அரசியல்
என்பது மக்களுக்கான இயக்கம். கைசுத்தமான அரசியவாதிகளைக் காண்பது அபூர்வமாக உள்ளது. கீழ் மட்டத்தில் இருந்து கஷ்டப்பட்டு அரசியலில் முன்னுக்கு வந்தவர்கள் தாம் வந்த பாதையைத்
திரும்பிப் பார்ப்பதில்லை. பதவி சுகம், ஆட்சி,அதிகாரம், அதிகரித்த வருமானம் அவர்களை அடிமைப்படுத்தி விடுகிறது.
மாடாக
உழைத்து ஓடாகத் தேய்ந்தாலும் அரசியலில் முன்னேற்றம் இல்லை என்றால் கட்சி மாருவதுதான் ஒரேவழி என முடிவெடுத்துவிடுவார்கள். கட்சியை வெறுத்து என்ன செய்வதெனத் த்ரியாமல் இருப்பவர்களை வலைவீசிப் பிடிப்பதற்கு ஒரு கூட்டம் தீயாக வேலை செய்கிறது. மற்றக் கட்சிகளில் இருந்து ஆட்களை வளைத்துப் போடுவதில் பாரதீய ஜனதா முன்னணியில் இருக்கிறது.
வருமான
வரித்துறை, இலஞ்ச ஒழிப்புத் துறை போன்றவற்றின் உதவியுடன் வடமாநிலங்களில் சில கட்சிகளை பாரதீய ஜனதா இரண்டாக்கி உள்ளது. முக்கைய அரசியல் புள்ளிகளை தட்டித்
தூக்கி யது. எதிர்க் கட்சிகளில் இருக்கும்போது ஊழல் செய்தவர்கள் பாரதீய ஜனதாக் கட்சியில் சேர்ந்ததும் புனிதர்களாகி
விடுகிறார்கள்.
தமிழக
பாரதீய ஜனதாத் தலைவராக எல். முருகன் இருந்தபோது
மற்றக் கட்சியில் இருந்தவர்களை தனது கட்சியில் சேர்த்தார். இப்போது அண்ணாமலை தலைவராக
இருக்கும்போது குற்றவாளிகள் பாரதீய ஜனதாவில் அதிகமாகச் சேர்ந்துள்ளார்கள்.
மாற்றுக்
கட்சியினரை பாரதீய ஜனதா தேடிப்பிடிக்கும் நிலையில் அங்கு இருந்த காயத்திரி,
கெளதமி போன்றவர்கள் வெறியேறுவது பின்னடைவாக உள்ளது.
முக்கியமாக பெண்களுகுப் பாதுகாப்பு
இல்லை என அவர்கள் கூறும் குற்றச் சாட்டு தேர்தலில் பலமாக ஒலிக்கும்
என்பதில் சந்தேகம் இல்லை.
தேர்தல் வரஉள்ள நிலையில், மாற்று கட்சிகளில் உள்ள
அதிருப்தியாளர்களுக்கு வலையை விரிக்கும் படலம் துவங்கியுள்ளது. தேர்தல் சமயங்களில், இதெல்லாம் வழக்கமாக நடக்கக்கூடிய
இயல்புதான் என்றாலும், "அதிருப்திகள்" அதிகமாகி கொண்டிருப்பதாக, பல்வேறு
யூகங்கள் றெக்கை கட்டி பறக்க துவங்கியிருக்கின்றன. தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட
சந்தர்ப்பம் வழங்கப்படவிலை என்றால் கட்சிதாவ பலர் தயாகாக இருப்பர்கள். சிலர் சுயேட்சையாகப்
போட்டியிட்டு தனது கட்சியின் வாக்கு வங்கியைக் குறைப்பார்கள்.
இன்று மத்திய
அமைச்சராக இருக்கும் எல்.முருகன், அன்று தமிழக பாரதீய ஜனதாத் தலைமை பொறுப்பை அலங்கரித்தபோது, தமிழகத்தில்
பாஜகவின் வளர்ச்சி வேகம் எடுத்தது. மாற்று
கட்சியை சேர்ந்தவர்கள் பாரதீய ஜனதாவில் சேர்ந்தார்கள்.
கட்சியில் முக்கியமானவர், முக்கியமில்லாதவர்
என்ற பாகுபாடு இல்லாமல் வகை தொகையாகச் சேர்க்கப்பட்டார்கள்.
எதிர்க் கட்சிகளில் இருந்த முக்கிய தலைவர்களை முக்கிய தலைவர்களை வளைத்ததில் எல்.முருகனுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. விபி துரைசாமி, குக செல்வம் ஆகிய மூத்த தலைவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பாரதீய ஜனதாக் கட்சிக்குத் தாவினார்கள். திமுகவை சேர்ந்த முன்னாள் துணை பொதுச்செயலரும், துணை சபாநாயகருமான வி.பி.துரைசாமி, 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பே பாஜகவில் இணைந்தார். திமுக எம்எல்ஏ: அடுத்த கொஞ்ச நாளிலேயே, உதயநிதியை காரணம்காட்டி, திமுக எம்எல்ஏவாக இருந்த கு.க.செல்வமும் பாஜகவில் இணைந்தார்.
ரஜினி அரசியலுக்கு வருவார் எனப் பெரிதும் நம்பி இருந்த முன்னாள் துணைமேயர் கராத்தே தியாகராஜன், அரசியலில் மின்னிய குஷ்பு ஆகிய இருவரும் காங்கிரஸில் இருந்து பாராதீய ஜனதாவுக்குப் பாய்ந்தார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டசபை உறுப்பினர் மாணிக்கமும் வலையில் விழுந்தார்.
பாரதீய
ஜனதாக் கட்சியின் கொள்கைகளால் கவரப்பட்டு இந்த அரசியல்வாதிகள் கட்சிமாறவில்லை. பதவி
ஆசைகளால் அங்கு சென்றார்கள். கட்சிதாவியவர்களுக்கு உடனடியாகப் பதவிகள் வழங்கப்பட்டன.
இவர்கள் எல்லாம் எதிர்பார்த்தது மிகப்பெரிய பதவிகளைத்தானாம். மத்திய அரசின் ஆணையம்,
பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றில் நியமன பதவிகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்
இருந்ததாக தெரிகிறது. இதற்கு பிறகு நடந்த சட்டசபை தேர்தலிலும் வாய்ப்பு தராததால், ஆட்சி
மாற்றத்திற்கு பிறகு, மனம்மாறி, அங்கிருந்து வெளியேறி, மறுபடியும் திமுகவுக்குச் சென்றார் கு.க.செல்வம்.. அதேபோல, மாணிக்கமும் மறுபடியும்
அதிமுகவுக்கே திரும்பிவிட்டார். குஷ்புக்கு மட்டுமே, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்
பதவி கிடைத்தது.மாற்று கட்சிகளில் இருந்து சென்ற பலருக்கு மத்திய அரசில் பதவி கிடைக்காததால்
அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் தேர்தல் வரப்போவதால், இதில்
வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் உள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல்,
தேசிய எஸ்சி- எஸ்.டி., ஆணைய தலைவர் பதவியில் தன்னை நியமிக்குமாறு, பிரதமர் மோடிக்கு
விபி துரைசாமி கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மூத்த
தலைவர் விபி துரைசாமியை பொறுத்தவரை, கடந்த முறை தேர்தலின்போதே, கெங்கவல்லி தொகுதியை
தன்னுடைய மகனுக்காக கேட்டிருந்தாராம். ஆனால் கிடைக்கவில்லை. இப்போது, மறுபடியும் மகனுக்காக
நீலகிரியை கேட்க நினைப்பதாக தெரிகிறது. எல்.முருகனும், துரைசாமியும் தெலுங்கு பேசும்
அருந்ததியர்கள்.. இருவருமே உறவினர்கள். இருவருமே ஒரே தொகுதிக்கு குறி வைத்துள்ள நிலையில்,
கமலாலயம் என்ன முடிவெடுக்க போகிறதோ தெரியவில்லை. ஆனால், இவர்கள் இருவரில் யாருக்கு
நீலகிரியை தந்தாலும், அதை அசால்ட்டாக முறியடித்து வெற்றி வாகை சூட, திமுகவும், அதிமுகவும்
துரிதமாகி வருகின்றனவாம். அங்கு ஆர். ராசாவை வீழ்த்துவது கடினம்.
அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து திராவிட
முனேற்றக் கழகத்துக்குச் சென்ற செந்தில் பாலாஜி, சேகர் பாபு உட்பட எட்டுப்பேர் பலமான அமைசராக வலம் வருகின்றனர்.வருமான
வரித்துறை, இலஞ்ச ஒழிப்புத் துறை போன்றவற்றை ஏவிவிட்டு எதிர்க் கட்சியின் பலமான் அரசியல்வாதிகளைத் தன் பக்கம் இழுக்கும் வேலையை பாரதீய ஜனதாக் கட்சி திட்டமிட்டு
செய்கிறது. பாரதீய ஜனதாவுக்குச் சென்றதால் வடமாநிலத் தலைவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தைச்
சேர்ந்தவர்கள் துணிவுடன் மத்திய அரசை எதிர்த்து அரசியல் செய்கிறாகள்.
செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். அமைச்சர்
ஏ.வ வேலு, எம்.பி ஜெகத்ரட்சகன் ஆகியோரை மத்திய
அரசு குறிவைத்து வீடுகளிலும், அலுவலகங்களிலும்
சோதனை செய்கிறது.
திராவிட
முன்னேற்றக் கழகத்தில் இருந்து எம்.ஜி.ஆரும், வைகோவும் வெளியேறியபோது முக்கிய நிர்வகிகளும் இலட்சக் கணக்கான தொண்டர்களூம் அவர்களுக்குப் பின்னால் சென்றார்கள்.எம்.ஜி.ஆரும்,
வைகோவும் புதிய கட்சிகளை ஆரம்பித்தார்கள்.
எம்.ஜி.ஆர் உயிரோடு இருக்கும்வரை அவரது கட்சியை
அசைக்க முடியவில்லை. வைகோ இப்போது திராவிட
முன்னேற்றக் கழகத்தின் பிரசாரப் பீரங்கியாக
மாறிவிட்டார்.
காங்கிரஸில் இருந்து மூப்பனார் வெளியேறி கட்சி தொடங்கியபோது
முக்கிய தலைவர்களும், இலட்சக் கணகான காங்கிரஸ் தொண்டர்களும் அவரின் பின்னால் சென்றார்கள். இப்போ
அவரின் மகன் வாசன் தனி ஒருவ்னாக கட்சியில்
இருக்கிறார்.
கட்சிமாறும் இன்றைய தலைவர்களின் பின்னால் யாருமே இல்லை. அவர்கள் மட்டும் பத்திரிகளுக்குப் போஸ் கொடுக்கிறார்கள்.
கட்சி மாறுவது அரசியலில் புதியதல்ல. கட்சிமாறிய பின்னர் வளர்த்த கட்சியை குற்றம் சொல்லி விமர்சிப்பதும் புதியதல்ல. பதவி, சொத்து, சுகம் அகியவற்ருக்காகப் போடும் போலிநாடகம் என்பதை அப்பாவிப் பொது மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்.
No comments:
Post a Comment