Sunday, April 17, 2022

ஆளுநருக்கு எதிராக காய் நகர்த்தும் தமிழக அரசு


 தமிழ்கத்தில் ஸ்டாலின் முதல்வரானதும்  ஆர் .என்.ரவி  ஆளுநராக நியமிக்கப்பட்டார்.  தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க மத்திய அரசு முடிவெடுத்துவிட்டதென அப்போது  விமர்சனம் எழுந்தது. ஆளுநர் போட்ட முட்டுக்கட்டைகளை தமிழக  அரசு பொறுமையாகக் கையாண்டது.  ஸ்டாலின் அடங்கி விட்டார் என எதிரக்கட்சிகள் பூரிப்படைந்தன.

தமிழக ஆளுநரின் தேநீ விருந்தைப் புறக்கணித்து  திராவிட முன்னேற்றக் கழகமும் கூட்டணிக் கட்சிகளும் தமது எதிர்ப்பை வலுவாக வெளிப்படுத்தியுள்ளன.

ரவி பதவியேற்றதில் இருந்தே பரபரப்பும் சர்ச்சைகளும் ஓய்தபாடில்லை.பச்சை பெயிண்ட் ஊட்டி கவர்னர் மாளிகையில் இருந்த பச்சை கலர் பெயிண்ட்டுக்கு பதிலாக, புது பெயிண்ட் அடித்த விவகாரம் முதல், எத்தனையோ அதிருப்தி செயல்பாடுகளில் ஆளுநர் ஈடுபட்டாலும், தமிழக  அரசு அதை பெரிதுப்படுத்தவில்லை.. அதை பற்றி கேள்வி எழுப்பவுமில்லை.

 அண்ணா திராவிட முன்னேற்றத் தலைவர்களும், தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலிவர் அண்ணாமலையும் ஆளுநரை அடிக்கடி சந்தித்து தமிழக அரச பற்ரிய புகார்ப் பட்டியலைக் கொடுத்தன.  புகார்ப் பட்டியலின் பிரகாரம் ஆளுநர் நடவடிக்கை  ல் எடுத்தபோதுகூடதமிழக  அரசை அதை பெரிதுப்படுத்தவில்லை. ஆனால், நீட் தேர்வு விலக்கு மசோதா, 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடுகள் தமிழக அரசை அதிர்ச்சியடைய வைத்தது.

நீட் தேர்வு விலக்கு, 7 தமிழர் விடுதலை விவகாரம் ஆகியன திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல்வாக்குறுதிகளில் முதன்மைப்படுத்தப் பட்டன. அவைபற்றி ஆளுநர் ரவி நடவடிக்கை எடுகாத்ததால் அந்தவிவகாரத்தை தமிழக அரசு கையில் எடுத்தது.

நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரம் தொடர்பாக ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து, சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பிடிஆரும், முதல்வரும் தொடர்ந்து தங்கள் அதிருப்திகளை வெளிப்படுத்தி கொண்டே இருந்தனர். இரண்டு  விதமான அணுகுமுறைகளை திராவிட முன்னேற்றக் கழகம்  அதிரடியாக கையில் எடுத்தது.. ஒருபக்கம் நீட் தேர்வில் விலக்கு கோரும் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து இங்கு முதல்வர் கோரிக்கை வைத்து கொண்டிருந்தபோது, மற்றொரு பக்கம் ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற விஷயத்தை   நாடாளுமன்றத்தில்  டிஆர் பாலு கையில் எடுத்தார்

"மசோதாக்களை திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது மசோதாவை திருப்பி அனுப்பும் அதிகாரம் குடியரசுத்தலைவருக்கு மட்டுமே இருக்கிறது. அந்த அதிகாரத்தை இவர் எடுத்துக்கொண்டு திருப்பி அனுப்பியுள்ளார். இது ஒரு மோசமான நடவடிக்கை. சட்ட விரோதம்.ஆளுநர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது மத்திய அரசு திரும்ப அழைக்க வேண்டும்" என்று மக்களவையில் டிஆர் பாலு முழங்கினார்.  இதற்கு அடுத்தபடியாக, ஆளுநரின் அதிகாரத்தில் திருத்தம் செய்ய வலியுறுத்தி, தனி நபர் தீர்மானத்தை திமுக எம்பி வில்சன் தாக்கல் செய்திருந்தது அடுத்தக்கட்ட எதிர்ப்பு நகர்வாக இருந்தது.ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொண்டு வந்தது உச்சக்கட்ட எதிர்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

ஆளுநர் ரவி இதற்கு பிறகு, கல்வி விவகாரங்களில் தன் நிலைப்பாட்டை ரவி வெளிப்படுத்தினார்.. அதாவது, தமிழக அரசின் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் ரவி திகழ்கிறார்.. இதற்கு முன்பு தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டத்தில் பங்கேற்ற ஆளுநர், தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் என்று பேசியதாக செய்திகள் வந்தன.. இதுவே அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியது.. குறிப்பாக, தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான கொள்கை நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தொடர்ச்சியாகக் கூறிவரும் திமுக அரசு, தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், இந்திய ஒன்றியத்தின் வளர்ச்சியே முக்கியம் என்றார்.இன்றைய மிக முக்கிய காலத்தில் நம் நாடு அனைவரின் வளர்ச்சியையும் உள்ளடக்கி ராமராஜ்யத்தை நோக்கி முன்னேறி வருகிறது" என்று ஆளுநர் ரவி பேசியது தமிழக கட்சிகளை கொதிப்படைய வைத்துள்ளது.

இந்த நிலையில்  ஆளுநரின்  தேநீர் விருந்து புறகணிப்பு அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானாவில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் முதல்வர் கே சந்திரசேகர ராவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது போலவே தமிழ்நாட்டிலும் ஆளுநருக்கும் ஆளும் தரப்பிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்பின் பல்வேறு அரசு விழாக்களில் தமிழிசை புறக்கணிக்கப்பட்டார். புறக்கணிப்பு தமிழிசையை அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் கேசிஆர் தொடர்ந்து புறக்கணித்தார். இதை பற்றி தமிழிசை புகார் அளித்தும் கேசிஆர் கண்டுகொள்வதாக இல்லை. அங்கு ஆளுநர் உரை இல்லாமலே பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் நடைபெற்றது. பின்னர் நடந்த பல்வேறு கூட்டங்களில் தமிழிசை புறக்கணிக்கப்பட்டார்.முழுகு மாவட்டத்தில் நடந்த சமக்கா சரலக்கா விழாவில் தமிழிசை கலந்து கொள்ள சென்றார். அப்போது அவரை அழைக்க அரசு,அதிகாரிகள், போலீஸ் தரப்பில் இருந்து யாரும் செல்லவில்லை. செல்லவில்லை அதோடு தமிழிசை தெலுங்கானாவில் செல்ல போக்குவரத்து வசதியும் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை. அதோடு ஆளுநர் தனது மாளிகையில் விருந்து ஒன்றை உகாதியை முன்னிட்டு கொடுத்தார். இந்த உகாதி விருந்தை மொத்தமாக ஆளும் கட்சி புறக்கணித்தது. ஆளுநரை சந்திக்க முடியாது என்று கூறி ஆளும் தரப்பு இந்த விருந்தை புறக்கணித்தது. இதை பற்றித்தான் டெல்லியில் பிரதமர் மோடியிடம் ஆளுநர் தமிழிசை நேரடியாக புகார் வைத்தார்.

ஆளுநருடன் மோதுவதற்குரிய நேரத்தை  தமிழக முதல்வர் ஸ்டாலின்  தேடிக்கொண்டிருந்தபோது நீட், 7 தமிழர் விடுதலை விவகாரம் உட்பட 11 தீர்மானங்ளை ஆளுநை கிடப்பில் போட்டது  ஆகியன கைகொடுத்துள்ளன.

தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்க போவதில்லை என்று ஆளுநருடனான சந்திப்பு பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்துள்ளார். தெலுங்கானாவில் உகாதியின் போது தமிழிசைக்கு நேர்ந்த அதே சம்பவம் இங்கு தமிழ்நாட்டில் ஆர். என் ரவிக்கு தற்போது நேர்ந்துள்ளது. ஆனால் ஒரே விஷயம் அங்கு தமிழிசைக்கு போதிய அளவில் மரியாதையை தரப்படவில்லை. விருந்துக்கு வரவில்லை என்று யாரும் தமிழிசையிடம் மரியாதைக்கு கூட தெரிவிக்கவில்லை. தமிழ்நாடு ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இல்லை. அழைப்பு விடுத்தவர் என்ற மரியாதைக்காக ஆளுநரை நேரில் பார்த்து நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டோம் என்று திமுக தெரிவித்துள்ளது.

 நீட் விவகாரத்தில் ஆளுநர் ரவிக்கு நெருக்கடிர் கொடுக்கும் வகையில் திமுக இந்த முடிவை எடுத்துள்ளது. இது ஆளுநர் ரவி - தமிழ்நாடு அரசு இடையிலான உறவில் பெரிய விரிசலை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.

ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள மாட்டோம் என திமுக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி  ஆகியன அறிவித்தன.  திராவிட முன்னேற்றக் கழ்கக்  கூட்டணியில் இல்லாத பாட்டாளி மக்கள் கட்சியும் தேநீர் விருந்தைப் புறக்கனித்தது.

ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவி தலைமையில் நடந்த‌தேநீர் விருந்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை கலந்துகொண்டன.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார் ஆர்.என்.ரவி. 2014 ஆம் ஆண்டு நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சில் குழுவுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தராக செயல்பட்டார் ஆர்.என்.ரவி. பின்னர் மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

நாகாலாந்து ஆளுநராக இருந்தபோது அந்த மாநில மக்களுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி அவருக்கு நாகா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனை காரணம் காட்டி அவரை தமிழ்நாடு ஆளுநராக நியமனம் செய்யக்கூடாது என திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆளுநராக பொறுப்பேற்றார்.

தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு நேரடியாக மோத்தத் தொடங்கியதால் தமிழக்ச் அர‌சியல் சூடு பிடித்துள்ளது.

No comments: