ஈடன்கார்டனில் நடைபெற்ற அபரபரப்பான இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவை வீழ்த்திய அவுஸ்திரேலிய 8 ஆவது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றது.
நாணயச்
சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்கா 49.5 ஓவர்களில்
சகல விகெற்களையும் இழந்து 212 ஓட்டங்கள்
எடுத்தது. மில்லர் 101 ஓட்டங்கள்
எடுத்தார். 213 எனும் இலகுவான இலக்கை
எதிர் கொண்டு களம் இறங்கிய
அவுஸ்திரேலியா, 42.7 ஓவர்களில்
7 விக்கெற்களி இழந்து 215 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கப்டன்
பவுமா வழக்கம் போல ஸ்டார்க்
வேகத்தில் டக் அவுட்டாகி பெரிய
பின்னடைவை ஏற்படுத்தினார். ஆனால்
அதிரடியாக விளையாடிக் காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட குயிண்டன்
டீ காக் 3 வெளியேற அடுத்ததாக
வந்த ஐடன் மார்க்ரம் 10
ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். நங்கூரமாக விளையாடக்கூடிய வேன் டெர் டுஷன் 6 ஓட்டங்களில்
வெளியேரியதால் 11.5 ஓவர்களில்
4 விக்கெர்களை இழந்த தென் ஆபிரிக்கா
24 ஓட்டங்கள்
எடுத்துத் தடுமாரியது. ஆனாலும், டேவிட்
மில்லர், ஹென்றிச் கிளாஸன் ஆகியோர் நங்கூரமாக
விளையாடி அவுஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்தனர்.
5வது விக்கெட்டுக்கு 95 ஓட்டங்கள் அடித்தபோது போது
கிளாசினை 47 ஓட்டங்களில் அவுட்டாக்கிய டிராவிஸ் ஹெட் அடுத்ததாக வந்த
மார்க்கோ யான்சனை கோல்டன் டக்
அவுட்டாக்கினார்.
6 விக்கெற்களை இழந்து 119 ஓட்டங்கள் எடுத்து மீண்டும் தடுமாறிய தென் ஆபிரிக்காவுக்கு டேவிட் மில்லர் தொடர்ந்து அரை சதம் கடந்து அசத்திய நிலையில் எதிர்ப்புறம் வந்த ஜெரால்டு கோட்சி 7வது விக்கெட்டுக்கு 53 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 19 ஓட்டங் களில் ஆட்டமிழந்தார். ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்த மில்லர் பவுண்டரி 5 சிக்சருடன் சதமடித்து 101 (116) ஓட்டங்கள் ஆட்டமிழந்தார். ஐசிசி உலகக் கிண்ண வரலாற்றில் நாக் அவுட் போட்டியில் சதமடித்த முதல் தென்னாபிரிக்க வீரர் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையை மில்லர் படைத்தார்.
ஜக்
கலிஸ், ஏபி டீ வில்லியர்ஸ்
உட்பட எந்த தென்னாப்பிரிக்க வீரரும்
உலகக் கிண்ண நாக் அவுட்
போட்டியில் சதமடித்ததில்லை. உலகக் கிண்ண வரலாற்றில்
நாக் அவுட் போட்டியில் 6வது
இடத்தில் களமிறங்கி சதமடித்த முதல் வீரர் என்ற
உலக சாதனையும் அவர் படைத்தார். அவுஸ்திரேலியா
சார்பில் மிட்சேல்
ஸ்டார்க் 3, ஜோஸ் ஹேசல்வுட் 2, பட்
கமின்ஸ் 3, டிராவிஸ் ஹெட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
லபுசேன்
[1]மேக்ஸ்வெல் [18]ஆகியோரை ஷம்ஷி வெளியேற்ற தென்
ஆபிரிக்காவின் கைஓங்கியது. ஸ்மித்,
இங்லிஷ் கூட்டணி சீராக ஓட்டங்கள்
சேர்க்க ஆஸ்திரேலியா அணி விக்கெட்டுகளை
இழக்காமல் 10 ஓவர்கள் விளையாடியது. அதன்
பின்னர் வந்த ஸ்டார்க் - இங்லிஷ்
கூட்டணி வெற்றியை நோக்கி முன்னேற்றும் வேலைகளை
சிறப்பாகச் செய்தது. 28 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் இங்லிஷ்
தனது விக்கெட்டினை இழக்க, போட்டி பரபரப்பானது.
இறுதி கட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 47.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ஓட்டங்கள் சேர்த்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் அவுஸ்திரேலியா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் அவுஸ்திரேலியா அணி 8வது முறையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா 1975, 1987, 1996, 1999, 2003, 2007, 2015 மற்றும் 2023 என மொத்தம் 8 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 19ஆம் திகதி அதாவது ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியாவை அவுஸ்திரேலியா எதிர்கொள்ளவுள்ளது.
No comments:
Post a Comment