ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10வது லீக் ஆட்டம் புனேயில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. நானயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வென்ற டெல்லி அணி, முதலில் பந்துவீச முடிவு செய்தது.
களம் இறங்கிய குஜராத் துவக்க வீரர் மேத்யூ வேட், ஒரு ஓட்டம் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்றொரு துவக்க வீரர் ஷுப்மான் கில் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். 32 பந்துகளில் அரை சதம் கடந்த அவர், தொடர்ந்து டெல்லி அணியின் பந்துவீச்சை சிதறடித்து ஓட்டங்கள் அடித்தார்.
மறுமுனையில் விஜய் சங்கர் 13 ஓட்டங்கள், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 31 ஓட்டங்கள் சேர்த்தனர். வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி
குஜராத் அணியின் துவக்க வீரர் ஷுப்மான் கில் 46 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 84 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ராகுல் தெவாட்டியா 14 ஓட்டங்களிலும், அபினவ் மனோகர் ஒரு ஓட்டத்துடனும் பெவிலியன் திரும்ப, குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்கள் சேர்த்தது.
டெல்லி தரப்பில் முஷ்பிகுர் ரஹ்மான் 3 விக்கெட்களையும், கலீல் அகமது 2 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிருத்வி ஷா 10 ஓட்டங்களுடனும், டிம் சீபர்ட் 3 ஓட்டங்களுடம் வெளியேறினர்.
அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் 43 ஓட்டங்கள் அடித்தார். அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களைஇழந்து 157 ரன்கள் எடுத்தது. 14 ஓட்டங்களால் குஜராத் அணி வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் லோக்கி பெர்குசன் அதிகபட்சமாக 4 விக்கெட்களையும் முகமது சமி 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்.
.
No comments:
Post a Comment