Friday, April 29, 2022

ஐ.பி.எல் வரலாற்றில் மக்ஸ்வெல் மிக மோசமான சாதனை

ஐபிஎல் இல் ராஜச்தானுக்கு எதிரான போட்டியில்  ஓட்டம் எடுக்காது ஆட்டமிழந்த மக்ஸ்வெல் மோசமான சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட போதிலும் பேட்டிங்கில் சொதப்பி எளிய இலக்கை எட்டிப் பிடிக்க முடியாமல் பெங்களூரு தோல்வியடைந்தது அந்த ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. குறிப்பாக ஏற்கனவே விராட் கோலி பார்ம் அவுட் என தெரிந்தும் கப்டன் டு பிளேஸிஸ் அவுட்டானதும் பொறுப்பை காட்டாத முக்கிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதன் காரணமாகவே அதிலிருந்து மீள முடியாத அந்த அணி கடைசி வரை அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக தோற்றது. தனது திருமணத்தையொட்டி இந்த வருடம் ஐபிஎல் தொடரின் முதல் ஒரு சில போட்டிகளில் பங்கேற்காத அவர் அதன்பின் 8* (2), 26 (11), 55 (34), 23 (11), 12 (11), 0 (1) என ஒரு போட்டியை தவிர எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் பெரிய அளவில் ஓட்டங்களை எடுக்காதது மிடில் ஆர்டரில் அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2020 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அவர் 13 போட்டிகளில் 1 சிக்சர் கூட அடிக்காமல் வெறும் 108 ஒட்டங்களை எடுத்ததால் அடுத்த வருடமே அந்த அணி நிர்வாகம் கழற்றி விட்டது.

  அவரை நம்பிய பெங்களூர் அணி நிர்வாகம் கடந்த வருடம் 14.25 கோடி என்று மிகப்பெரிய தொகைக்கு வாங்கிய நிலையில் அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்ட அவர் கடந்த வருடம் 15 போட்டிகளில் 6 அரை சதங்கள் உட்பட 513 ஓட்டங்களையும் 3 விக்கெட்களையும் எடுத்து ஒரு சிறப்பான ஆல்ரவுண்டராக செயல்பட்டார். அதன் காரணமாக அந்த அணி எளிதாக பிளே-ஆப் சுற்றுக்கு சென்றதை அடுத்து மீண்டும் அவரை நம்பிய அந்த அணி நிர்வாகம் இந்த வருட ஐபிஎல் தொடருக்காக தக்க வைத்தது. இருப்பினும் கடந்த வருடத்தை போல இந்த வருடம் இதுவரை அவர் பெரிய அளவில் ஜொலிக்காதது பெங்களூரு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. முன்னதாக இந்த போட்டியில் கோல்டன் டக் அவுட்டான அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோல்டன் டக் அவுட்டான வெளிநாட்டு வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.

 

 1. கிளென் மேக்ஸ்வெல் : 12*

 2. ரஷித் கான் : 11

3. சுனில் நரேன் : 10

 4. ஏபி டீ வில்லியர்ஸ் : 10

No comments: