Tuesday, November 28, 2023

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சாதனை படைத்தது இந்திய இளம் படை


 திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான  இரண்டாவது  ரி20 போட்டியில் இந்தியா 44  ஓட்டங்களால் வெற்றி பெற்றது.முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில்      நான்கு விக்கெற்கடை இழந்து 235 ஓட்டங்கள் எடுத்தது  9 191அவுஸ்திரேலியா சகல விக்கெற்களையும்   இழந்து 191 ஓட்டங்கள்  எடுத்தது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய  0அவுஸ்திரேலிய அணியின் கப்டன் மேத்யூ வேட் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார். -  முதலில் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள்  அதிரடியாக  ஓட்டங்களைச் சேர்த்தனர்.   துவக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் , ஜெய்ஸ்வால் ஆகியோரது சிறப்பான பார்ட்னர்ஷிப் காரணமாக இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 7 ஆண்டு கால சாதனையை முறியடித்து அசத்தியுள்ளது. அதிரடியாக விளையாடிய  ஜெய்ஸ்வால் 25 பந்துகளில்  53 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார்  ஆறு ஓவர்களின் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 77 ஓட்டங்கள் குவித்து அசத்தியது. அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் பவர்பிளேவின் போது அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இன்றைய போட்டியில் இந்த இளம் படைத்த அடித்த 77 ஓட்டங்கள் பதிவாகியுள்ளது.

2016-ஆம் ஆண்டு சிட்னி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி பவர்பிளேவில் ஒரு விக்கெட் இழந்து 74 ஓட்டங்கள் குவித்து இருந்ததே சாதனையாக இருந்த வேளையில் 7 ஆண்டுகால சாதனையை இன்று இந்திய அணி முறியடித்துள்ளது. ருதுராஜ் கெய்க வாட் 53  ஓட்டன்fகளு, இஷான்கிட்தான் 52 ஓட்டங்களும் சூரியகூமார் யாதவ்  19  ஓட்டங்களும் எடுத்தனர். அதிரடி மன்ன ரிக்கு சுங்  9 பந்துகளில்  31  ஓட்டங்கள் எடுத்தார். இந்திய்ச்ச் 20 ஓவ்ச்ர்க்ச்Zளிஒ 235 ஓட்டங்கள் எடுத்தது.

 236ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய அவுஸ்திரேலியா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 191ஓட்டங்கள் மட்டுமே அடித்ததால் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.  ரி20 கிரிக்கெட்டில் பவர்பிளே ஓவர்களுக்குள்  இந்திய வீரர்களாக ரோஹித் , ராகுல் ஆகிய இருவரேஅரைச் சதமடித்தனர்.        பவர்பிளே ஓவர்களுக்குM  அரைசதம் அடித்த மூன்ராவது ஆவது இந்திய வீரராக ஜெய்ஸ்வால்  இணைந்துள்ளார்.

No comments: