ஆசிய பாராலிம்பிக் கமிட்டியின் மாநாடு, பொதுச் சபை ஆகியன சவூய்ஜி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற போது ஆசியவின் சிறந்த தடகள ஆண் விரராக பெங் ஜெங்,சிறந்த பெண் தடகள வீராங்கனையாக அசிலா மிர்சயோரோவா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தியாவைச் சேர்ந்த கை இல்லாத வில்லாளி'ஷீத்தல் தேவி, சிறந்த இளைஞர் விளையாட்டு வீரருக்கான விருதைப்
பெற்றார்.
சிறந்த ஆண் தடகள வீரர், சிறந்த பெண் தடகள வீரர்,
சிறந்த இளைஞர் தடகள வீரர், சிறந்த குழு செயல்திறன், சிறந்த புகைப்படம் எடுத்தல் , முன்மாதிரியான
ஆசிய அதிகாரி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
ஜூலை மாதம் நடைபெற்ற சக்கர
நாற்காலி கூடைப்பந்து உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற ஈரானின் ஆண்கள்
சக்கர நாற்காலி கூடைப்பந்து அணிக்கு சிறந்த குழு செயல்திறன் விருது கிடைத்தது.
பீஜிங் 2022 குளிர்கால பாராலிம்பிக்
விளையாட்டுப் போட்டிகளில் இருந்து, டவுன்ஹில் ஸ்கீயர்களின் சுறுசுறுப்பு, திறமை மற்றும்
வேகத்தைப் படம்பிடித்ததற்காக ஜப்பானைச் சேர்ந்த மசமைன் கவாகுச்சி சிறந்த புகைப்படக்கலைஞர்
விருது பெற்றார்.
ஆசிய அதிகாரிக்கான இறுதி விருது கொரிய பாரா சைக்கிள்
ஓட்டுதல் அணியின் பயிற்சியாளராக இருக்கும் கொரியா குடியரசைச் சேர்ந்த யங்-ஜூ லீக்கு கிடைத்தது. அவரது தலைமையில், ஹாங்சோ
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் நான்கு தங்கம் உட்பட 8 பதக்கங்களை வென்றனர்.
No comments:
Post a Comment