Monday, June 29, 2026

உலகக் கிண்ணப் போட்டியில் காயமடைந்த வீரர்கள்


உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி வ்றுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நொக் அவுட் போட்டிக்கு அணிகள் தயாராகும் வேளையில் காயம் காரணமாக சில வீரர்கள் வெளியேறிவிட்டனர். சிலர் விளையாடுவது சந்தேகமாக இருக்கிறது. இதனால்  சில அணிகளுக்கு பின்ன்டைவு ஏற்பட்டுள்ளது.

 ஜப்பானுக்கு எதிரான 1-1 என்ற சமநிலை ஆட்டத்தின்போது தொடைத்தசைப் பகுதியில் காயம் ஏற்பட்டதால்,  சுவீடன் தடுப்பாட்ட வீரர் இசாக் ஹியன் இனி ஃபிஃபா உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்க மாட்டார் என சுவீடன்  உதைபந்தாட்டச் சங்கம் அறிவித்துள்ளது.

மூன்றாவது இடத்தைப் பிடித்த எட்டு சிறந்த அணிகளில் ஒன்றாக சுவீடன் 32 அணிகள் கொண்ட சுற்றுக்கு முன்னேறி, பிரான்ஸை எதிர்கொள்ளவுள்ளது.

 உருகுவேயை வீழ்த்தி 'H' பிரிவில் முதலிடம் பிடித்தது ஸ்பெய்ன். ஆனால், யெரெமி பினோ உலகக்  கிண்ணப் போட்டிகளில் இருந்து வெளியேறும் நிலையை எதிர்கொண்டுள்ளார்,  இன்னொரு வீரரான  நிக்கோ வில்லியம்ஸ் மீண்டும் காயமடைந்துள்ளார்.

யெரெமி பினோவுக்கு தொடரிலிருந்து விலகக்கூடிய தோள்பட்டை காயம் ஏற்பட்டதாலும், நிக்கோ வில்லியம்ஸுக்கு மீண்டும் ஒரு தசைப் பிரச்சினை ஏற்பட்டதாலும்,    கடைசி 32 சுற்றுக்குத் தகுதி பெற்ற  ஸ்பெயினுக்கு  பெரும் பின்னடைவாக உள்ளது.

இந்த இரட்டைப் பின்னடைவு, ஸ்பெயினின் பக்கவாட்டுத் தாக்குதல் வாய்ப்புகளை மேலும் குறைக்கிறது. தொடைத்தசை காயத்தால் பாதிக்கப்பட்ட லமின் யமால், இரண்டு மாதங்களுக்கும் மேலாக முழு 90 நிமிடங்களும் விளையாடாத நிலையில், இன்னும் கவனமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார். அதே சமயம், லிவர்பூலின் புதிய வீரரான விக்டர் முனோஸ், தசை காயத்திலிருந்து மீண்டு வருவதில் ஏற்பட்ட பின்னடைவின் காரணமாக, இத்தொடரில் இன்னும் பங்கேற்கவில்லை.

 ஈரானுக்கு எதிராக  நடைபெற்ற 1-1 என்ற சமநிலை ஆட்டத்தின்போது, இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக லிவர்பூலின் முன்னாள் நட்சத்திர வீரரும் எகிப்து முன்கள வீரருமான முகமது சலா வெளியேறினார்.

இப்போட்டியின் 60-வது நிமிடத்தில் எகிப்து அணியின் கப்டன் முகமது சாலாவுக்கு இடது தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு மாற்று வீரர் களம் இறக்கப்பட்டார். காலில் ஐஸ் பேக்குடன் பெஞ்சில் அமர்ந்திருந்த சாலாவின் காயம் எகிப்து அணிக்கு அடுத்த சுற்றுக்கு முன்பாக பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நொக்-அவுட் சுற்றில் சலாஹ் விளையாட முடியாவிட்டால், அது எகிப்துக்கு ஒரு கடுமையான பின்னடைவாகவே அமையும்.

நான்கு முறை பிரீமியர் லீக் கோல்டன் பூட் விருதை வென்ற அவர், நியூசிலாந்துக்கு எதிரான 3-1 என்ற கோல் கணக்கிலான வெற்றியில், ஃபேரோஸ் அணியின் முதல் உலகக் கோப்பை வெற்றியின்போது தனது 68வது சர்வதேச கோலை அடித்தார். 34 வயதான அவர், இந்தத் தொடரில் மேலும் இரண்டு கோல்களுக்கு உதவியுள்ளார்.

 

ரமணி

28/6/26

  

 

   

  

No comments: