உலகக் கிண்ண குரூப் 'சி’ பிரிவு ஆ போட்டியில், பிறேஸில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹெட்டி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தத் தோல்வியின் மூலம் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறிய முதல் அணி என்ற பின்னடைவை ஹைட்டி சந்தித்துள்ளது.
முதல்
ஆட்டத்தில் மொராக்கோ அணியுடன் டிரா செய்திருந்த பிறேஸில் அணிக்கு, இப்போட்டியில் வெற்றி
பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே பிறேஸில் வீரர்கள் சிறப்பான
ஆதிக்கத்தை செலுத்தினர். பிறேஸில் அணியின் மேத்யூஸ் குன்ஹா ஆட்டத்தின் 23 ,36-வது நிமிடங்களில்
அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து அசத்தினார்.
முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் (47-வது நிமிடம்)
வினிசியஸ் ஜூனியர் தனது பங்கிற்கு ஒரு கோல் அடிக்க, முதல் பாதியிலேயே பிரேசில் 3-0
என வலுவான முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்காததால்,
ஆட்டம் அதே ஸ்கோருடன் நிறைவடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் பிறேஸில் அணி குரூப் 'சி’
பிரிவில் கோல் வித்தியாச அடிப்படையில் 4 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
உலகக்
கிண்ணப் போட்டிகளில் பிறேஸில் அணி 3 அல்லது அதற்கு மேற்பட்ட கோல்களைப் பதிவு செய்வது
இது 41-வது முறையாகும். இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் அதிக போட்டிகளில் 3-க்கும்
மேற்பட்ட கோல்களை அடித்த அணிகளின் வரிசையில் பிறேஸில் தனது சாதனையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இப்போட்டியில் பிறேஸில்அணி 60 சதவீத பந்து கட்டுப்பாட்டுடன்,
90 சதவீத துல்லியமான பாஸ்களை வழங்கி முழு ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.

No comments:
Post a Comment