சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் ஹால் ஆஃப் ஃபேம் விருதுக்கு இந்த ஆண்டு இரண்டு இந்தியர்களும் ஒரு இலங்கை வீரரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஐசிசி கிரிக்கெட்டில்
இருந்து ஓய்வு பெற்ற ஜாம்பவான்களை
ஹால் ஆஃப் ஃபேம் என்ற
பட்டத்தை வழங்கி கௌரவிக்கும்.
இந்திய
கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க
வீரர் சேவாக்,இலங்கை கிரிக்கெட்
அணியின் ஜாம்பவான் அரவிந்த டீ சில்வா, இந்திய
மகளிர் அணியின் முன்னாள் கப்டனான
டயானா எடுல்ஜி ஆகிய மூவருக்கு
இந்த விருது கிடைத்திருக்கிறது.
தனக்கு
வழங்கப்பட்டிருக்கும் கௌரவம் குறித்து பேசி
உள்ள சேவாக், “தமக்கு இந்த பட்டத்தை
வழங்கிய ஐசிசிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என் வாழ்க்கையில் கிரிக்கெட் பந்தை அடிப்பதை தான்
என் காதலாக நான் பார்த்து
வந்தேன். அதற்கு நான் நன்றியுடன்
இருக்கின்றேன்” என்று சேவாக் கூறியுள்ளார்.
இதை
தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் அணியின்
ஜாம்பவான் அரவிந்த டீ சில்வாக்கு
ஹால் ஆஃப் ஃபேம் விருது
கிடைத்திருக்கிறது. 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி
6,363 ஓட்டங்களும்,
38 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி
9684 ஓட்டங்கள் அடித்திருக்கிறார். இலங்கை அணி 1996 உலக
கோப்பை வென்ற முக்கிய காரணமாக
அரவிந்த் டி செல்வா இருந்தார்.
இந்திய மகளிர் அணியின் முன்னாள் கப்டனான டயானா எடுல்ஜிக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது. மகளிர் கிரிக்கெட்டின் நிர்வாகியாக பணிபுரிந்து பல்வேறு மாற்றங்களை செய்திருந்தார். இதனால் அவருக்கு இந்த விருது கிடைக்கிறது.
No comments:
Post a Comment