உலக நாடுகளுக்கு அளவு கணக்கில்லாமல் சீனாவிடம் கடன் வாங்கியுள்ளன. கடன் கேட்கும்போதெல்லாம் சீனாவும் அள்ளி அள்ளிக் கொடுத்தது. வாங்கிய கடனைக் கொடுப்பதற்கு வழிவகை தெரியாமல் சில நாடுகள் தவிக்கின்றன. கடன் சுமை ஏறியதால் உண்டான பொருளாதார நெருக்கடியால் பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது. இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. . இந்த வேளையில் சீனாவிடம் கடன் வாங்கிய நாடுகள் பொறியில் இருந்து விடுபடும் வழியைத் தேடுகின்றன.
வாங்கிய கடனைத் திரும்பக் கொடுப்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்த
இலங்கை இப்போதைக்கு கடனை அடைக்க முடியாது எனச்
சொல்லிவிட்டது. உஷாரான சீனா சிரிய நாடுகலுக்கு கடன் கொடுப்பதை நிறுத்த முடிவு செய்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் இலங்கைக்கு செலுத்திய 4 பில்லியன் டொலர் கடனை, திரும்ப
வழங்குவதில் சீனா இன்னும் உறுதி கொடுக்கவில்லை. அதேபோல இலங்கையின் 2.5 பில்லியன் டொலர்
கடன் உதவிக்கும் பதிலளிக்கவில்லை. உதவுவதாக
சீனா உறுதியளித்துள்ள நிலையில், மிக கவனமாக சீனா செயல்பட்டு வருகின்றது.
கடந்த இரன்டு ஆண்டுகளாகவே நாட்டிற்கு வெளியேயான கடனை சீனா மறுபரிசீலனை செய்து வருகின்றது. ஏனெனில் அவர்களின் வங்கிகள் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கும் நாடுகளுடன், ஏற்கனவே பெருத்த கடன் சுமை இருப்பதை உணர்ந்துள்ளன. ஆக இதனால் எச்சரிக்கையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
தற்போது சீனாவே பல நெருக்கடிகளில்
சிக்கித் தவித்து வரும் நிலையில், சீனா வங்கிகள் கடன் கொடுப்பதை குறைத்து வருகின்றன.
விதிமுறைகளை கடுமையாக்கி வருகின்றன. தற்போது அங்கு மோசமான கொரோனா பரவலும் பரவி வருகின்றது.
இதன் காரணமாக மோசமான தாக்கத்தினை கட்டுப்படுத்த, மிக கடுமையாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சீனாவின் முக்கிய
வணிக நகரங்கள், டெக் நிறுவனங்கள் , தொழில் நிறுவனங்கள், நிதி சேவைகளை என பலவும் முடங்கியுள்ளன.
இதற்கிடையில் சீனாவின் வளர்ச்சி விகிதமானது 5.5% ஆக சரியலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதனால் சீனா எச்சரிக்கையடைந்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளாக சர்வதேச நாணய
நிதியம், உலக வங்கியினை காட்டிலும், சீனா வளரும் நாடுகளுக்கு அதிக கடனை வழங்கி வருகின்றது.
இதன் மூலம் மிகப்பெரிய கடன் வழங்குனராகவும் உருவெடுத்துள்ளது. எனினும் தற்போது அதன்
விதிமுறைகளை கடினமாக்கியுள்ளது.
இதற்கிடையில் ஃபிட்ச் ரேட்டிங்
நிறுவனம் இலங்கையின் கடன் மதிப்பீட்டினை குறைத்துள்ளது. இது இலங்கைக்கான வெளிநாட்டு
கடன்களை குறைக்கலாம். இதற்கிடையில் இலங்கையின் அடுத்த கொடுப்பனவு நிலுவை செலுத்த வேண்டிய
ஏப்ரல் 18 அன்று செலுத்த முடியாமல் போகலாம். அப்படி செலுத்த தவறும் பட்சத்தில் அது
மறுசீரமைக்கப்படலாம் என எஸ் & பி தெரிவித்துள்ளது.
இனி சீனா புதிய கடன் வழங்குதல்களை
அங்கீகரிப்பது கடினம். சமீபத்திய பெல் அண்ட் ரோடு திட்டத்திற்கான கருத்தரங்கில், ஜி
ஜின்பிங் ஆபத்தான மற்றும் குழப்பமான இடங்களை தவிர்க்கவும் பங்கேற்பாளர்களுக்கு அழைப்பு
விடுத்தார். இதே இம்மாத தொடக்கத்தில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர்
ஜின் லிகுன், இலங்கையை உதவிக்காக சர்வதேச நாணய நிதியத்தினை தொடர்பு கொள்ள ஊக்குவித்தார்.
இலங்கையின் பொருளாதார நிலை மற்றும்
மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் உள்ள வறிய மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்கு உலக வங்கி செயற்படுவதாக தெரிவித்துள்ளது.பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை குறைத்து இந்நாட்டு மக்களின் நலனுக்காக நடவடிக்கை எடுக்கப்படும் என உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு
காரணம் தவறான பொருளாதார கொள்கையே என முன்னாள் இந்திய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்
தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் நிகழ்வொன்றில் கலந்து
கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு
காரணம் தவறான பொருளாதார கொள்கையே என தெரிவித்ததுடன் அதே சாயல் இந்திய பொருளாதாரத்திலும்
உள்ளது.பெட்ரோல், டீசல் மீது அதிக வரி விதித்து வருவதுடன் அந்த பணத்தை என்ன செய்கிறார்கள்
என தெரியவில்லை? இந்த தவறான பொருளாதார கொள்கையால்
சில்லறை பணவீக்கம் 7 சதவீதத்தை தாண்டியுள்ளது. இலங்கைக்கு ஏற்பட்ட நிலை இந்தியாவிற்கு
வந்துவிட்டது என கூறவில்லை. அவ்வாறு இந்தியாவிலும் ஏற்படும் அபாயம் இருக்கிறது என எச்சரிக்கிறேன்" என்று தெரிவித்தா.
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார
நெருக்கடிக்கு தீர்வு காண மேலும் 2 பில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க இந்தியா பரிசீலித்து
வருகிறது.இந்த நிதி வசதி இலங்கைக்கு உணவு மற்றும் எரிபொருளை வழங்குவதாகும். 1948 ஆம்
ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு,
அதன் முதல் இயல்புநிலையின் விளிம்பில் உள்ளது.
"நாங்கள் நிச்சயமாக அவர்களுக்கு
உதவுவோம் என்று நம்புகிறோம். மேலும் பரிமாற்றங்கள் மற்றும் கடன்களை வழங்க நாங்கள் தயாராக
இருக்கிறோம்," என்று இந்திய வட்டாரம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் இயல்புநிலை எச்சரிக்கை கவலையளிக்கிறது, ஆனால் "இன்னும் அவர்களுக்கு 2 பில்லியன் டொலர் பரிமாற்றங்கள் மற்றும் உதவிகளை நாங்கள் வழங்க முடியும்" என்று புது டில்லியில் உள்ள மூத்த அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது..
பட்டுப்பாதை அல்லது பொருளாதார பாதை என்று அழைக்கப்படும் திட்டத்தின் மூலம் 165 நாடுகKஉகு சீனா கடன் வழங்கி உள்ளது. சீனா செயல்படுத்திய 13,427 மேம்பாட்டு திட்டங்களில், 35 சதவீத திட்டங்களில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த திட்டங்களின் மொத்த செலவு ரூ.62 லட்சத்து 38 ஆயிரத்து 200 கோடி என்று சொல்லப்படுகிறது.
ஈராக் 59,200 கோடி, வட கொரியா
53,058 கோடி, எத்தியோப்பியா 48,618 கோடி, ரஷ்யா 11,23,320 கோடி, வெனிசுலா 6,06,504
கோடி, அங்கோலா 3,73,478 கோடி, இந்தியா 65,564 கோடி கடன் வாங்கி உள்ளன. சீனா கடன் கொடுத்து
உலக நாடுகளை தனது அடிமையாக்க மாற்றுவதை பார்த்து கோபம் அடைந்துள்ள அமெரிக்கா, பல்வேறு
நாடுகளுடன் பேசி வருகிறது. சீனாவிற்கு எதிரான நாடுகளை ஒன்று சேர்த்துக்கொண்டு குவாட்
அமைப்பை உருவாக்கி செயல் திட்டங்களை திட்டி வருகிறது. இதனால் உலக வல்லரசுகளான அமெரிக்கா
சீனா இடையே வர்த்தக ரீதியாக பெரும் போட்டி காணப்படுகிறது.
No comments:
Post a Comment