டெல்லியில்
நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டத்திற்கு இந்திய உள்துறை அமைச்சர்
அமித்ஷா தலைமை வகித்துப் பேசும்போது, "உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்திற்கு
மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும்," என வெளியிட்ட கருத்து சர்ச்சையாகியிருக்கிறது.
மேலும்,
"பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை நெகிழ்வாக மாற்றாத வரையில்,
அது பரப்பப்படாது. மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் 22,000-க்கும் மேற்பட்ட இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அலுவல்
மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது.
வெவ்வேறு
மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்தியாவின்
மொழியில் இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
அமித் ஷா இந்தி மொழி குறித்து தெரிவித்த இந்தக் கருத்துக்கு தமிழ்நாட்டில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ட்விட்டரில் அரசியல் தலைவர்களும் பொது மக்களும் தங்கள் விமர்சனங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
அமித்
ஷா, ‘இந்திதான் இந்தியாவின் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும்; இந்தியர்கள் ஆங்கிலத்துக்குப்
பதிலாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும்’ என்று கூறியது சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
இதற்குத் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக
முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, ஹெச்.டி.குமாரசாமி, தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமாராவ்
உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். தெற்கு மீண்டும் ஒன்று திரண்டுள்ளது. இந்த
எதிர்ப்பு இயக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்ரஹ்மானும் கலந்துகொண்டார்.
கிந்தி எதிர்புப் போராட்டம் என்பது தமிழகத்தின் இரத்தத்தில் ஊறி உள்ளது. இந்திய மத்திய ரசௌ கிந்தியைத் திணிக்க முற்பட்ட போதெல்லாம் தமிழகத்தில் கடுமையான ந்திர்ப்பு எஔந்தது. இந்துத்வ கிந்தி ஆகிய ஆயுதங்களையே தேர்தல் காலங்களில் பாரதிய ஜனதாக் கட்சி கையில் எடுக்கும். பல சமயங்களில் அவை அக் கட்சிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளன.
இந்தி
வெறிபிடித்த கட்சி பாரதீய ஜனதா என்ற விமர்சனத்தை அதன் தலைவர்கள் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. அதை ஒரு பரிசுபோல ஏற்றுக்கொள்ளும். இந்தி மாநிலங்களில்
அந்த விமர்சனத்தைப் பாராட்டுரையாக அது பரப்பும். ‘தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் இந்தி பேசுகிறவர்களுக்கு
மட்டுமே வேலை தருகிறார்கள்’ என்று குற்றச்சாட்டை இந்தி வட்டாரத்தில் நற்சான்றிதழாகப்
பரப்பும். ‘பாருங்கள், தென்னிந்தியாவில் உங்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருகிறோம்.
நாங்கள்தான் உங்களுக்கான கட்சி’ என்று பிரசாரம் செய்யும். இந்திக்காரர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது அவர்களுக்கு மிகப்பெரிய லாபத்தைத்
தரும் வியூகம்.
இந்திக்காரர்களுக்கு இந்தியா முழுக்க வேலைவாய்ப்புகளை வாங்கித்தரும் வல்லமை பாரதீய ஜனதாக் உண்டு என்பதைக் காட்டுவதற்காகவே திட்டமிட்டு இந்தி அரசியல் முன்னெடுக்கப்படுகிறது. ஒரு பக்கம் வட இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள். மறு பக்கம் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் இந்தி ஊழியர்கள். மற்றொரு பக்கம், அனைத்து பனியா நிறுவனங்களிலும் இந்தியை மட்டுமே பேசும் குஜராத்திகள் என்று பா.ஜ.க-வின் இந்தி ஆதிக்கம் விஸ்வரூபமெடுக்கிறது
நாடு
முழுவதும் மக்கள் இந்தி பேச, படிக்க வேண்டும் என்ற நிலைபாட்டில் பாஜக அரசு தீவிரமாக
உள்ளது. எனினும் பல மாநிலங்களில் இந்தி திணிப்பால் தாய் மொழி அழியும் அபாயம் உள்ளதாக
பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய
அரசின் இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ச்சியாக தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து
வருகிறது. இதற்கு துவக்கம் முதலே தமிழகத்தில் இருந்த எதிர்ப்பும் இன்னும் மாறவில்லை.
சமீபத்தில் மும்மொழி கல்வி கொள்கையையும் திமுக, அதிமுக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதுவும் ஒருவகை இந்தி திணிப்பு தான் என திமுக கூறிய நிலையில் தமிழகத்தில் இருமொழி
கல்வி கொள்கை தான் பின்பற்றப்படும் என அதிமுக அரசு கூறியது
தமிழகத்தின்கள
நிலைவரம் புரியாமல் அமித் ஷா பேசியுள்ளார்.
தமிழகத்தில் தாமரையை மலர வைக்க முயற்சிக்கும்
தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் அண்ணாமலை உடனடியாகப் பதறியடித்து அமித்
ஷாவின் கருத்துக்கு எதிர்புத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கிந்தியைத் திணிக்க முற்பட்டால்
இருகிற வாக்கு வங்கியும் அற்றுப் போய்விடும் என அண்ணாமலை அச்சப்படுகிறார்.
மோடி
அரசு ஆட்சிக்கு வந்தது முதல் இந்தி மொழியை அனைத்து மாநிலங்களிலும் திணித்துவிட வேண்டும்
என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்த திணிப்பு முயற்சியை தமிழ்நாடு,
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் வலுவாக எதிர்த்து வருகின்றன.
இந்தியாவிலேயே
தமிழகத்தில் மட்டும் இந்தி என்றாலே நெருப்புப் பொறி பறக்கும். கஸ்தூரிரங்கன் கமிட்டியின்
வரைவு அறிக்கை பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய மொழிக் கொள்கை குறித்த
அறிக்கை ஒன்றை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் சமர்பித்தது நினைவிருக்கலாம்.
அதில்
தாய் மொழி, ஆங்கிலம், இவற்றுடன் மூன்றாவதாக ஒரு தேசிய மொழி கற்றுத் தரப்பட வேண்டும்.
அது இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியாகவும், இந்தி பேசும் மாநிலங்களில் ஏதாவது ஒரு
இந்திய மொழியாகவும் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.
இந்த
அறிக்கை வெளியானதும் தமிழகமே கொதித்து எழுந்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு உடனே
எதிர்வினையாற்றி “இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமல்ல, மாணவர்கள் விருப்பத்திற்கேற்ப
மூன்றாவதாக ஒரு இந்திய மொழியை தேர்ந்தெடுத்து படிக்கலாம்” என அறிவித்துவிட்டது.
இந்த
நிலையில், டெல்லியில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழு கூட்டத்தில் பேசிய ஒன்றிய உள்துறை
அமைச்சர் அமித்ஷா, “நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக
மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இந்தியாவின்
மொழியான இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள
பயன்படுத்த வேண்டும். இந்தியை ஆங்கிலத்துக்கு மாற்றாகக் கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை
அல்ல”
என கொளுத்திப் போட்டிருக்கிறார்.
ஆனால்,
இந்த திணிப்பு முயற்சியை தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் வலுவாக எதிர்த்து வருகின்றன.
அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.
முதல்வர்
மு.க.ஸ்டாலின்இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்.‘இந்தி மாநிலம்‘ போதும், இந்திய மாநிலங்கள்
தேவையில்லை என்று அமைச்சர் அமித் ஷா நினைக்கிறாரா? என்றும் கேட்டு தனது கண்டனத்தைப்
பதிவு செய்திருக்கிறார்.
தி.மு.க
எம்.பி கனிமொழி, கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன்,
கே.எஸ்.அழகிரி, வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தி
இந்தியாவில் சற்று அதிகமாக பேசப்படும் மொழி. அதற்காகவே அதை மற்ற மாநிலங்கள் மீது திணிக்கக்கூடாது
என்பது தான் கிட்டத்தட்ட 85 ஆண்டுகளாக இந்தி பேசாத மாநிலங்கள் எழுப்பி வரும் குரல்
ஆகும்.
அதை
ஏற்றுத் தான் ஆங்கிலம் இணைப்பு மொழியாக தொடர நேரு அனுமதித்தார் என்பது வரலாறு.
இந்தியாவில்
ஆங்கிலமே இணைப்பு மொழியாகத் தொடர வேண்டும். தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் அலுவல் மொழியாக்கப்பட
வேண்டும். பிற மொழிகளை கற்கும் விஷயத்தில் அனைத்து மாநில மக்களின் விருப்பங்களும்,
உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும்.
மாறாக,
இந்தியைத் திணிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டால் வேற்றுமையில் ஒற்றுமைக்கு
குந்தகம் ஏற்பட்டு விடும். இந்தி பேசாத மக்கள் வாழும் மாநிலங்களில் போர்க்குரல் எழும்பும்.
தமிழகத்தின் இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறும் அதையே வெளிப்படுத்துவதாக உள்ளது.
அமித் ஷாவின் கருத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் மிகக்கடுமையாக எதிர்த்துள்ளார். தமிழ்தான் இணைப்பு மொழி என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஒட்டு மொத்த தமிழகமும் அமித் ஷாவுக்கு எதிராகத் திரண்டுள்ளது.
No comments:
Post a Comment