Friday, April 8, 2022

இம்ரான்கானின் பதவிக்கு காத்திருக்கும் ஆபத்து

பாகிஸ்தானின் அரசியலையும், இரானுவத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. இராணுவத்தின் ஆதரவு இல்லாமல் பாகிஸ்தானில் அரசியல் செய்ய முடியாது. பாகிஸ்தானின் பிரதமராக  இம்ரான்கான் பதவி ஏற்றபோது இராணுவத்தின் செல்லப்பிளை என்ற  கூற்று  முன்னின்றது. பாகிஸ்தானின் முக்கைய பதவியில் ஒருவரை நியமிப்பதற்கு பிரதமர் இம்ரான்கான்  முயற்சி செய்தபோது ஏற்பட்ட எதிர்ப்பலையால் பிரதமர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் உளவு படைத் தளபதியாக நதீம் அஞ்சும் கடந்த வருடம் நியமிக்கப்பட இருந்தார். ஆனால் இவரின் நியமனத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்ப்பு தெரிவித்தார். தற்போதைய உளவுப்படை தளபதி பைஸ் ஹமீத்தான் தொடர்ந்து இதில் தளபதியாக நீடிக்க வேண்டும் என்று இம்ரான் கான் கருதினார். ஆனால் ராணுவ ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா இதற்கு நேரடியாக எதிர்ப்புத் தெரிவித்தார். நதீம் அஞ்சும்தான் புதிய ஐஎஸ்ஐ தலைவராக வேண்டும் என்று அவர் அழுத்தம் கொடுத்தார். மோதல் வெடித்தது நதீம் அஞ்சுமிற்கு ஆதரவாக ராணுவ ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா பல இடங்களில் தொடர்ந்து பேசி வந்தார் வருகிறார். ஆனால் இதை மதிக்காமல் இம்ரான் கான் ஹமீதை தொடர்ந்து ஐஎஸ்ஐ தலைவராக செயல்பட அனுமதித்தார். இந்த நியமனம்தான் இம்ரான் கானுக்கும் ராணுவ ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வாவிற்கும் இடையிலான மோதலாக உருவெடுத்துள்ளது. 

பாகிஸ்தானில் தற்போது நவாஸ் ஹெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி, பாகிஸ்தான் மக்கள் கட்சி, மவுலானா பசேல் ஊர் ரஹ்மானின் ஜாமியா உலமா இ இஸ்லாம் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து பாகிஸ்தான் ஜனநாயக கூட்டணியை உருவாக்கி உள்ளது. இம்ரான் பதவி இம்ரான் கான் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த கட்சிகள் இணைந்து தற்காலிக கூட்டணியாக உள்ளன. ராணுவத்தின் அழுத்தம் காரணமாக இந்த கூட்டணி தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட் இம்ரானுக்கு வழங்கிய ஆதரவை  வாபஸ் பெற்றது.

 இதன் காரணமாக பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்கெடுப்பு   நடக்க உள்ள நிலையில் அவரின் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது. காரணம் எதிர்க்கட்சிகள் அங்கு ஒன்றாகச்சேர்ந்துள்ளன. இந்த ஒற்றுமை தற்காலிகமானது. இம்ரான் கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரிசையாக அங்கு எம்பிக்கள் ராஜினாமா செய்தனர். மொத்தம் 22 எம்பிக்கள் பதவியில் இருந்து ராஜினாமா செய்தனர்.

ஏற்கனவே பாகிஸ்தான் நாட்டு பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது. கடந்த 2 வருடத்தில் அந்நாட்டு பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. விலைவாசி உயர்ந்துவிட்டது. கூடி வந்தது நாட்டில் பல இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

பாகிஸ்தானில் இன்று நடக்கும் நம்பிக்கை இல்லாத தீர்மான வாக்கெடுப்பில் இம்ரான் கான் தோல்வி அடையவே அதிக வாய்ப்புள்ளது. அங்கு மொத்தம் 342 உறுபினர்கள் கள் உள்ளனர். இங்கு பெரும்பான்மை பெற 172 எம்பிக்கள் தேவை. ஆனால் இம்ரான் கானின் ஆளும் தெஹ்ரிக் கட்சிக்கு 155 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் இம்ரான் கான் கண்டிப்பாக வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்பதால் அங்கு இம்ரான் தலைமையிலான அரசு கவிழ உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு ஆதரவு அளித்துவந்த முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட், பலுசிஸ்தான் அவாமி உள்ளிட்ட கட்சிகள் தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளன.

இதனையடுத்து, 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் பாராளுமன்ற மக்களவையில் தற்போது ஆளும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 162 ஆக குறைந்துள்ளது.முன்னதாக, இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. இதன்மீதான விவாதம் நடைபெறுவதற்கு முன்பாகவே, ஆட்சிக் கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 உலகின் முதல் இஸ்லாமியக் குடியரசு என்ற பெருமைமிக்க வரலாறு பாகிஸ்தானுக்கு உண்டு. இஸ்லாமிய மார்க்கத்தையும், குடியரசையும் ஒருங்கே  இணைத்த பெருமையும்  அதற்கு உண்டு. பஞ்சாபியர்கள், சிந்து, பத்தான், பலூச், முகாஜிர் ஆகிய பல இனங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றன. குறிப்பிடத்தக்க அளவிலான இந்துக்களும், கிறித்தவர்களும் வாழ்கின்றன.

இருந்தாலும், அதன் மண்ணில் அரசியல் ஜனநாயக ரீதியிலான  ஆட்சி என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. இதற்கு, முக்கிய காரணம் அந்நாட்டின் ராணுவம். பாகிஸ்தான் அரசியலில் இராணுவத்தின் செல்வாக்கு என்பது தவிர்கக முடியாத ஒன்று.  அந்நாட்டின், பாராளுமன்றத்தை நிர்ணயிக்கும் சக்தியாக அது உருவெடுத்துள்ளது.

கிட்டத்தட்ட 76 ஆண்டுகால சுதந்திர பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில், ஒரே முறை தான் ஆளும் அரசாங்கம்  (2008- 13) தனது முழு பதவிக்காலத்தையும் வெற்றிகரமாக முடித்திருக்கிறது. ஏனைய அரசுகள் யாவும் இராணுவ சதிப் புரட்சி, உள்நாட்டு கலகங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் தூக்கி எறியப்பட்டுள்ளன. பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் ஜனநாயக நிர்வாக முறை சீர்படுத்தப்படும் என்ற உறுதிமொழியுடன் கடந்த  2018ம் ஆண்டு பதவியேற்ற இம்ரான் கான் தலைமையிலான அரசும்  தற்போது திரிசங்கு சொர்க்கத்தில் உள்ளது.

காலம் ஆட்சிமுறை அரசியல் சூழல்

1957 - 62 நேரடி ராணுவ ஆட்சி ஐயூப் கான் ராணுவ சதிப் புரட்சி



1962 ௬9 மறைமுக ராணுவ ஆட்சி (ராணுவ அதிபர் ) ஜனாதிபதி நிர்வாக முறை அமல்படுத்தப்பட்டது- பிரதமர் பதவி ரத்து செய்யப்பட்டது

1969௭1 நேரடி ராணுவ ஆட்சி ராணுவ தளபதி யாஹ்யா கான் ராணுவப் புரட்சி

1971௭7 உண்மையான ஜனநாயக ரீதியிலான ஆட்சி சுல்பிகார் அலி பூட்டோ ராணுவச் சட்டத்தை நீக்கினார்  (1971 இந்தியா- பாகிஸ்தான் போர் நடந்த காலம் )

1977- 85 நேரடி இராணுவ ஆட்சி முகமது ஜியா-உல்- அக்  இராணுவ சதிப் புரட்சி

1985௮8 மறைமுக இராணுவ ஆட்சி (இராணுவ ஜனாதிபதி) மீண்டும் இராணுவ அதிகாரிகள் ஜனாதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

1988௯9 இராணுவம் முதன்மையுடன் கூடிய  மக்களாட்சி ஜனாதிபதியின் தன்னிச்சையான அதிகாரம் பறிக்கப்பட்டது.  இராணுவத்தின் மறைமுக தலையீடு தொடர்ந்தது.

1999௨002 நேரடி இராணுவ ஆட்சி பர்வேஷ் முஷாரப் இராணுவ சதிப் புரட்சி

2002-07 மறைமுக இராணுவ ஆட்சி (இராணுவ ஜனாதிபதி ) மீண்டும் இராணுவத் தளபதிகள் ஜனாதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

2008 முதல் தற்போது வரை இராணுவம் முதன்மையுடன் கூடிய  மக்களாட்சி இராணுவத்தின் மறைமுக தலையீடு தொடர்கிறது

 

No comments: