உலகக் கிண்ண அதிகாரப்பூர்வ முதல் பாடலை வெளியீடு கட்டாரில் நடைபெறும் உலக் கிண்ண உதைபந்தாட்ட அதிகார பூர்வ முதல் பாடல் கடந்த வெளிக்கிழமை டொகாவில் வெளியிடப்பட்டது.
அமெரிக்க
நட்சத்திரங்களான டிரினிடாட் கார்டோனா , டேவிட்டோ, கட்டார் பாடகி ஆயிஷா ஆகியோர் இந்த
ஆண்டுக்கான உலகக் கிண்ண அதிகாரப்பூர்வ ஒலிப்பதிவின் முதல் பாடலைப் பாடியுள்ளனர்.ஹய்யா
ஹய்யா (பெட்டர் டுகெதர்) இந்தப் பாடல் உதைபந்தாட்ட் ரசிகர்களைக் கவரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
"அமெரிக்கா,
ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளின் குரல்களை ஒன்றிணைப்பதன் மூலம், இசை - உதைபந்தாட்டம் - உலகை எவ்வாறு இணைக்க முடியும்
என்பதை இந்தப் பாடல் குறிக்கிறது" என்று
பீபாவின் தலைமை வர்த்தக அதிகாரி கே மடாதி கூறினார்.
அரிசோனாவைச் சேர்ந்த பொப் பாடகர்டிரினிடாட் கார்டோனா,
2017 ஆம் ஆண்டில் வைரல் ஹிட் ஜெனிஃபர் மூலம்
பிரபல்யமானவர்.
அட்லாண்டாவில்
பிறந்த டேவிடோ - ஃபால் , இஃப் உள்ளிட்ட பல வெற்றிப் பாடல்களைப் படியுள்ளார். அதில் அவர் பல விருதுகளை வென்றுள்ளார்.
"உலகம்
முழுவதையும் ஒன்றிணைக்கும் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், மேலும் இந்த
பாடலின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்? 'நாம் ஒன்றாக இருக்கிறோம்' என்பது என் இதயத்திற்கு
சரியாக இருந்தது," டேவிடோ கூறினார்.
ஆயிஷா
கத்தாரின் மிகவும் பிரபலமான பாடகர்களில் ஒருவர், நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின்
பொதுச் சபை , டோஹா ஃபெஸ்டிவல் சிட்டியின் பிரமாண்ட திறப்புவிழா உட்பட உலகெங்கிலும்
தலைசிறந்த நிகழ்ச்சிகளி பாடியுள்ளார். உருவாக்குகிறார்.
"இந்த உற்சாகமான காலங்களில் நான் இருப்பதில் நான் ஆசீர்வதிக்கப்படுகிறேன், பெருமைப்படுகிறேன், அங்கு நான் சாட்சியாக இருக்கிறேன், என் தேசமான கத்தாருக்கான இந்த மிகப்பெரிய மைல்கல்லின் ஒரு பகுதியாக இருக்கிறேன்" என்று ஆயிஷா கூறினார்.
No comments:
Post a Comment