மான்டேரி மைதானத்தில் திங்கட்கிழமை
நடைபெற்ற உலகக் கிண்ண
32 அணிகள் மோதும் போட்டியில், மொராக்கோ அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது .
, ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 1-1 என சமநிலை வகித்ததால், வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை பயன்படுத்தப்பட்டது. இதில் 3-2 என்ற கணக்கில் மொராக்கோ அணி வெற்றி பெற்று ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் வேகத்தை இரு அணிகளும் அதிகரித்தன. போட்டியின் 72 ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் சம்மர்வில் கொடுத்த அசிஸ்ட்டை பயன்படுத்தி, கோடி காக்போ மிகச்சிறப்பான முதலாவது கோலை அடித்து நெதர்லாந்து அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார்.
மொராக்கோ அணி ஆட்டத்தை சமன் செய்ய தீவிரமாகப் போராடியது. ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் (90-வது நிமிடம்) மொராக்கோ வீரர் தால்பி வீசிய பந்தை, இசா தியோப் ஹெடர் மூலம் கோலாக மாற்றி நெதர்லாந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதன் மூலம் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.
போட்டி சமநிலையானதைத் தொடர்ந்து கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிடங்களிலும் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. கு
நெதர்லாந்து கோல்கீப்பர் வெர்ப்ரூஜென் மொராக்கோவின் சில மிகச்சிறந்த கோல் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தினார்.
இந்த பரபரப்பான வெற்றியைத் தொடர்ந்து மொராக்கோ அணி உலகக் கோப்பையின் ரவுண்ட் ஒஃப் 16 சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக முன்னேறியுள்ளது. அடுத்ததாக நடைபெறவுள்ள ரவுண்ட் ஒஃப் 16 போட்டியில் கனடா அணியை மொராக்கோ எதிர்கொள்ளவுள்ளது.

No comments:
Post a Comment