உலகக் கிண்ண தொடரில் பங்களாதேஷுக்கு
எதிரான போட்டியில் இலங்கை
வீரர் மத்யூஸ் மைதானத்திற்குசெல்ல
தாமதம் ஆனதால்ரைம்ட் அவுட்' என்ற முறையில்
அவுர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இது இலங்கை ரசிகர்கள்
மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சர்வதேச
அளவிலான கிரிக்கெட் போட்டியில் ரைம்ட் அவுட்' முறையில் முதலில் ஆட்டமிழக்கும் வீரராக மேத்யூஸின்
பெயர் பதியப்பட்டுள்ளது.
கிரிக்கெற் ரசிகர்கள் பங்களாதேஷ்
கப்டன் மீது மிகுந்த கோபத்தில்
இருக்கிரார்கள்.
உலகில்
முதல் தர கிறிக்கெற்
போட்டிகளில் பலரும் இதுபோல ரைம்ட்
அவுட்' முறையில் ஆட்டமிழந்துள்ளனர்.
அவர்களின் பட்டியலை கீழே விரிவாக காணலாம்.
ஆண்ட்ரூ ஜோர்டான்:
தென்னாப்பிரிக்காவின்
போர்ட் எலிசபெத் நகரில் 1987௮8ம் ஆண்டில்
கிழக்கு ப்ரொவின்ஸ் – டிரான்ஸ்வால் அணிகள் மோதின. ஆண்ட்ரூ
ஜோர்டான் போட்டி நடைபெறுவதற்கு முதல்நாள்
அவர் புறப்பட்டு வந்துள்ளார். ஆனால், கனமழை காரணமாக
சாலை மிகவும் மோசமாக இருந்ததால்
அவர் போட்டி தொடங்கும் நேரத்திற்கு
மைதானத்திற்கு வர முடியவில்லை. ஆட்டம்
தொடங்கும் நேரத்திற்கு வராத காரணத்தால் அவர்
ரைம்ட் அவுட்' செய்யப்பட்டார்.
ஹேமுலால் யாதவ்:
1997ம் ஆண்டு ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் திரிபுரா – ஒரிசா (இப்போது ஒடிசா) அணிகள் மோதின. இதில், திரிபுரா அணி முதலில் பேட் செய்தது. அப்போது, ஒரிசா அணி 9 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி பேட்ஸ்மேனாக ஹேமுலால் யாதவ் இறங்க வேண்டும். 9வது விக்கெட் இழந்த பிறகு தேநீர் இடைவெளி விடப்பட்டது. இதனால், ஹேமுலால் யாதவ் மைதானத்திற்குள் உள்ளே வராமல் பவுண்டரி எல்லையில் நின்று கொண்டு ஹேமுலால் யாதவ் அணி பயிற்சியாளருடன் பேசிக் கொண்டிருந்தார். நேரமாகியும் அவர் களத்திற்கு வராததால் அவருக்கு ரைம்ட் அவுட்' முறையில் அவுட் கொடுக்கப்பட்டது.
வாஸ்பெர்ட் ட்ராக்ஸ்:
2002ம் ஆண்டு
கிழக்கு லண்டனில் பார்டர் – ப்ரீஸ்டேட் அணிகள் மோதின. அந்த
போட்டியில் இலங்கையில்
நடைபெற்ற போட்டியில் விளையாடிய மேற்கு இந்திய வீரர் வீரர்
வாஸ்பெர்ட் ட்ராக்ஸ் விமானத்தில் 7 ஆயிரம் கிலோ மீற்றர்
பயணம் செய்து லண்டன் செல்ல வேண்டும்.
ஆனால், அவரது விமானம் தாமதமானதால்
அவர் மிகவும் லோ – ஆர்டரில்
அவரது பெயர் அறிவிக்கப்பட்டது. ஆனால்,
அவர் போட்டி தொடங்கும் வரை
வராததால் அவர் ரைம்ட் அவுட்' செய்யப்பட்டார்.
ஏஜே
ஹரிஸ்:
2003ம் ஆண்டு
நாட்டிங்காமில் நடந்த நாட்டிங்காம்ஷையர் – துர்கம்
அணிகள் இடையேயான போட்டியில் நாட்டிங்காம்ஷையர் அணிக்காக ஆண்ட்ரூ ஹரிசுக்கு இடுப்பில்
காயம் ஏற்பட்டது. இதனால், மிடில் ஆர்டரில்
குழப்பம் ஏற்பட்டது. பின்னர், கடைசி வீரராக களமிறங்க வேண்டிய
அவரை களமிறங்க கூறினார்கள். ஆனால், அவர் களமறிங்க
தாமதம் ஆனதால் அவர் ரைம்ட்
அவுட்' முறையில் ஆட்டமிழந்ததாக
கூறப்பட்டது. அப்போது, எதிர்முனையில் கிறிஸ் ரீட் 94 ஓட்டங்களில்
அவுட்டாகாமல் இருந்தார்.
ரியான் ஆஸ்டின்:
2013௨014ம் ஆண்டு கிங்ஸ்டவுனில் நடந்த போட்டியில் கம்பைன்ட் கேம்பஸ் கல்லூரிகள் – விண்ட்வார்ட் அணிகள் மோதின. இந்த போட்டியில் 2வது இன்னிங்சில் 5வது வீரராக களமிறங்கிய ரியான் ஆஸ்டின், களத்திற்கு வர தாமதமானதால் அவருக்கு டைம் அவுட் முறையில் அவுட் வழங்கப்பட்டது. முன்னதாக, ரியான் ஆஸ்டின் முதலில் பேட் செய்த விண்ட்வார்ட் அணிக்கு எதிராக அவர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டைம் அவுட்
முறை என்றால் என்ன?
கிரிக்கெட்
விதியை பொறுத்தவரையில் ஒரு வீரர் ஆட்டமிழந்த
பிறகு மற்றொரு வீரர் 3 நிமிடத்திற்குள்
வர வேண்டும் என்று விதி உள்ளது.
அதற்குள் மாற்று வீரர் வராவிட்டால்
அவரை ஆட்டமிழந்ததாக அறிவிக்க எதிரணி கோரலாம் என்று
விதியில் உள்ளது. இதை பந்துவீசும்
அணியின் கேப்டன் தனது அணியுடன்
சேர்ந்து முடிவெடுப்பார். பொதுவாக
மன்கட், டைம் அவுட் முறைகளுக்கு
ரசிகர்கள் பெரிதும் ஆதரவு அளிப்பதில்லை என்பதே
உண்மை.
No comments:
Post a Comment