Monday, November 20, 2023

6 ஆவது முறை சம்பியனாகியது அவுஸ்திரேலியா

அகமதாபாத்தில் நடைபெற்ற உலகக்கிண்ண  இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாடிய அவுஸ்திரேலியா ஆறாவது முறையாக  சம்பியனாகி புதிய வரலாறு படைத்தது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற  அவுஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கப்டன் ரோகித் சர்மா , சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினார்கள். சுப்மன் கில் 4 ஓட்டங்கலில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.  ரோகித் சர்மா 31 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 47 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.  அணியைத் தூக்கி நிருத்த முயன்ற கோலி   விராட் கோலி 54 ஓட்டங்களும்,  மைதானத்தில் நிலமையை உணர்ந்த   கே.எல்.ராகுல் 66 ஓட்டங்கலும் எடுத்து ஆட்டமிழந்தனர்.   இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த வீரர்கள்  சொர்ப  ஓட்டங்களிலாட்டமிழந்து  அதிர்ச்சியளித்தனர்.  50 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த  இந்தியா  240 ஓட்டங்கள் எடுத்தது.

 242 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய அவுஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் ,டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினார்கள் டேவிட் வார்னர் 7,மிட்செல் மார்ஷ் 15  , ஸ்டீவ் ஸ்மித் 4  ஓட்டங்கலில் ஆட்டமிழக்க  இந்தியாவின் கைஓங்கியது.

  டிராவிஸ் ஹெட் கடைசி வரை களத்தில் நின்று ஆஸ்திரேலிய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆறாவது ஓவரில்  வீழ்ந்த அவுஸ்திரேலியா அதன்  பின் வீறுகொண்டெழுந்து,  இந்தியாவைத் துவம்சம் செய்தது.டிராவிஸ் ஹெட்,   மார்னஸ் லாபுசாக்னே ஜோடி  இந்திய வீரர்கலின் பந்துகளை மிகவும் சாதுரியமாக எதிர்கொண்டு வெற்ரிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். 120 பந்துகலில் 137  ஓட்டங்கள் எடுத்து டிராவிஸ் ஹெட்  ஆட்டமிழந்தார். மார்னஸ் லாபுசாக்னே ஆட்டமிழக்காது 58  ஓஆடங்கள் எடுத்தார்.

       இந்தியாவை இரண்டாவது  முறை வீழ்த்திய  ட்ராவிஸ் ஹெட்

டிராவிஸ் ஹெட் சதம் அடித்து ஐசிசி இறுதிப்போட்டியில் சம்பியன் பட்டத்தை இந்தியாவிடம் இருந்து பறிப்பது இது முதல் முறையல்ல. 2023ம் ஆண்டில்   இது இரண்டாவது முறையாக நடந்துள்ளது. ஜூன் 2023 இல் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில், டிராவிஸ் ஹெட்டின் சதம் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக அமைந் இந்தியா தோல்வியடைந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில்  ஹெட்   ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகக்கிண்ண  இறுதிப் போட்டியிலும் ஹெட்   ஆட்ட நாயகன்.

                     சொன்னதை செய்த பட் கமின்ஸ்

உலகக்கிண்ண  இறுதிப் போட்டியில்சிறப்பாக விளையாடிய கோலி     54 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், கம்மின்ஸ் பந்தில்   ஆட்டமிழந்தார்.   இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி திடீரென கமின்ஸ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறியதால், ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்பது புரியாமல் அஹமதாபாத் ரசிகர்கள் மொத்தமாக அமைதியாகினர்.  இதன் மூலம்  தான்சொன்னதைப் போல் 1.3 இலட்சம் ரசிகர்களையும்   கமின்ஸ் அமைதியாக்கி காட்டினார்.  உலகக்கிண்ண திடர் நாயகன் விருது கோலிக்கு வழங்கப்பட்டது.

       அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சாதனை செய்த  ரோஹித் சர்மா

அஹதமாபாத்தில் நடைபெறும் உலகக்கிண்ண  இறுதிப் போட்டியில்  4 பவுண்டரி 3 சிக்சருடன் 47 (31) ஓட்டங்களை 151.61 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்து ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார்.

இந்த 3 சிக்சர்களையும் சேர்த்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 86 சிக்ஸர்கள் அடித்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் கிறிஸ் கெயில் இங்கிலாந்துக்கு எதிராக 85 சிக்சர்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

 அந்த பட்டியல்:

1. ரோகித் சர்மா : 86*, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக

2. கிறிஸ் கெயில் : 85, இங்கிலாந்துக்கு எதிராக

3. ஷாஹித் அப்ரிடி : 63, இலங்கைக்கு எதிராக

 4. சனத் ஜயசூர்ய : 53, பாகிஸ்தானுக்கு எதிராக

 5. சாகித் அப்ரிடி : 51, இந்தியாவுக்கு எதிராக

இந்த தொடரில் 580 ஓட்டங்கள் அடித்துள்ள ரோஹித் சர்மா  ஒரு உலகக் கோப்பையில் அதிக ஓட்டங்கள் அடித்த கப்டன் என்ற கேன் வில்லியம்சன் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

1. ரோஹித் சர்மா : 580 (2023)*

 2. கேன் வில்லியம்சன் : 578

3. மஹலே ஜயவர்த்தன : 548 (2007)

 4. ரிக்கி பொண்டிங் : 539 (2007)

5. ஆரோன் பின்ச் : 507 (2019)

ஐந்தாவது முறை அரைசதத்தைத் தவறவிட்ட ரோஹித்

 

அஹதமாபாத்தில் நடைபெறும் உலகக்கிண்ண  இறுதிப் போட்டியில் இந்திய அணி கப்டன் ரோஹித் சர்மா 31 பந்துகளில் 47 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.  உலகக்கோப்பை தொடரில் அரைசதம் அடிக்க முடியாமல் ரோஹித்  சர்மா வெளியேறுவது 5வது முறையாகும்.

                மைதானத்துக்குள் நுழைந்தவர் கைது

உலகக்கிண்ண  இறுதிப் போட்டி நடைபெறும் அஹ்மதாபாத் மைதானத்தினுள்  நுழைந்த ஒருவர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பாலஸ்தீன கொடி பொறித்த முக கவசத்துடன் ஒருவர் அத்துமீறி மைதானத்துக்குள் நுழைந்து கோலியை சந்தித்தார். பாலஸ்தீன விடுதலையை வலியுறுத்தியும் பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் போரை தடுத்த நிறுத்த வலியுறுத்தியும் டி சர்ட் அணிந்திருந்தார் அந்த மர்ம நபர். உடனடியாக பொலிஸார் கைது செய்தனர்.

                   கபில்தேவை அழைக்காத பிசிசிஐ

உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கு தன்னை அழைக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் கப்டன் கபில் தேவ் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளது.

இந்த போட்டிக்கு சிறையில் உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கப்டன் இம்ரான் கானை தவிர்த்து உலகக் கோப்பையை வென்ற அனைத்து கப்டன்களுக்கும் ஐசிசி, பிசிசிஐ அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியானது. ஆனால், இறுதி போட்டிக்கு தன்னை அழைக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் கப்டன் கபில் தேவ் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளது. 

இதுகுறித்து விரிவாக பேசிய கபில் தேவ், "நான் அழைக்கப்படவில்லை. அவர்கள் என்னை அழைக்கவில்லை அதனால் நான் செல்லவில்லை. அவ்வளவுதான்.

83 உலகக்கோப்பை அணி முழுவதும் என்னுடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால், அது ஒரு பெரிய நிகழ்வு என்பதாலும், பொறுப்புகளை கையாளுவதில் மக்கள் மிகவும் மும்முரமாக இருப்பதாலும், சில சமயங்களில் அவர்கள் மறந்திருப்பார்கள் என நான் நினைக்கிறேன்" என்றார்.

               அகமதாபாத்தில்   பிரபலங்கள்:

உலகக் கோப்பை போட்டியை நடிகர்கள் ஷாருக்கான், விவேக் ஓபராய், சல்மான் கான், நானி உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்

நடிகர் விவேக் ஓபராய் அகமதாபாத் மைதானத்திற்கு சென்ற போது செய்தியாளர்களை சந்தித்தார். நடிகர் சல்மான் கான் மற்றும் நானி உலக கோப்பையை காண சென்றபோது ஒன்றாக சந்தித்து பேசிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது மகன்கள் மற்றும் மனைவியுடன் சென்று உலகக் கோப்பை போட்டியை கண்டு ரசித்தார்.

 

உலகக்கிண்ணம்23,இந்தியா,அவுஸ்திரேலியா,சாதனை,விளையாட்டு

No comments: