உலகின் மிகப்பெரிய திரைத்துறை விருதுகளில் ஒன்றான ஒஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.2022ம் ஆண்டிற்கான 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில் கடந்த 27 ஆம் திகதி நடைபெற்றது.
ஒஸ்கர்
விருது வழங்கும் விழா வரலாற்றிலேயே முதன் முறையாக வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர், ரெஜினா
ஹால் ஆகிய மூன்று பெண்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
சிறந்த
விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி
இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி ஆகிய ஆறு பிரிவுகளில் அமெரிக்க திரைப்படமான
'Dஉனெ' ‘டியூன்’ சாதனை படைத்துள்ளது.சிறந்த விஷுவல் எபெக்ட்ஸுக்கான
விருதை டியூன் திரைப்படத்தைச் சேர்ந்த பால் லம்பேர்ட், டிரிஸ்டன் மைல்ஸ், பிரையன் கானர்
மற்றும் கெர்ட் நெஃப்சர் ஆகிய 4 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த ஒலி அமைப்பிற்கான விருதை மேக் ரூத், மார்க் மங்கினி, தியோ கிரீன், டக் ஹெம்பில் மற்றும் ரான் பார்ட்லெட் ஆகியோர் பெற்றுள்ளனர்.டியூன் படத்திற்கு இசை அமைத்த ‘ஹான்ஸ் ஜிம்மர்’ சிறந்த அசல் பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதினை பெற்றுள்ளார்.
டியூன் பட எடிட்டர் ஜோ வாக்கருக்கு சிறந்த படத்தொகுப்புக்கான ஆஸ்கர் விருதும், சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது கிரேக் ஃப்ரேசர் என்பவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதும் டியூன் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை ஹாலிவுட்டின் முன்னணி நடிகரான வில் ஸ்மித் பெற்றுள்ளார். ‘கிங் ரிச்சர்ட்’ என்ற படத்தில் செரினா வில்லியம்ஸ் மற்றும் வீனஸ் வில்லியம்ஸின் தந்தை ரிச்சர்ட் வில்லியம்ஸ் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருந்த வில் ஸ்மித்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதி நேர நாமினேஷன் பட்டியலில் வில் ஸ்மித் பெயர் இடம் பெறாமல் போனது.
2002ம் ஆண்டில் இருந்து ஆஸ்கர் விருதுக்காக முயன்று வந்த வில் ஸ்மித், 2022ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். தனக்கு முதல் முறையாக ஆஸ்கர் விருது கிடைத்ததால் நெகிழ்ந்து போன வில் ஸ்மித் மேடையில் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஆஸ்கர் விருது வெள்ளை இனத்தவருக்கான விருதாகவே கருதப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளது. 2016ம் ஆண்டு கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கூட ஆஸ்கர் விருது அறிவிக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து வில் ஸ்மித் மற்றும் அவரது மனைவியும் பிரபல நடிகையுமான ஜடா உள்ளிட்ட பலர் அன்றைய நிகழ்ச்சியை புறக்கணித்தனர். இதனை மனதில் வைத்துக் கொண்டு வில் ஸ்மித் உரையாற்றியுள்ளார்.
சிறந்த நடிகைக்கான ஒஸ்கர் விருதை ஹாலிவுட் நடிகையான “ஜெசிகா சேஸ்டெய்ன்” வென்றுள்ளார். “தி அய்ஸ் ஆப் டேமி ஃபாய்” என்ற படத்தில் நடித்ததற்காக ஜெசிகாவிற்கு சிறந்த நடிகைக்கான ஒஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த திரைக்கதைக்கான ஒஸ்கார்
விருதை 'பெல்ஃபாஸ்ட்' படத்திற்காக 'கென்னித் பிரனாக்' வென்றுள்ளார்.
பெண் இயக்குநர் சியான் ஹெடர் இயக்கத்தில் வெளியான ‘கோடா’ என்ற காமெடி திரைப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
‘தி பவர் ஆப் தி டாக்’ என்ற படத்தை இயக்கிய ஜேன் கேம்பியன் என்பவருக்கு சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த துணை நடிகராக ‘கோடா’ படத்தில் நடித்த ட்ராய் கோட்சூரும், சிறந்த துணை நடிகையாக ‘வெஸ்ட் சைட் ஸ்டோரி’ படத்தில் நடித்த அரியானா டிபோஸ் விருது பெற்றனர்.
சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை ‘தி குயின் ஆப் பேஸ்கட்பால்’ திரைப்படம் வென்றது. ஜப்பானிய திரைப்படமான "டிரைவ் மை கார்" சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஒஸ்கார்
விருதை வென்றுள்ளது
ஆஸ்கரில்
கருப்பின கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவதாக 2016-ம் ஆண்டு ஓர் குற்றச்சாட்டு எழுந்து
Oscar So White எனும் ஹாஷ் டேக் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது.
ண்மையில்
லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 94வது ஆஸ்கர் விருது விழாவில் தனது மனைவியின் உடல்நிலையை
கேலி செய்த நடிகரும் தொகுப்பாளருமான கிரிஸ் ராக்கை பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்
அறைந்த விவகாரம்தான் தற்போதைய சோசியல் மீடியாவின் ஹாட் டாபிக். ஆனால் ஆஸ்கர் மேடையில்
சர்ச்சை கிளம்புவது இது ஒன்றும் புதிதல்ல.
உலகப்
புகழ்பெற்ற தி காட்பாதர் படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்ற மர்லன்
பிராண்டோ அவ்விருதை புறக்கணித்ததோடு பூர்வீக அமெரிக்க மக்களுக்காக குரல் கொடுத்தார்.
அவர் சார்பாக விழாவில் பங்கேற்ற நடிகை Sacheen Littlefeather மர்லன் பிராண்டோவின் அறிக்கையை
மேடையில் வாசித்தது அந்நாளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
22003ம் ஆண்டு தி பியானிஸ்ட் படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதை வென்ற Adrein Boody விழா மேடையிலேயே சக நடிகையான Halley Berry-க்கு அவர் அனுமதி இல்லாமல் முத்தமிட்டது பெரும் கண்டனத்தை பெற்றது. அந்த முத்தத்தை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை என Halley Berry அண்மையில் கூட ஒரு பேட்டியில் கூறும் அளவு இவ்விவகாரம் தற்போது வரை பேசு பொருளாக உள்ளது.
2012-ம்
ஆண்டு பிரபல ஹாலிவுட் நடிகரான Sacha Baron Cohen தனது The Dictator படத்தை விளம்பரப்
படுத்தும் வண்ணம் ஆஸ்கர் சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில் General Aladeen தோற்றத்தில்
பங்கேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கூடவே வடகொரியத் தலைவர் Kim Jong-il-ன்
அஸ்தியை தான் கையில் வைத்திருப்பதாக அவர் கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் அவர்
உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். ஒஸ்காரில்
கருப்பின கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவதாக 2016-ம் ஆண்டு ஓர் குற்றச்சாட்டு எழுந்து
Oscar So White எனும் ஹாஷ் டேக் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது. இதைத்தொடர்ந்து
வில் ஸ்மித், ஸ்பைக் லீ போன்ற கருப்பின கலைஞர்கள் ஆஸ்கர் விழாவில் பங்கேற்க மறுத்ததும்
உலகம் முழுவதும் கவனம் இருந்தது.
இதன்
உச்சமாக 2017 ஆம் ஆண்டு சிறந்த படத்துக்கான பெயரை மாற்றி கூறியது பெரும் சர்ச்சையை
கிளப்பியது. மூன்லைட் படத்துக்கு சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது தேர்வாகி
இருந்த நிலையில் தொகுப்பாளர் தவறுதலாக லா லா லாண்ட் படக்குழுவினரை மேடைக்கு அழைத்து
பின்னர் கீழே அனுப்பியது ஆஸ்கர் மேடையில் அரங்கேறிய மிகப்பெரிய குளறுபடியாக தற்போதுவரை
பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment