ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் நடந்த
கொலை, கொள்ளைட்டதால் அதமிழக அரசியலில் அதிர்வலைகள்
ஏற்பட்டுள்ளன.
தமிழக
முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2016 டிசம்பர்
, 5ல் இறந்தார். அவருக்கு நீலகிரி மாவட்டம், கொடநாடு
பகுதியில் பங்களா உள்ளது. ஜெயலலிதா
மறைவுக்கு பின், இந்த பங்களா, சசிகலாவின்
கட்டுப்பாட்டில் இருந்தது. சசிகலா சிறையில் இருந்தபோது 2017 ஏப்ரல்23ல், கொடநாடு
பங்களாவில் மர்ம நபர்கள் உள்ளே
புகுந்தனர். தடுக்க
முயன்ற காவலாளி ஓம் பகதுார்,
என்பவர் கொல்லப்பட்டார்.மற்றொரு காவலாளி கிருஷ்ண
பகதுார், என்பவர்
படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
ஜெயலலிதாவின்
பங்களாவுக்குள் பூந்து
கொள்ளையடிக்க முயன்றவர்கள் யார் என்பதை அறிய
தமிழகம் ஆவலாக இருந்தது.
கொள்ளை முயற்சி என பொலிஸ் பதிலளித்தது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, ஜெயலலிதாவின் கார் ஓட்டுனராக இருந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவரை தேடினர். இவர், திடீரென சாலை விபத்தில் பலியானார். தொடர் விசாரணையில் கொடநாடு பங்களா கொலை மற்றும் கொள்ளையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கூலிப் படையினர் சயான், வாளையார் மனோஜ், உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
பொலிஸா ர் தீவிரமாக தேடி வந்த நிலையில், கேரள மாநிலம், திருச்சூர் அருகே, குடும்பத்துடன் காரில் சென்றபோது, கன்டெய்னர் லாரி மோதியதில் சயான் படுகாயத்துடன் தப்பினார். ஆனால், அவரது மனைவி வினு பிரியா, மகள் நீது, ஆகியோர் பலியாகினர்.அதேபோல், கொடநாடு பங்களாவில், கணினி இயக்குனராக பணிபுரிந்த நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கெங்கரையைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
இப்படி அடுத்தடுத்த மரணங்களால் கொடநாடு பங்களா கொலை மற்றும் கொள்ளை வழக்கில் விழுந்த மர்ம முடிச்சுகளுக்கு விடை தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், கைதாகி ஜாமினில் வெளிவந்த சயான், மனோஜ் ஆகியோர், 2019ல், டில்லியில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில், 'கொடநாடு கொலை, கொள்ளையில், முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு தொடர்பு உள்ளது' என குற்றம் சாட்டினர்.
அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தது. முதல்வராக
எடப்பாடியார் பதவி வகித்ததால் கொடநாடு வழக்கு நஅப்படியே
அமுங்கிப் போனது. தி.மு.க ஆட்சி
அமைந்ததும், எடப்பாடியைக் கார்னர் செய்வதற்காகவே மீண்டும்
கொடநாடு வழக்குத் தூசுதட்டப்பட்டது. ‘என்னை கொடநாடு வழக்கில்
சிக்கவைக்க தி.மு.க
அரசு முயல்கிறது’ என்று எடப்பாடியே இதுபற்றிப்
பேட்டிகொடுத்தார். இருப்பினும், தொடர்ந்து விசாரணை சென்றுகொண்டிருந்த நேரம்
சிலகாலம் பல்வேறு விவகாரங்களால் கொடநாடு
வழக்கு மக்களாலும், ஊடகங்களாலும் மறக்கப்பட்டது.
சசிகலாவிடம்
விசாரனை நடைபெற்றதால் கொடநாடு மீண்டும் பரபரப்பானது.
எதிர் வரும் 25 ஆம் திகதியுடன் ஐந்து
வருடங்கள் முடிவடைகிறது.
கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன்,
ஜெயா தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான
விவேக் ஜெயராமன், அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி,
அவர் மகன் அசோக், தம்பி
மகன் பாலாஜி, உதவியாளர் நாரயணன்,
அ.தி.மு.க பிரமுகர் அனுபவ்
ரவி உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தினர்.
இவ்வழக்கு தொடர்பாக இதுவரை 200-க்கும் மேற்பட்டோரிடம்
விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
தெஹல்கா
புலனாய்வு இதழின் முன்னாள் ஆசிரியர்
மேத்யூ என்பவர் கொடநாடு வழக்குக்
குறித்து புலனாய்வு செய்து, அதன் விவரங்களைப்
பேட்டியாக டெல்லியில் கொடுத்திருந்தார். அப்போது, அண்ணா திராவிட முன்னேற்றக்
கழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் எங்கெல்லாம், எவ்வளவு
சொத்து சேர்த்து வைத்துள்ளனர் என்பதற்கான ஆதாரங்களைக் கைப்பற்றவே அன்றைய முதல்வர் எடப்பாடி
இந்த கொள்ளை நாடகத்தை அரங்கேற்றினார்.
அந்த ஆவணங்களை வைத்துக்கொண்டே ஓ.பி.எஸ்
உள்ளிட்ட அத்தனை அமைச்சர்களையும் கைக்குள்
வைத்திருக்கிறார்’ என்று குற்றம்
சாட்டினார்.
கொடநாட்டைப் பற்றிய
விபரங்கள் அனைத்தும் சசிகலாவுக்கு தெரியும்.
ஆகையால், விசாரணையில்
முன்னேற்றத்துக்கு ஒரு சிறு
துரும்பை பொலிஸார்
எதிர் பார்க்கின்றனர்.
மேற்கு
மண்டல ஐ.ஜி சுதாகர்,
நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ்
ராகவ், விசாரணை அதிகாரியும், கூடுதல்
துணை காவல் கண்காணிப்பாளருமாகிய கிருஷ்ணமூர்த்தி,
துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகர்,
துணை காவல் கண்காணிப்பாளர் ரேங்கில்
இருக்கும் இரண்டு பெண் பொலிஸார்,
குற்றப்பிரிவு எழுத்தர் ஆகியோர் சசிகலாவிடம் விசாரணை
மேற்கொண்டனர். சசிகலாவின் பதிலை பதிவேற்றுவதற்காக டைப்பிஸ்ட்
ஒருவரும், விசாரணையை படம் பிடிப்பதற்காக வீடியோகிராஃபர்
ஒருவரும் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர்.
சசிகலாவிடம்
கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் அடுத்த
கட்டத்துக்கு விசாரணையை எடுத்துச் செல்ல உதவும்.
No comments:
Post a Comment