இந்திய அணியின் ரன் மெஷினான விராட் கோலி உலகக்கிண்ணம் 2023 இல பல சாதனைகளை படைத்தார். உலகக் போட்டியில் துடுப்பாட்டத்துக்காக அதிக நேரம் கிரீஸில் இருந்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். கோலிக்கு போட்டியாக அருகில் எந்தவொரு வீரரும் அருகில் இல்லை.
ஊடக அறிக்கையின்படி, இந்த உலகக் கிண்ணத்தில் விராட் இதுவரை சுமார் 14 மணி நேரம் 39 நிமிடங்கள் கிரீஸில் செலவிட்டார். இந்த பட்டியலில் மற்ற இந்திய வீரர்கள் மிகவும் பின் தங்கியுள்ளனர். இந்திய அணியின் கப்டன் ரோஹித் சர்மா இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். ரோஹித் 8 மணி நேரம் 23 நிமிடங்கள் செலவிட்டார். இந்திய அணியின் துணை கேப்டன் கேஎல் ராகுல் 7 மணி நேரம் 20 நிமிடங்கள் செலவிட்டு மூன்றாவது இடத்தில் உள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் நான்காவது இடத்திலும், ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சுப்மன் கில் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர் 6 மணி 29 நிமிடங்கள் செலவிட்டுள்ளார். அதேசமயம் கில் 5 மணி நேரம் 52 நிமிடங்கள் செலவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment