Sunday, April 17, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி 14

எல்லா கதைகளும் நல்ல கதைகள்தான். அதை சினிமாவுக்கான மொழியில் சொல்வதில்தான் அதன் வெற்றி அடங்கியிருக்கிறது. விசு,கே.பக்யராஜ்,ஜவ்வார் சீதாராமன், பஞ்சு அருணாசலம் போன்றவர்கள்  அப்படிப்பட்ட கதைகளை திரை மொழியாக்குவதில் வல்லவர்கள். தங்கள் படங்களின் கதையை எப்படிக் கொண்டுசெல்வது எனத் தெரியாமல் திணறுபவர்களுக்கு ‘இப்படி மாற்றினால் சரியாக இருக்கும்’ என, கதையின் சிக்கலை அவிழ்க்கும் உத்தி அறிந்தவர்கள்.

கவிஞர் கண்ணதாசனுடன் 12 ஆண்டுகள் சுமார் 600 படங்களுக்கு உதவியாளராகப் பணியாற்றியவர்   தமிழ் சினிமாவில் ஸ்கிரீன்ப்ளே டாக்டர் எனப்ப்டும் பஞ்சு அருணாசலம். பத்திரிகையாளர், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு என இவர் விளையாடிய களங்கள் அதிகம்.அனைத்திலும் வெற்றிக்கொடி நாட்டியவர் திருமண வீடுகளின் தேசியகீதமான, ‘மணமகளே மருமகளே வா... வா...’ பாடலை எழுதியவர்.

அப்போது வெளி கம்பெனிகளின்  படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிக்கொண்டிருந்த பஞ்சு அருணாசலத்துக்கு சொந்தமாக படம் தய்ர்ரிகிம் ஆசை வந்தது.`உறவுசொல்ல ஒருவன்’, `ஆண்பிள்ளை சிங்கம்’... ஆகிய இரு படங்களைத் தயாரித்தாஅர். இரண்டும் கையைச் சுட்டன.  தனது தம்பிக்காக`எஸ்.பி.டி ஃபிலிம்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கி  ‘ப்ரியா’, ‘கவிக்குயில்’ போன்ற படங்களை எடுத்தார்.ப்ரியா' வெற்றி பெற்றாலும், `கவிக்குயில்' தோல்வியடைந்தது. பங்காளியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால்`பி.ஏ ஆர்ட்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் . முதல் படமே பிரமாண்ட வெற்றிப்படமாக அமைய வேண்டும் என பஞ்சு அருணாசலம் முடிவு செய்தார்.  இந்தியில் அப்போது `ஷோலே' வெளியாகி, சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தது. அப்போது வளர்ந்துகொண்டிருந்த ரஜினியையும் கமலையும் வைத்து, அதேபோல பிரமாண்டமான ஒரு படம் பண்ணலாம் தயாரிக்க முடிவு செய்தார் பஞ்சு அருணாசலம். 

கமல்,ரஜினி இருவரும் உச்சத்தில் இருந்த காலம்அவர்கள்அலாவுதீனும் அர்புத விளக்கும் ஆகிய படங்களில் இருவரும் நடித்துக்கொண்டிருந்தனர்பஞ்சு அருணாசலம் கேட்டதும் இர்குவரும் ஒப்புக்கொன்டனர்.  இருவரும் நடித்துக்கொண்டிருந்த படங்கள்  முடிய ஒரு வருடமானதுஅந்த ஒரு வருடத்தில் இருவரும் சேர்ந்து நடித்த ‘அவர்கள்', ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘நினைத்தாலே இனிக்கும்’ அனைத்துமே எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லைதனித்தனியாக நடிக்கும் முடிவை இருவரும் ஒருமித்து எடுத்தனர்

இப்படிச் சேர்ந்தே பண்ணிட்டு இருந்தோம்னா உங்களுக்கும் பாதிக்கும்எனக்கும் பாதிக்கும்என்ன பண்ணலாம்?’ என ரஜினியிடம் கமல் கேட்டார். ‘நீங்களே சொல்லுங்க’ என ரஜினி சொல்லஅப்போது ‘இருவருக்கும் தனி ஸ்டைல் உண்டுரசிகர்களும் இருக்கிறார்கள்இப்ப தனித்தனியா நடிச்சாதான்நாம வளர முடியும்ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சாஅது உங்க படமும் இல்லாம என் படமும் இல்லாம ரெண்டுங் கெட்டானாப் போய்ரசிகர்கள் குழம்ப வாய்ப்பு இருக்கு’ எனச் சொல்லியிருக்கிறார் கமல். `இனி நாம் சேர்ந்து நடிக்க வேண்டாம்என இருவரும் சேர்ந்து முடிவெடுத்தனர்.

இருவரும் ஒன்றாக்க நடிப்பதற்கு ஒப்புக்கொண்ட ஒரேபடம் பஞ்சு அருணாசலத்தினுடையதுதங்கள்  முடிவை பஞ்சு அருணாசலத்திடம் சொல்லத்தயங்கிய இருவரும் இயக்குநர் எஸ்.பி முத்துராமனின் உதவியை நாடினர்கமல்ரஜினி ஆகியோரின் முடிவைப்பற்றித் தெரியாத பஞ்சு அருணாசலம் இருவருக்குமான கதையை எழுதிக்கொண்டிருந்தார்

கமல்ரஜினி ஆகியோரின்  முடிவை  இயக்குநர் எஸ்.பிமுத்துராமன் பஞ்சு அருணாசலத்தைச் சந்தித்துத் தெரிவித்தர்இருவரும் இணைந்து நடிக்கமாட்டார்கள்  தனித்தனியாக நடிக்க  ஒப்புக்கொண்டார்கள் என்பதை அறிந்த பஞ்சு அருணாசலம் தான் எழுதிய கதையை அப்படியே வைத்துவிட்டு  இருவருக்கும் தனித்தனிக் கதையை எழுத்தத் தொடங்கினார்ரஜினியின் படத்தை எஸ்.பி.முத்துராமனும் கமலின் படத்தை எஸ்.பி.முத்துராமனின் உதவியாளர் ரங்கராஜனும்  இயக்குவதென முடிவானது.

அப்போது கமலுக்கு  கிளாஸ் ரசிகர்கள் அதிகம்அவர் படம் வெளியானால்மோட்டார் சைக்கிள்கார்களில் வருபவர்கள்தான் அதிகம்.பெண் ரசிகைகள் கமலின் படத்துக்கு முண்டியடிப்பார்கள்.  குறைந்த விலை ரிக்கெற்கள் எளிதாகக்கிடைக்கும்.

 சண்டையோஇரட்டை அர்த்த வசனங்களோபிரமாண்டமான அரங்குகளோஎந்தவித ஸ்டைலும் இல்லாமல்குடும்பப்பாங்கான ஒரு கதையைரஜினிக்காக நழுதினார்அதில் பஞ்சு அருணாசலத்தி வாழ்க்கை அனுபவங்களும் அடக்கம் 

குறைந்த காசு  டிக்கெட்டுக்கு ரசிகர்கள் முட்டிமோதக்கூடிய அளவுக்குகமலுக்கு  படம்ரஜினிக்கு பெண் ரசிகைகள் குடும்பம் குடும்பமாக வருவதுபோல ரஜினிக்கு  ஒரு குடும்பப் படம்இந்த கான்செப்ட்டை மனதில் வைத்து ஒரு வாரத்துக்குள் இருவருக்கும் தனித் தனியாகக் கதைகளைத் எழுதினார் பஞ்சு அருணாசலம்

ரஜினி படத்துக்கு இயக்குநர் எஸ்பி.முத்துராமன்கமல் படத்தை இயக்குவது அவரின் உதவி இயக்குநர் ரெங்கராஜன். ‘பஞ்சு அண்ணன்சீனியர் எஸ்பி.முத்துராமனை ரஜினி படம் பண்ண அனுப்புறார்நமக்கு புது ஆளை அனுப்புறாரேசரியா வருமா?’ என கமல் ஒரு நிமிஷம்கூட யோசிக்கவில்லைசந்தோஷமாக ஒப்புக்கொண்டார்.


 எளிமையான ஆர்ட்டிஸ்ட்சிம்பிள் புரொடக்ஷன் என ஒரு பக்கம் ரஜினி படம்டபுள் ஆக்ஷன் ஹீரோஸ்ரீதேவிசெந்தாமரைதங்கவேலுதேங்காய் சீனிவாசன்மனோரமாமேஜர் சுந்தர்ராஜன்விஸ்.எஸ்.ராகவன் என பெரிய  பட்டாளத்துடன் இன்னொரு பக்கம் கமல் படம் என பரபரப்பாக  படப்பிடிபு முடித்து  இரண்டு படங்களும் வெளியாகின.  இரண்டுமே வெள்ளிவிழாக் கொண்டாடின.  அந்த கமல் படம் ‘கல்யாணராமன்’, ரஜினி படம், ‘ஆறிலிருந்து அறுபதுவரை’. அந்த இரு படங்களுக்கும் இசைஇசைஞானி இளையராஜாஇந்த இரண்டு படங்களின் வெற்றி விழாக்களையும் தலைமையேற்று நடத்தியவர் கவிஞர் கண்ணதாசன்.  

கமலின் வாழ்க்கையில் "கல்யாணராமன்படமும்ரஜினியின் வாழ்க்கையில்   ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ படமும் திருப்பு முனையாக அமைந்தன. ‘ஆறிலிருந்து அறுபதுவரை’  க்குப்பின்னர் ரஜினிக்கு பெண் ரசிகைகள் அதிகமாகினர்ரஜினியால் இப்படியும் நடிக்க முடியுமா என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர்.

No comments: