Sunday, April 17, 2022

வலுவடைகிறது அரசுக்கெதிரான போராட்டம்

22 மில்லியன் மக்களைக் கொண்ட தீவு தேசம் 1948 இல் சுதந்திரத்திற்குப் பிறகு அதன் மோசமான நிதி நெருக்கடியில் உள்ளது. வெளிநாட்டு நாணயத் தட்டுப்பாடு ,எரிபொருள் , மருந்துகளின் இறக்குமதியை நிறுத்துகிறது. மின்சாரத்தடை மக்களை வெறுப்பேற்றுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச,அவரது மூத்த சகோதரர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி  போரட்டம் நடத்தினர். எந்த ஒரு அரசியல் கட்சியினதும் ஆதரவு இல்லாமல் தன்னெழுச்சியாக  ஆரம்பமான போராட்டம் வலுப்பெற்று  போராட்டக் காரருடன் பிரதமர்  பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது  போராட்டத்துக்குக் கிடைத்த அங்கீகாரமாகும்.

புதுவருடத்தின் பின்னர் போராட்டம் காணாமல் போய்விடும் அர அரசாங்கம் நினைத்தது. புது வருடத்தை கோல் பேசி நடத்திய   போராட்டக்காரர்கள் அரசாங்கத்துக்கு தமது செய்தியை அனுப்பியுள்ளனர். மிகவும் கட்டுக்கோப்பாக போராட்டம் நடைபெறுகிறது.முகம் தெரியாதவர்களால் ஆரம்பிக்கபப்ட்ட போராடத்தில் இலங்கையின் பிரபலமானவர்கள் தமது முகத்தைக் காட்டி அரசாங்கத்துக்கு எதிராக தாம் இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இளைஞனின் கெள்விக்கு பதிலலிக்க முடியாத பொலிஸ் அதிகாரி கண்கலங்கியது. போராட்டத்தில் கலந்துகொண்ட இளம் பெண் கொடுத்த ஒற்றை ரோஜாவை பொலிஸ் வாங்கியது,  திருமண கோலத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திக் கலந்துகொன்ட புதுமணத் தம்பதி, பிறந்து ஒரு நாளான குழந்தையுடன் போராட்டத்தில் பங்கு பற்றிய பெற்றோர் என உணர்வுகளின் வெளிப்பாடாக  கோல்பேஸ்  காட்சியளிக்கிறது.மார்ச் 31: ஜனாதிபதியின் வீட்டிற்கு அச்சுறுத்தல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி, இனந்தெரியாத சமூக ஊடக ஆர்வலர்களால் அணிதிரண்ட நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், அவரது வீட்டை முற்றுகையிட முயன்றனர்.

அன்று ஆரம்பமான ஆர்ப்பாட்டம், போராட்டம் என்பன  கோல்பேஸில் நிலைகொண்டுள்ளது.  கோத்தாவை வீட்டுக்கு அனுப்புவது, ராஜபக்ஷ குடும்பத்தை அரசியலில்  இருந்து வெளியேற்றுவது ஆகியனவே  போராட்டக் காரர்களின்  முக்கிய கோரிக்கையாகும்.

 போரட்டக்கலத்தின் இன மத வேறுபாடின்றி மக்கள்  முகாமிட்டுள்ளனர். இரவு ,பகல், மழை , வெயில் என எவற்றையும் அவர்கள்  பொருட்படுத்தவில்லை.  போராட்டக் களத்தில் அரசாங்கத்தின் ஆதரவாலர்கள்  ஊடுருவலாம் என்ற எச்சரிக்கையும் அவர்களிடம்  உள்ளது. மிகவும் கட்டுக்கோப்பாக போராட்டம் நடைபெறுகிறது. மக்களின் எழுச்சிகு தலை சாய்ப்பது அரசாங்கத்தின்  முக்கிய  கடமையாகும்.  ஜனாதிபதியை பதவியில் அமர்த்தியவர்கள் தான் இன்று பதவியில் இருந்து விலகும்படி வலியுறுத்துகிறார்கள். அவர்களின்  கோரிக்கை நியாயமாக இருந்தால்  ஜனாதிபதி  உரிய பதிலலிக்க வேண்டும்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தி பலத்த மழையையும் தாங்கியவாறு சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக அங்கு வருபவர்களுக்கு இலவச உணவு, பானங்கள், தற்காலிக தங்குமிடங்கள், அவசர மருத்துவ வசதிகள் போன்றவற்றையும், காலி முகத்திடல் மைதானத்தில் ஒரு சிறிய கிராமத்தை அரசியலற்ற எதிர்ப்பாளர்கள் அமைத்துள்ளனர்.

  ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அரசியல்வாதிகளின் புது வருடச் செய்திகளுக்கு மக்கள்  முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர்களின் குறிக்கோள்  ஏற்கெனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கோத்தா வீட்டுக்குப் போவதுதான் அவர்களுக்குப் புது வருடமாக இருக்கும்.

வர்த்தக தலைநகரான கொழும்பில் பலர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். "காலி முகநூலில் உள்ள போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க பிரதமர் தயாராக இருக்கிறார்" என்று அவரது அலுவலகம் புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தது, இது அதிருப்தியின் மையமாக மாறிய ஒரு போராட்ட தளத்தைப் பற்றி குறிப்பிடுகிறது.

தற்போது நாடு எதிர்கொள்ளும் சவால்களைத் தீர்ப்பதற்கான அவர்களின் முன்மொழிவுகளைப் பற்றி விவாதிக்க எதிர்ப்பாளர்கள் தயாராக இருந்தால், பிரதமர் அவர்களின் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கத் தயாராக இருக்கிறார்" என்று அலுவலகம் தெரிவித்துள்ளது.

சமீப நாட்களாக உணவுக் கடைகள், மருத்துவ வசதிகள் மற்றும் தொலைபேசி சார்ஜிங் நிலையங்கள் என வளர்ந்து வரும் கூடார முகாமில் உள்ள எதிர்ப்பாளர்களில் சிலர், இந்த வாரம் ராஜபக்சக்கள் பதவி விலகினால் மட்டுமே தாங்கள் வெளியேறுவோம் என்று கூறினர்.

 

No comments: