அவுஸ்திரேலிய மகளிர் அணியின் கப்டன் மெக் லானிங் [31] திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தனது
ஓய்வு குறித்து லானிங் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலக முடிவு
செய்வது கடினமாக இருந்தது. ஆனால்,
ஓய்வு பெறுவது இதுவே சரியான
நேரம் என்று நினைக்கிறேன். 13 வருடம்
சர்வதேச கிரிக்கெட்டை அனுபவிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்துள்ளது. தற்போது,
ஒரு புதிய ஆரம்பத்திற்காக செல்ல
விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
மெக் தனது 18 வயதில் 2010 இல் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். மெக் லானிங் அவுஸ்திரேலிய அணிக்காக 241 போட்டிகளில் (6 டெஸ்ட், 103 ஒருநாள் மற்றும் 132 டி20) விளையாடி 17 சதங்கள், 38 அரை சதங்களுடன் மொத்தம் 8, 352 ஓட்டங்கள் எடுத்துள்ளார். மேலும், தனது பந்து வீச்சு மூலம் 5 சர்வதேச விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.
2014-ம் ஆண்டு தனது 21-வது வயதில் அவுஸ்திரேலிய அணியின் கப்டன் பதவியை பெற்றார். மேலும் இந்த நேரத்தில் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கப்டன்களில் ஒருவராக உருவெடுத்தார். அவரது தலைமையின் கீழ், அவுஸ்திரேலியா நான்கு டி20 உலகக் கோப்பைகள், 1 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 1 காமன்வெல்த் விளையாட்டுப் பட்டங்களை வென்றது.லானிங்கின் ஓய்வுடன் அவரது 10 ஆண்டுகால கேப்டன்சிப் பணியும் முடிவுக்கு வந்தது. இப்போது இவருக்கு பதிலாக அவுஸ்திரேலிய மகளிர் அணியின் புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்கள் என்பதை பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும். அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்திய சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, அவுஸ்திரேலிய அணி தனது புதிய கப்டனை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment