரில் நங்கூரமாக நின்று அதிரடியாக விளையாடினார். அவருக்கு கப்டன் பட் கமின்ஸ் சிங்கிள்களை
எடுத்து ஸ்ட்ரைக்கை கொடுத்ததை பயன்படுத்திய மக்ஸ்வெல் தனி ஒருவனாக ஆப்கானிஸ்தான் பவுலர்களை
பந்தாடி அரை சதம் கடந்து அவு ஸ்திரேலியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார். நேரம்
செல்ல செல்ல அதிரடியாக விளையாடி சதமடித்த அவர் காலில் காயத்தை சந்தித்து வலியால் களத்திலேயே
படுத்தார். ஆனாலும் அதற்கெல்லாம் அசராமல் முதலுதவிகளை எடுத்துக்கொண்டு ஒற்றைக்கால்
தெம்புடன் தொடர்ந்து அடித்து நொறுக்கிய அவர் 21 பவுண்டரி 10 சிக்ஸருடன் இரட்டை சதமடித்து
201* (128) ஓட்டங்கள் விளாசி 46.5 ஓவரிலேயே அவுஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி வித்தியாசத்தில் காலத்திற்கும் மறக்க முடியாத மகத்தான வெற்றி பெற வைத்தார்.
உலகக் கிண்ண வரலாற்றில் சேசிங் செய்யும் போது இரட்டை சதமடித்த
முதல் வீரர் என்ற உலக சாதனையும் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற வரலாற்றையும்
மேக்ஸ்வெல் படைத்துள்ளார். அவருடன் கமின்ஸ்
12* (68) ஓட்டங்கள் எடுத்து இந்த மகத்தான வெற்றியில் பங்காற்றினார்.இதற்கு முன்
2011 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 158 ஓட்டங்கள்
எடுத்ததே முந்தைய சாதனையாகும்.
வரலாற்றை மாற்றிய இப்ராகிம் சத்ரான்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான
உலகக் குண்ண லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான்
அணி வீரர் இப்ராகிம் சத்ரான் சதம் அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான
இப்ராகிம் சத்ரான் ,ஆட்டமிழக்காது 143 பந்துகளில்
129 ஒட்டங்கள் எடுத்தார்.ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர் உலகக்கிண்ணத் தொடரில் சதம் அடிப்பது
இதுவே முதல் முறை.
291 ஓட்டங்கள் எடுத்ததன்
மூலம் உலகக் கிண்ணத் தொடரில் அதிகபட்ச ஓடங்களைப்
பதிவு செய்தது ஆப்கானிஸ்தான். கடைசி 10 ஓவர்களில் மட்டும் 96 ஓட்டங்கள் சேர்த்த
ஆப்கானிஸ்தான், உலகக் கிண்ணத்தில் கடைசி 10 ஓவர்களில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டங்கள் என்ற சாதனையையும் பதிவு செய்தது.
21 வருடம் 330 நாட்களில் இதை அடித்துள்ள அவர் உலகக் கிண்ண வரலாற்றில் வலுவான அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மிகவும் இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையும் படைத்தார். இதே தொடரில் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்தரா 23 வயதில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.
No comments:
Post a Comment