உலகக்கிண்ணத் தொடரின் குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில், செக் குடியரசு அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த மெக்சிகோ, லீக் சுற்றில் விளையாடிய 3 போட்டிகளிலும் வென்று அசத்தியுள்ளது.
இந்தப் போட்டியில் மெக்சிகோ அணி பல வரலாற்று மைல்கல் சாதனைகளை செய்தது. 78வது நிமிடத்தில் மாற்று வீரராகக் களம் இறங்கிய மெக்சிகோ கோல்கீப்பர் கில்லர்மோ ஓச்சோவா, உலகக் கிண்ண வரலாற்றில் தனது 6வது உலகக் கிண்ணத் தொடரில் விளையாடி புதிய சாதனை படைத்தார். 40 வயதான ஓச்சோவா, இதன் மூலம் மெஸ்ஸி, ரொனால்டோ ஆகியோரின் சாதனையைச் சமன் செய்தார்.
மற்றொருபுறம், மெக்சிகோவின் 17 வயது இளம் மிட்பீல்டர் கில்பெர்டோ மோரா, உலகக் கிண்ணப் போட்டியில் தொடக்க வீரராகக் களம் இறங்கியதன் மூலம், கடந்த 24 ஆண்டுகளில் உலகக் கிண்ணப் போட்டியில் களம் இறங்கிய மிக இளைய வீரர் (17 வயது 101 நாட்கள்) என்ற சாதனையைப் படைத்தார். ஆட்டத்தின் 2வது கோலுக்கு இவரே முக்கியக் காரணமாக இருந்தார்.

No comments:
Post a Comment