"என்ன வளம் இல்லை இந்தத் திரு நாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்"
தமிழக சினிமாப்பாடல் இலங்கைக்கும் பொருந்தும்.
"இலங்கையைப் போல் சிங்கப்பூரை மாற்றுவேன்"
என பரப்புரை செய்து சிங்கப்பூரை முன்னேற்றினார்
லீகுவான்யூ.
இன்று பிச்சைப்பாத்திரம் ஏந்தி வெளிநாடுகளை
எதிர்பார்த்துக் காத்திருக்கிறது இலங்கை.
இந்தியாவும் ,சீனாவும் போட்டிபோட்டு இலங்கைக்கு
உதவி செஉகின்றன. உலகின் மிகப் பெரிய நாடுகளான
அவறிடம் இலங்கை கடன் வாங்குவதை ஏற்றுக்கொள்ளலாம். எங்கள் கண்முன்னல் பிறந்த குட்டி
நாடான பங்களாதேஷ் இலங்கையின் கடனை அடைக்க்
உதவி செய்கிறது. அப்படியானால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி எந்த நிலையில் இருக்கிறது என்பதைப்
புரிந்துகொள்ளலாம்.
இந்தியா, சீனா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இலங்கைக்கு அந்நிய செலாவணி பற்றாக்குறையை சமாளிக்க
உதவ முன்வந்துள்ளன, இது அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு மத்தியில் அதன் நாணயத்தை
மதிப்பிழக்க கட்டாயப்படுத்தியது மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (ஈMF) உதவியை நாடியுள்ளது.
பல தசாப்தங்களில் இலங்கையின் மோசமான பொருளாதார
நெருக்கடியானது, கோவிட் 19 தொற்றுநோயின் தாக்கத்துடன், தவறான அரசாங்க நிதிகள் மற்றும்
தவறான நேர வரி குறைப்புகளின் விளைவாகும்.
கையிருப்பில் $2.31 பில்லியன் மட்டுமே
எஞ்சியுள்ள நிலையில், ஜூலையில் முதிர்ச்சியடையும் $1 பில்லியன் சர்வதேச இறையாண்மைப்
பத்திரம் உட்பட, இந்த ஆண்டின் எஞ்சிய காலத்தில் இலங்கை சுமார் $4 பில்லியன் கடனைத்
திருப்பிச் செலுத்த வேண்டும்.
வீடாக இருந்தாலும், நாடாக இருந்தாலும் வரவு என்ன, செலவு என்ன, எதற்கு கடன் வாங்குகிறோம்,
எப்படி அடைக்கப்போகிறோம் என்று எதுவுமே தெரியாமல் ஏகாந்தமாய் நடந்துகொண்டால் கஷ்டப்பட
வேண்டியிருக்கும். அந்த கஷ்டத்தைத்தான் இன்று இலங்கை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
இலங்கையின் ஏற்றுமதி கிட்டத்தட்ட 10 பில்லியன்
டொலர்கள். வருடம் 20 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருள்களை இறக்குமதி செய்கிறது.
ஆக வருடந்தோறும் 10 பில்லியன் டொலர்கள் அதிகமாகச் செலவு செய்கிறது. இதுவரையான காலகட்டம்
வரை இலங்கைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர் மூலம் 3 பில்லியன் டொலர்கள் கிடைத்தது.
மீதி 7 பில்லியன் டொலர்களை மத்திய கிழக்கு, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் வேலை பார்க்கும்
இலங்கைத் தொழிலாளர்கள் நாட்டுக்குள் அனுப்பி
வந்தனர். இதன் காரணமாக இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகக் கணக்கு சுமாராக ஓடி கொண்டிருந்தது.
இலங்கையிடம் தோராயமாக 7 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி கையிருப்பும் இருந்தது.
2020-ல் வந்த கொரோனா எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது
இப்போது, நிலைமை தலைக்குமேல் போய்விட்டது.
இலங்கைப் பொருளாதாரம் ஆட்டம் காண கொரோனா மட்டுமே காரணம் இல்லை. ஆண்டாண்டு காலமாக அதிக
வட்டியில் வாங்கிய கடன், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்காமை, ஏற்றுமதியை அதிகரிக்காமல்
இருந்தது, அதிகரித்த அரசாங்க செலவுகள், ஊழல் மோசடி என்று பல காரணங்கள் சொல்கிறார்கள்.மக்கள்
அரசின் மீது வெறுப்பின் விளிம்பில் இருக் கிறார்கள். இன்னும் விட்டால் நிலைமை மோசமாகிவிடும்
என்று ஐ.எம்.எஃப் உடன் பேச்சுவார்த்தை நடத்த இணங்கி இருக்கிறது இலங்கை அரசு.
உலக நாடுகள், ஐ.எம்.எஃப்-ன் தயவில் சில
மாதங்களுக்கு இலங்கைப் பொருளாதாரம் என்ற வண்டி ஓடக்கூடியதாக இருக்கும். ஆனால் இந்தப்
பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்க வேண்டும் எனில் அதற்கு சில வழிகள் உண்டு.
எதிர்பார்த்தபடி சுற்றுலா பயணிகள் வர வேண்டும்.இங்கிலாந்து,
கனடா போன்ற நாடுகள் இலங்கையில் உள்ள நிலைமையைக் காரணம் காட்டி அவர்களுடைய நாட்டு பயணிகளைப்
போக வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கொரோனாவுக்கு
முன் இருந்த நிலைமைக்கு வர நீண்ட நாள்கள் பிடிக்கலாம்.
வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர்
அனுப்பும் பணம் அதிகரிக்க வேண்டும், இலங்கைப் பொருளாதாரம், ரியல் எஸ்டேட் துறை அதலபாதாளத்தில்
விழுவதால் அவர்கள் மேலதிகமாக பணத்தை முதலீடு செய்வார்களா என்பது சந்தேகமே.
அடுத்து, இறக்குமதிக்குச் சமனாக ஏற்றுமதியை
அதிகரிக்க வேண்டும், தேயிலை, தைத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் இலங்கைக்கு ரஷ்யா, உக்ரைன்
யுத்தம், மேற்கு நாடுகளில் துளிர்விடும் பண வீக்கம், வேலையின்மை போன்ற பிரச்னைகள் அச்சம்
தருவதாகவே இருக்கும். இலங்கை வரலாற்றிலேயே ஒரு கடினமான பொருளாதாரச் சிக்கலை இலங்கை
மக்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரச் சிக்கலில் தவிக்கும் இலங்கைக்கு, மீண்டு
வருவதற்கான வழிகள் அனைத்தும் சவாலானதாகவே இருக்கிறது. மொத்தமாகவே இலங்கையில் பொருளாதார
மறு சீரமைப்பு செய்ய வேண்டும், அரசாங்க வருவாயை அதிகரிக்க வேண்டும், செலவுகள் குறைய
வேண்டும். இப்போது இருக்கும் நிலையில் ஐ.எம்.எஃப் வேறு பல நிபந்தனைகளைப் போட இருக்கிறது.
இவை எல்லாவற்றையும் மக்களின் ஒப்புதலோடு செய்ய முடியுமா என்பதே மிக பெரிய கேள்வி.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்
துறை பேராசிரியர் கோ.அமிர்தலிங்கத்திடம் இலங்கையின் பொருளாதார நெருக்கடி எப்போது தீரும்
என்று கேட்டதற்கு, “தற்போதைய பொருளாதார சிக்கல் என்பது உடனடியாகத் தீர்க்கக்கூடிய ஒன்று
அல்ல, இது பல காலமாகவே ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின்
தொடர்ச்சியான மோசமான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவே இன்றைய பிரச்னை. இலங்கை அரசாங்க
வருவாயை அதிகரிக்க வேண்டும், அரசாங்கம் வீண்
செலவுகளைக் குறைக்க வேண்டும், நுகர்வுக்குக்கூட உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்
கடன் பெறுவதைக் குறைக்க வேண்டும். இலங்கையின் ஏற்றுமதி அனைத்துமே தேயிலை, ரப்பர், தைத்த
ஆடைகள் போன்ற அத்தியாவசிய பொருள்கள் தான். இவை போதிய வருமானத்தைப் பெற்றுத் தராது.
இதனால் ஏற்றுமதியை பன்முகபடுத்த வேண்டும். உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்’’
என்றார்.
இந்தியா உட்பட அயல்நாடுகள் செய்கிற உதவிகள்
தற்போது இருக்கிற பிரச்னையில் இருந்து தற்காலிகமாக மீண்டு வர வாய்ப்பாக இருக்கும்,
ஆனால் நீண்ட காலத்தில் நிரந்தரமாக தீர்வைப் பெற மேலே சொன்ன பொருளாதார மறுசீரமைப்புகள்
கட்டாயமானது இலங்கைக்கு.
விரைவில் மீண்டு வரட்டும் இலங்கைப் பொருளாதாரம்; செழிக் கட்டும் மக்களின் வாழ்வாதாரம்!
No comments:
Post a Comment