இந்தியக் கிறிக்கெற் அணியின்
பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் ட்ராவிட்
வெளியேறத் தயாராகிறார். 2003இல் வீரராக அவுஸ்திரேலியாவிடம்இறிதிப் போட்டொயில்
தோல்வியை சந்தித்த ராகுல் ட்ராவிட் 2007இல் கப்டனாக படுதோல்வியை சந்தித்து தற்போது
பயிற்சியாளராக 2023 உலகக் கிண்ணத்தை வெல்ல
முடியாமல் விடை பெற உள்ளார்.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணப் போட்டியிடன் விடைபெற்ற ரவி சாஸ்திரிக்கு பின் புதிய பயிற்சியாளராக
பொறுப்பேற்ற ராகுல் ட்ராவிட் பதவி காலம் இத்தொடருடன் நிறைவு பெற்றுள்ளது. ராகுல் ட்ராவிட் தலைமையில் 2023 ஆசியக் கிண்ணம்
தவிர்த்து 2022 ஆசிய ,ரி20 உலகக் கிண்ணம் , 2023 டெஸ்ட் சம்பியன்ஷிப் ,
2023 உலகக் கிண்ணம் இருதிப் போட்டிகளில் இந்தியா தோல்விகளையே சந்தித்தது.
இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக
வருவதற்கு விவிஎஸ் லட்சுமன் , ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோருக்கிடையில் போட்டி நிலவி வருகிறது. அதில் 2022 ஐபிஎல் கோப்பையை
குஜராத்துக்காக வென்ற அனுபவமிக்க நெஹ்ராவை விட தற்போது என்சிஏ இயக்குனராகவும் இந்திய
வீரர்களால் மதிக்கப்படும் அளவுக்கு தகுதியும் திறமையும் கொண்டுள்ள லக்ஷ்மன் புதிய பயிற்சியாளராக
நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ராகுல் ட்ராவிட் அப்பதவியில்
நீடிக்க விரும்பவில்லை. மேலும் தம்முடைய சொந்த ஊரான பெங்களூருவில் இருக்கும் என்சிஏவில்
ஏற்கனவே செய்த அதே இயக்குனர் வேலையை செய்வதற்கு அவர் விரும்புகிறார்” என்று கூறினார்.
மேலும் விக்ரம் ரத்தோர், பாராஸ் மாம்ப்ரே போன்ற துணைப் பயிற்சியாளர்கள் லக்ஷ்மண் விரும்பினால்
மட்டுமே மாற்றம் செய்யப்படுவார்கள் இல்லையேல் தொடர்வார்கள் என்று தெரிய வருவது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத்தில் பிசிசிஐ நிர்வாகிகளைச் சந்தித்த லக்ஷ்மண் இதைப்பற்றி பேசியுள்ளார். அதில் இந்திய
அணியின் நீண்ட கால பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு அவர் தன்னுடைய விருப்பத்தை
தெரிவித்துள்ளார்” என்ற தகவல் வெளியாகி உள்ளது.
லக்ஷ்மனின் பயிற்சியாளர் பயணம் அடுத்த தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் துவங்கலாம். ட்ராவிட் அப்பதவியில் நீடிக்க விரும்பவில்லை. மேலும் தம்முடைய சொந்த ஊரான பெங்களூருவில் இருக்கும் என்சிஏவில் ஏற்கனவே செய்த அதே இயக்குனர் வேலையை செய்வதற்கு அவர் விரும்புகிறார்” என்று கூறினார். மேலும் விக்ரம் ரத்தோர், பாராஸ் மாம்ப்ரே போன்ற துணைப் பயிற்சியாளர்கள் லக்ஷ்மண் விரும்பினால் மட்டுமே மாற்றம் செய்யப்படுவார்கள் இல்லையேல் தொடர்வார்கள் என்று தெரியவருகிறது.
No comments:
Post a Comment